First
என்னை பற்றி-அகமுடையார் ஒற்றுமை தளத்தை நடத்துபவர் பற்றி
———————————
கடந்த 15 வருடங்களாக அகமுடையார் வரலாற்றை பேசி அகமுடையார் சமுதாயத்தை ஒருங்கிணைக்க முயற்சி செய்து வரும் அகமுடையார்ஒற்றுமை தளம் மற்றும் தற்போது அகமுடையார்மேட்ரி நடத்தும் என்னை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். சிலர் அறியாமல் இருக்கலாம். அறியாமல் இருப்பவர்களுக்காக இங்கே ஓர் சிறு அறிமுகத்தை செய்கிறோம்.
ஏற்கனவே 2017ம் வருடம் இந்த அறிமுகத்தை செய்திருந்தேன். இருப்பினும் அதன் பின் பலவருடங்கள் கழிந்து விட்டதால் இப்போது இருப்பவர்கள் தெரிந்து கொள்வதற்காக மீள்பதிவு.
மேலும் எனது தந்தை, பாட்டனார் புகைப்படங்கள் எனது தந்தையார் திருமண புகைப்படம் ,திருமண அழைப்பிதழ் மற்றும் எனது சாதி சான்றிதழையும் இப்பதிவில் இணைக்கின்றோம்.
பெயர்: மு.சக்திகணேஷ்
பிறந்த ஊர்: திருமங்கலம்(மதுரை)
தந்தை: அமரர் திரு. முனியான்டி சேர்வை(அகமுடையார்) கடுமையான உழைப்பாளி, நேர்மையாளர் , இளம் வயதில் கடுமையாக உழைத்து தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து ஆளாக்கியவர். பாசத்தால் குழையக்கூடியவர், பகைவனுக்கும் அருளும் நன்நெஞ்சை கொண்டவர் ,பெரும் பண்பாளர்.
தந்தை வழி தாத்தா – அமரர் மாயன் சேர்வை(அகமுடையார்) பூர்வீக ஊர்: வல்லந்தை ,கமுதி
தந்தை வழி பாட்டி (அப்பத்தா) – அமரர் வெள்ளையம்மாள்(அகமுடையார்) பூர்வீக ஊர்: வீரசோழன், விருதுநகர் மாவட்டம்
தாய் வழி தாத்தா – அமரர் கம்பரன்பர் இராஜி சேர்வை(அகமுடையார்) பூர்வீக ஊர்: திருமோகூர்
தந்தை வழி பாட்டி (அப்பத்தா) – மீனாட்சி அம்மாள் (அகமுடையார்) பூர்வீக ஊர்: காரைக்குடி
எனது தந்தை வழிப்பாட்டனார் திரு.க.மாயன் சேர்வை( அகமுடையார்) எளிய பின்புலத்தைக் கொண்டவர் ஏற்கனவே சொன்னபடி கமுதி வல்லந்தை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆனால் பல காலம் முன்பு தற்போது வசிக்கும் திருமங்கலத்தில் வந்து தங்கிவிட்டவர். எனினும் தனது பூர்விக ஊரில் உள்ள தெய்வத்தின் பெயரான முனியான்டி சுவாமியின் பெயரையே எனது தந்தைக்கு பெயராக வழங்கினார். குறிப்பிட்ட ஊரில் எங்களுக்கு உறவினர்களும் பரம்பரை நிலமும் உண்டு!
எமது தாய்வழிப் பாட்டனார் வே.இராசு சேர்வை(அகமுடையார்) இவர் இவரது தந்தை காலத்தில் திருமங்கலம் நகரில் வந்து குடியேறியவர். திருமங்கலம் நகரில் பல கோவில்கள்(பெருமாள் கோவில்,முனீஸ்வரன் கோவில்,செந்திலாண்டவர் ஆசிரமம்) அமைவதற்கு காரணமாக விளங்கியவர் ,திருமங்கலம் நகரின் ஆன்மீகத் தந்தை என்றும் அறியப்பட்டவர் (இவரைப் பற்றி நாளிதழில் வெளிவந்த செய்தியை கீழே உள்ள படத்தில் படிக்கலாம் )
மேலும் இவரது இலக்கிய,ஆன்மீக பாடல்,சொற்பொழிவுகள் போன்றவற்றைப் பாராட்டி காரைக்குடி கம்பன் கழகத்தாலும் ,ஆதினத்தாலும் கம்பரன்பர் என்ற விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டவர்.
