அகமுடையார்களே! வரலாறு மிக முக்கியம் ஏன்?(சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்! மற்றவர…

Spread the love

First
அகமுடையார்களே! வரலாறு மிக முக்கியம் ஏன்?(சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்! மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்!)
——————
அகமுடையார்களில் பெரும்பாலானோர் வரலாற்றை நாம் ஏன் பேசவேண்டும்? வரலாற்றை இன்று பேசுவதால் நமக்கு என்ன கிடைத்துவிடும்? என்று மிகச் சாதராணமாக நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் வரலாறு தான் மிக மிக முக்கியமானது. இதை முடிந்தவரை சுருக்கமாக கூறுவோம்!

மென்மேலும் முன்னேறி செல்வதற்கு-
அகமுடையார்கள் ஓர் காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்த அரசகுடி இனம். இன்று நம்மில் பலர் அந்த உயரத்தை எட்ட முடியாமல் இருக்கின்றோம். அப்படிப்பட்டவர்கள் நமது முன்னோர்கள் தானவர்,வாணர், சேர,சோழ அரசர்களாய் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தோம் என்ற வரலாற்றை அறிவதன் மூலம் நமது முன்னோர்களின் இடத்தை அடைய வேண்டும் .இல்லை அதையும் தாண்டி முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை ,தன்னமிக்கையை வரலாறு நமக்கு கற்றுத்தரும்.

உண்மையை உணர்ந்து ஒன்றாக இணைவதற்கு- இப்போது அகமுடையார்கள் உண்மையை உணர்ந்து ஒன்றாக இணைய ஆரம்பித்து வருகின்றார்கள். இருப்பினும் இன்னும் கூட அகமுடையார்களில் சிலர் தென்மாவட்டம்,வடமாவட்டம்,தஞ்சை பகுதி அகமுடையார் என பிரிந்தே அடையாளப்பட்டு வாழ்கின்றனர்.
ஆனால் வரலாற்றை திரும்பி பார்த்தால் அகமுடையார்கள் அனைவரும் ஒரே முலத்தில் இருந்து ஒரே பகுதியில் இருந்து (சிந்து சமவெளி ) பகுதியில் இருந்து இந்தியா முழுவதும் பரவி இன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம். ஆனால் அகமுடையார்களாகிய நாம் அனைவரும் ஒரே மூலத்தில் இருந்து வந்தோம்,ஒரே பகுதியில் இருந்து பரவினோம் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றுபட வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்!

நமக்கான பங்கை நாமே பெற- அகமுடையார் சமுதாயம் தனிப்பேரினம் ஆகும். அகமுடையார் சமுதாயத்தை சம்பந்தமில்லாத மற்ற சமுதாயங்களுடன் முக்குலத்தோர் என்று உண்மை தெரியாமல் உறவுப்படுத்தும் போது நமக்கான வாய்புகளை மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
இந்த உண்மையை உணர்வதற்கு வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். அகமுடையார்கள் தனிப்பேரினம் ஆகும். நாம் எல்லா சாதிகளுடனும் இணைந்து வாழ வேண்டும் ஆனால் நமது வாய்ப்பை நமது சாதி என்று நினைத்து மாற்று சாதிக்கு தாரை வார்த்து ஏமாளிகளாக இருக்க கூடாது. இதற்கு வரலாற்றை அறிவது மிக அவசியம் ஆகும்!

மண்ணின் மைந்தர்கள் என உணர்த்துவதற்கு-அகமுடையார்கள் பழந்தமிழ்குடி இனம் . நாம் நம் வரலாற்றை தொலைத்தால் நாம் வசிக்கும் பகுதியிலேயே மற்றவர்களுக்கு அந்நியர்கள் போல் தோன்றுவோம். இதற்கு அகமுடையார்களின் தொழுவ வேளாளர் பிரிவே அழகிய உதாரணம். அகமுடையார் சாதியின் உட்பிரிவாகிய தொழுவர் என்பவர்கள் அகமுடையார் சாதியின் பழமையான உட்பிரிவில் ஒன்றாகும். கி.பி 8ம் நூற்றாண்டிலேயே( இன்றிலிருந்து சுமார் 1200 வருடம் முன்பே அகம்படியர் சாதியின் உட்பிரிவாக கழுகுமலை கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது)
இப்படிப்பட்ட தொழுவர் எனும் அகமுடையார் பிரிவினர் ஒரு காலத்தில் தொழுவ வேளாளர் என்று ஆகிய 15ம் நூற்றாண்டில் துளுவ வேளாளர் என்று பெயர் மாற்றம் கொண்டு விளங்கினர். ஆனால் துளுவ வேளாளர் என்ற பெயரில் உள்ள துளுவ என்ற பெயரினை கொண்டு இன்று தமிழ் பேரும் மற்ற சாதிகள் துளுவ வேளாளர் என்போர் கன்னடர்கள் என்றும் தமிழர் இல்லை என்றும் நினைத்து குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர். வரலாற்றை நாம் பேசாவிட்டால் நாமே நாம் வசிக்கும் பகுதியில் அன்னியர்கள் போலவும் ,வந்தேறிகள் போலவும் ஆக்கபப்டுவோம் . ஆகவே வரலாறு அறிவதும் வெளிப்படுத்துவதும் மிகவும் அவசியமானது!

மற்றவர்களால் மதிக்கப்படுவதற்கு- பொது சமுகத்தில் நாம் செய்யும் பங்களிப்பே மற்றவர்களால் ஏற்கப்படுவதற்கும் ,மதிக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 13 % முதல் 15 % வரை இருக்கும் அகமுடையார் இனம்
தான தர்மங்கள், கல்வி நிலையங்கள்,மருத்துவ வசதிகள், கலை ,இலக்கிய பங்களிப்பு, விடுதலை போராட்டம்,மொழிப்போர் என
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் 40% க்கு மேலான பங்களிப்பை செய்துள்ளது.

இத்தகைய வரலாற்றை படித்து அதை பொதுவெளியில் கொண்டு செல்லும் போது தான் மற்ற சமூகத்தினர் அகமுடையார் சமுதாயம் எத்தகைய பாரம்பரியமிக்க சமுதாயம், எத்தகைய உயரிய பங்களிப்பை செய்துள்ளது என்பதை உணர்ந்து எல்லோரும் நமக்கு மதிப்பளிப்பார்கள்,உயரிய இடத்தை வழங்குவார்கள்.இதற்கு நாம் வரலாற்றை வெளிப்படுத்துவது மிக அவசியமாகும்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo