First
@followers சோழரின் ரத்த உறவு(பங்காளி) என்ன சாதியினர் என்பதை கூறும் தஞ்சை கல்வெட்டு
—————
சோழர் சாதி நான் தான் என்று ஒவ்வொரு சாதியும் உண்மைக்கு புறம்பாக குழப்பம் செய்து வருகின்றனர். ஆனால் சோழர்கள் என்ன சாதியினர் என்பதற்கு அவர்கள் ரத்த உறவுகள்(பங்காளிகள்) யார் என்பதை சோழர்கள் தாங்களே அழகாக எடுத்துக்காட்டியுள்ளனர்.
இன்றைய தஞ்சாவூர் மாவட்டம் ,பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர்-அத்திவெட்டி இடையில் உள்ள செளந்தரேஸ்வர் கோவிலில் கிடைத்த இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்து( கி.பி 1061ம் ஆண்டு கல்வெட்டு)
இக்கல்வெட்டு செய்தியில் பெரியான் அழகிய பெருமானான சோழகங்கன்” என்பவன் அகம்படி பற்று எனும் படைப்பிரிவில் இருந்தவர்கள் தாங்கள் வசூலிக்க வேண்டிய வரியை தவிர வேறு வரிகளை வசூலிக்க கூடாது என்றும் அப்படி வசூலிப்பவர்கள் தனது பரம்பரையினன் அல்லன் என்றும் கூறுகிறான்.
இவ்வாறு அவன் கூறுவதில் இருந்து இரண்டு விசயங்கள் தெளிவாகிறது.
1) அகம்படி படைப்பற்றில் இருந்தவர்கள் ஒரே பரம்பரையினர் (அகம்படி எனும் இன்றைய அகமுடையார் சாதியினர்)
2) சோழ கங்கன் எனும் இவன் அகம்படி இனத்தை சேர்ந்தவன் என்பது தெளிவாகிறது.
மேலும் இவன் பெயரில் உள்ள சோழ கங்கன் என்ற பெயர் கொண்டு இவன் சோழர் சார்பாக கங்க அரசர்குரிய பகுதியை( தொண்டை நாட்டை ) சோழர் சார்பாக ஆட்சி செய்தவன் என்பது தெரிகிறது.
இந்த சோழகங்கன்
தொண்டைமண்டலமான பையூர் கோட்டம் எனும் பகுதியை சோழரின் சார்பாக (இராஜப்பிரதிநிதியாக) ஆட்சி செய்தவன். சோழர்கள் காலத்தில் சோழ நாட்டை தாண்டிய சோழர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சோழரின் ரத்த உறவுகளே அரசபிரநிதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பதை சோழர்களே தங்கள் கல்வெட்டில் தெளிவாக கூறியுள்ளனர்.
அதன்படி இந்த சோழ கங்கன் எனும் அகம்படியர் இனத்தவன் சோழர்களின் பங்காளி என்பதும் ஆட்சி உரிமைக்குரியவன் என்பதாலேயே இவனுக்கு சோழர் ஆட்சி பகுதி வழங்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதே கருத்தை சோழர் வரலாறு நூலை முதன் முதலாக எழுதிய நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் வரலாற்று அறிஞர்களும் தங்களது நூலில் உறுதி செய்துள்ளனர்.
சோழ மன்னர்கள் அகமுடையார் சாதியினர் என்பதற்கு 100க்கணக்கான ஆதாரம் உள்ளது. அதில் ஒன்று தான் இது. ஆனால் இது ஒன்றே போதும்.நின்று பேசும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அருமை அருமை அருமை அருமை அருமை
உண்மை தகவல் ஆதாரத்துடன் அருமை பங்கு
நான் உடையார் பட்டம் கொண்ட இந்து அகமுடையார் தொண்டை மண்டலம்