First
@followers சென்னை காந்தி மண்டப வளாக மருதுபாண்டியர் சிலை- ஒன்று கூடி உறவை வளர்ப்போம்!
————————————–
சென்னைக்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் அது அகமுடையார் உறவுகளை இணைக்கும் இணைப்பு நகரமாகவும் திகழ்கிறது.
ஆம் தென் தமிழகம், வடதமிழகம், தஞ்சை டெல்டா உள்ளிட்ட மத்திய பகுதி , கொங்கு பகுதி என தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அகமுடையார் உறவுகளையும் பெரும் எண்ணிக்கையில் ஒரே இடத்தில் காண வாய்ப்புள்ள இடம் சென்னை நகரமாகும்.
அத்தகைய சென்னை நகரத்தில் அகமுடையார்கள் ஒன்று கூட பல்வேறு இடங்கள் இருந்தாலும் சிறப்பான ஓர் இடம் என்றால் அது சென்னை காந்தி மண்டப வளாகத்தில் உள்ள ஐயா மருதுபாண்டியர் சிலை என்றால் அது மிகையில்லை.
எளிதாக கண்டறியக்கூடிய இடம்,பல்வேறு பகுதியில் இருந்தும் போக்குவரத்து வசதி, இயற்கையான சூழல் போன்றவற்றுடன்
ஐயா மருதுபாண்டியரின் பிண்ணனி தரிசனத்துடன் இருக்கும் இடம் அருமையான இடம் ஆகும்.
இச்சிலை சாலையில் அமைந்திருந்தால் நாம் நின்றுவிட்டு சென்றுவிடும் படி இருந்திருக்கும் ஆனால் அமர்ந்து பேசுகின்ற வசதியுள்ள இந்த இடம் நமக்கு இன்னும் உதவும்.
குறிப்பாக பல்வேறு பகுதியில் இருந்து சென்னையில் வாழும் அகமுடையார் உறவுகள் இது போன்ற இடத்தை நம் உறவை வளர்க்க மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாரத்தின் ஓய்வுநாளான ஞாயிற்றுக்கிழமை வாய்ப்புள்ள உறவுகள் இவ்விடம் வந்து ஐயாவை கண்டு தரிசிப்பதோடு ஒருவருக்கொருவர் பழகி உறவை வளர்க்க வேண்டும் .அப்படி செய்தால் நமக்குள் ஒற்றுமை பெருகுவதோடு சமுதாய ஒற்றுமை பன்மடங்காக பெருகும்.
வாட்ஸ்அப் குருப்பை உருவாக்கலாம்
————————-
கிண்டி மருதுபாண்டியர் சிலையில் ஒன்று கூடுவதெற்கென்றே
தனிப்பட்ட ஒர் வாட்ஸ்அப் குருப்பை உருவாக்கலாம். இதில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுகிழமை யார் யார் வர போகிறார்கள் எந்த நேரம் வந்தால் அனைவரையும் சந்திக்கலாம் என்பதை பேசி முடிவெடுக்கலாம்.
ஏற்கனவே கிண்டி காந்தி மண்டபம் மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா குழு (official) என்ற பெயரில் வாட்ஸ்அப் குருப் ஒன்று செயல்படுகிறது.
அந்த குருப்பில் கூட இதே விசயத்தை சாத்தியப்படுத்தலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
உண்மைதான் அண்ணா,38 மாவட்ட உறவுகளையும் ஒரே இடத்தில் சந்திக்கலாம்.
சிறப்பான ஆலோசனை. வரவேற்க தக்கது
மிக்க மகிழ்ச்சி நம் இனம் ஓன்று சேரவேண்டும் .
சிறப்பான தகவல் அண்ணா
Arumai
Supar
மருது சேனை இராணிப்பேட்டை மாவட்டம்
🙏🙏🙏