First
மகாபலி வழியினனாக கூறப்படும் மருதுபாண்டியர்
——————————–
3000 வருடங்களும் மேலான அரசாட்சி செய்த வாணர் குலம் என்பது அகமுடையார்கள் சமுதாயத்தாரால் உருவானது என்பதற்கு நேரடி கல்வெட்டு சான்றுகள் மட்டுமல்ல, பல்வேறு செப்பேடுகள், பண்பாடு .குலதெய்வம் , கூட்டப்பெயர் என கி.மு வில் ஆரம்பித்து இன்று வரை தொடர்சியாக பல்வேறு ஆவணங்கள் சாட்சியாக உள்ளன. இதில் பலவற்றை ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.
பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை வெப்சைட்டில் பார்த்துக்கொள்ளலாம்.
https://www.agamudayarotrumai.com/t/mavali-vanar-maveli-vanathirayar/
சரி இப்போது இக்கட்டுரைக்கு வருவோம்.
வாணர்கள் தங்களை மகாபலியின் வழியில் வந்ததாக 1000க்கும் மேற்பட்ட இடங்களில்( கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,இலக்கியங்களில் ) குறித்துள்ளனர்.
இப்படிப்பட்ட மகாபலி சக்கரவர்த்தி ,ஆரியக்கடவுளான விஷ்ணுவால் ( வாமன அவதாரத்தில்) பூமிக்கு அடியில் பாதாள உலகத்திற்குள் அனுப்ப்பட்டார் என்பதை நிறைய பேர் அறிந்திருக்கலாம்.இவ்வாறு பாதாளத்திற்கு அனுப்பட்ட மகாபலி சக்கரவர்த்தி வருடத்தின் ஓர் நாள் பாதாளத்தில் இருந்து பூஉலகத்திற்கு தனது மக்களை சந்திக்க வரும் திருநாளே ஓணம் பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு வாணர் குலத்தவர் அடைக்கபப்ட்ட பாதாள உலகத்திற்கு
ஹிரன்யபுரம் என்று பெயர் விளங்கிற்று ( ஹிரனியன் அல்லது இரணியன் என்பவன் மகாபலியின் முன்னோன் ஆவான். நரசிம்ம அவதாரத்தில் இவனையே விஷ்ணு அழித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன)
இவ்வாறு பாதாளத்தில் வைக்கப்பட்டாலும் அரசகுடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் மகாபலி பாதாள வேந்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆதாரம்: வானரவீர மதுரை புராணம் ,பாடல் எண்: 281
பெரிய புராணம் பாடல் எண்: 623
பார்க்க இணைப்பு : 1,2
இவ்வாறு பல்வேறு தரவுகள் வழியாகவும் மகாபலி வழிவந்த வாண அரசர்கள் பாதாள வேந்தர் என்றும் பாதாள வீரர் என்றும் பணிவேந்தர் என்றும் அழைக்கப்பட்டதையும் தெரிந்துகொள்ளலாம். பணி என்பதற்கு பாம்பு என்ற பொருளும் உண்டு.பாம்பு என்பதும் பாதாளத்தில் வசிப்பவை என்பதையும் இங்கு நினைவில் வைத்துக்கொள்க.
ஓலைச்சுவடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்ட தனிப்பாடல் இலக்கியங்களை தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் அரசு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 1960ம் ஆண்டு தனிப்பாடல் திரட்டு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் மருதுபாண்டியர் பற்றி பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. புலவர் இப்பாடல்களை மருதுபாண்டியரிடம் பரிசில் பெற பாடிய பாடல் என்பதை இப்பாடலை பார்த்தாலே தெரிவதாலும் ,பாடலின் இலக்கிய நடையும் இப்பாடல் இயற்றப்பட்ட காலம் மருதுபாண்டியரின் சமகாலம் என்று நன்றாக தெரிகிறது.