இவ்வாறான பின்புலத்தில் திருமங்கலத்தின் பிரபல அகமுடையார் குடும்பங்களில் ஒன்றில் மு.சக்திகணேஷ் ஆகிய நான் திரு.முனியான்டி சேர்வை(அகமுடையார்) -பழனியம்மாள் தம்பதியருக்கு மதுரையை அடுத்த திருமங்கலத்தில் கடைசி மகனாகப் பிறந்தேன். எனக்கு
அகமுடையார் சாதியில் சேர்வைப் பட்டமும் பிரிவில் இராஜகுல அகமுடையார் என்றும் வழங்கப்படும் ( அகமுடையார்களில் அனைவருமே அரசமரபு என்பதையும் நினைவில் கொள்க)
படிக்க
எனது தந்தை வழிப் பாட்டனார் வழியில் கமுதி வட்டம், வல்லந்தை,வீர சோழன்,இராமநாதபுரம் ,மண்டபம் கேம்ப் ,மண்டபம், சிவகங்கை,சின்னமனூர் போன்றவற்றில் எமக்கு உறவுகள் உண்டு!
எனது தாய்வழிப் பாட்டனார் வழியில் திருமோகூர் ம் காரைக்குடி,மானாமதுரை ,திருச்சி,மதுரை ,சோழவந்தான்,வாடிப்பட்டி பகுதிகளில் உறவினர்கள் உண்டு .
எனது சகோதரிகளின் திருமண உறவுகள் வழியாக விருதுநகர்,வாலாந்தரவை,வடுவூர்,உச்சிப்புளி ,சிவகங்கை,மானாமதுரை,தஞ்சாக்கூர் போன்றவற்றில் உறவினர்கள் உள்ளனர்.
பதிவில் இணைத்துள்ள புகைப்படங்களும்-தகவல்களும்
——————————–
புகைப்படம் 1 -எனது ஆதார் கார்டு ( ஆதார் எண்ணும் , பிறந்த தேதியும் பிரைவசிக்காக மறைக்கப்பட்டுள்ளது)
புகைப்படம் 2- எனது சாதிச் சான்றிதழ்
புகைப்படம் 3-எனது தந்தை திரு.முனியான்டி சேர்வை(அகமுடையார்) அவர்களது புகைப்படம்
புகைப்படம் 4 : எனது தந்தை திரு.முனியான்டி சேர்வை (அகமுடையார்) அவர்களுடன் நான்(மு.சக்தி கணேஷ்) ஓர் நிகழ்வு ஒன்றில்(15 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம்)
புகைப்படம் 5- திருமங்கலம் வரலாறு பற்றி பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியான போது எம் பட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை அவர்கள் பற்றி வெளியான தகவல்கள்
புகைப்படம் 6- பாட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை அவர்களின் நினைவஞ்சலி விளம்பரம்
புகைப்படம் 7 – -எனது தாய் வழிப்பாட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை- மற்றும் பாட்டி( அம்மாச்சி ) மீனாட்சி அம்மாள் அவர்களுடன்நானும் சேர்ந்து 2000 வருடத்தின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்
புகைப்படம் 8.9- எமது தாய் தந்தை திருமண அழைப்பிதழ்
புகைப்படம் 10 – எமது தாய் தந்தையர் திருமண விழாவை தலைமேயேற்று நடத்தி உரையாற்றிய திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர் (அகமுடையார்) – இவர் எங்களது தாய் வழி பாட்டி வழியே உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அப்படியே ராசி நட்சத்திரம் ஜாதகம் போட்டா வரண் பாக்க வசதியா இருக்கும்.
Great
Super 👍
,,👍👍👍👍
Arumai