அப்படி மருதுபாண்டியரை குறிப்பிடும் பாடல் ஒன்றில் (பாடல் எண் : 529ல்
பார்க்க இணைப்பு :3
மருதுபாண்டியரை ” பாதாள தீரனாம் மருதுபாண்டிய ராச சுகுணகாண்டீபன்” என்றும் மற்ற வகையிலும் புகழ்ந்திருப்பதை காணமுடியும்.
இதில் முக்கியமாக மருதுபாண்டியரை பாதாள தீரன் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்கலாம். அதென்ன பாதாள தீரன் ,மருதுபாண்டியர் என்ன பாதாளத்தில் சென்று சன்டையிட்டாரா என்ன? இல்லை என்று நமக்கே தெரியும் புகழ்வதற்காக குறிப்பிடுவதென்றால் வேறு எதை எதையோ குறிப்பிட்டுருக்கலாம். சம்பந்தமே இல்லாமல் மருதுபாண்டியரை பாதாளத்துடன் ஏன் ஒப்பிட வேண்டும். ஏனென்றால் இது மருதுபாண்டியர் செய்த செயலை குறிப்பிடவில்லை.மருதுபாண்டியரின் முன்னோர்கள் (குலத்தை) குறிப்பிடுவதாகும் . ஆம் ஏற்கனவே மகாபலி வழிவந்த வாணர் குலத்தவரை பாதாள வீரர் ,பாதாள வேந்தர் என்று குறிப்பிடுவதை கவனித்தோம் அல்லவா? அதன் அடிப்படையில் மருதுபாண்டியரையும் மகாபலி வழிவந்த வாணர் குலத்தவன் என்று குறிக்கவே மருதுபாண்டியரையும் பாதாள தீரன் என்று குறிப்பிட்டுள்ளதை உணர முடியும் (இருப்பினும் இதை வேறு சில ஆதாரங்கள் மூலம் இதை உறுதி செய்துகொள்ளலாம்)
உதாரணமாக
சிவகங்கை வரலாற்றை கூறும்
சிவகங்கை சரித்திர கும்மி எனும் பாடலில் ஒவ்வொரு படைகளும் அவரவர் சார்ந்த குடிகளுடன் வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சிறுவயல் நாகலிங்கம் சேர்வை, திருப்பத்தூர் வயிரவன் சேர்வை ,மானாமதுரை நாகலிங்கம் போன்ற அகமுடையார்களுடன் மாவெலி வாணன் அவர்களுடன் மருதுசேர்வை வேந்தன் சனம் வரவே என்று மாவெலி வாணனுடன் மருதுபாண்டியர் இணைந்து வந்த செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஆகவே இதில் இருந்தும் மாவெலி வாணர் மருதுபாண்டியர் ஒரே குலத்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம். அதுவும் மாவெலி வாணனை குறிப்பிடும் போது மானாமதுரை நாகலிங்கத்துடன் அடுத்து குறிப்பிடுவது மாவலி வாணன் மானாமதுரையை சேர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆகவே மருதுபாண்டியர் பாதாள வீரன் என்று குறிப்பிட்டது மருதுபாண்டியரும் வாணர் குலத்தவர் என்பதன் அடிப்படையில் தான் என்பதை புரிந்துகொள்ளலாம்.
மேலதிக தகவல்கள்
மானாமதுரை என்கிற ஊரே வானர் குலத்தவரின் பெயரில் அமைந்த ஊராகும் ( வானர வீர மதுரை= மானாமதுரை)
மேலும் இதே ஊரில் சுந்தரத்தோள் மாவலி வாணாதிராயர் காலத்தில் அவருக்கு கட்டுப்பட்டு அவர் குலத்தவரான ராக்கப்ப ராசா என்பவர் அரண்மனை கட்டி ஆட்சி செய்த தகவல் செப்பேடு ஒன்றின் மூலம் தெரிய வருகின்றது.
இராக்கப்பராசர் மானாமதுரையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மண்டபமும் கட்டி தந்துள்ளார் மேலும் கோவிலுக்கு ஊர்களை தானமாக வழங்கியுள்ளார்.
ஆதாரம்: நூல் : வாணாதிராயர்கள் ,பக்கம் எண் 158,159 ஆசிரியர்: வேதாச்சலம்
குறிப்பிட்ட இந்த மாரியம்மன் கோவில் மானாமதுரையின் கன்னார தெருவில் முத்து மாரியம்மன் கோவில் என்ற பெயரில் வழங்கி வருகிறது.
மானாமதுரை பகுதியில் வசித்த
கன்னடர்கள் வணங்கிய தெய்வமான இந்த முத்து மாரியம்மனை அகமுடையார்கள் ராக்கப்ப ராசா எனும் வாணர் குலத்தவர் மூலம் பெற்று பல்வேறு ஊர்களில் வழிப்பட்டு வருகின்றனர் (நேற்று கூட பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் எனும் அகமுடையார்கள் மட்டுமே வசிக்கும் ஊரில் அகமுடையார் சமுதாயத்தவர் வழிபடும் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வீடியோவை வெளியிட்டுருந்தோம்)
மேலும் இந்த ராக்கப்ப ராசர் என்ற இந்த வாணர் குலத்தவர் பெயரும் அகமுடையார்களின் முக்கிய குலதெய்வமாக விளங்கும் ராக்காயி அம்மனின் பெயரால் உருவானதாகும். தென்மாவட்டத்தின் பெரும்பாலான அனைத்து அகமுடையார் கோவில்களிலும் இராக்காயி அம்மன் என்பது கோவிலில் முதற் தெய்வமாகவோ அல்லது பரிவார தெய்வம்( உறவு தெய்வமாகவோ) வைக்கப்பட்டிருக்கும் . அழகர்கோவில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி செய்த மானாமதுரை ஊரிலும் ராக்காயி அம்மனுக்கு வாணர் குல வாணாதிராய அரசர்கள் கோவில்களை ஏற்படுத்தியுள்ளனர். ராக்கப்பன் ,இராக்காயி ,இருளாயி என்பதெல்லாம் தென்மாவட்ட அகமுடையார்கள் முன்பு தங்கள் குலதெய்வத்தின் அடிப்படையில் வைத்த பிரபலமான பெயர்களாகும்.
பணி எனும் நாகர் குலத்தவர்-தொண்டைமான் தொடர்பு
————————————–
மணிமேகலை கூறும்செய்தி:
புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது.
நாகநாட்டை வளைவணன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் மனைவி வாசமயிலை. இருவருக்கும் பிறந்த மகள் பீலிவளை. இவளுக்கும் சோழ அரசனுக்கும் பிறந்தவனே தொண்டைமான் இளந்திரையன்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது:
இக்கதையில் வரும் வளைவணன் எனும் பெயர் வளைவாணன் என்பதன் திரிபு ஆகும்.
தொண்டைமான் என்போர் யார் .இவர் யாருமல்ல சோழர் குலத்திற்கும் வாணர் குலத்திற்கும் பிறந்தவர்கள் தான்.
இலங்கை வரை இவர்கள் ஆட்சி பரவியிருந்தது. இலங்கையிலும் மாவலி கங்கை இருப்பது இதை உணர்த்தும் இலங்கையில் தானவ குலத்தை சேர்ந்த இராவணாகிய இலங்கேஸ்வரன் ஆட்சி செய்தான்.
தமிழ்நாட்டின் தொண்டைநாடும் 2000 வருடங்களுக்கு முன்பு இருந்து வாணர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது . தொண்டை நாட்டு பகுதியை கி.மு முதல் கி.பி 15ம் நூற்றாண்டு வரை அகமுடையார்கள் ஆட்சி செய்துள்ளனர். நாகர்களுக்கு அருவாளர் என்ற பெயரும் இவர்கள் ஆட்சி செய்த நாடு அருவாநாடு என்றும் அழைக்கப்பட்டது .
தொண்டைமான்கள் இன்றைய அகமுடையார் சாதியினர் என்பதற்கு இதுவரை 10க்கும் மேற்பட்ட நேரடி கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இதையெல்லாம் மற்றொரு பதிவில் விரிவாக விளக்க இருக்கின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சிறப்பான பதிவு
சிறப்பு…..மிகச்சிறப்பு.