First
அகமுடையார் சாதியை கள்ளர் மறவர் சாதியுடன் சேர்த்து தேவர் என்ற பட்டத்தின் பெயரில் புதிய சாதி பெயரை கொடுத்து சாதிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் தேவர் அரசாணைக்கு எதிராக
வீரப்பேரரசு மருதுபாண்டியர் பேரியக்கம் எழச்சி இயக்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் வரைந்துள்ள திரு.களஞ்சியம் அகமுடையார் அவர்களுக்கு அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அகமுடையார் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது பிரிந்து கிடக்கும் நமது இயக்கங்களை ஒன்றிணைத்து. நமது வருங்கால சந்ததியினர்கள் வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அரசியல் சூழ்ச்சியாளர்களின் இச்செயலினை எதிர்த்து நமது இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உங்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி போராட வேண்டுகிறேன்.
நாம் தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தை ஒற்றுமையாக அணுகி நமக்கான சலுகைகளை அரசுகளிடமிருந்து பெறமுடியும்.
அந்த ஆணையத்தின் துணையுடன் மட்டுமே நமக்கான தனி இட ஒதுக்கீட்டினை மற்றும் இதர சலுகைகளைப் பெறமுடியும்.
தேவரின அரசாணை பற்றியும் நாம் இப்பொழுதே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகவேண்டும்.
ஏனெனில்,தமிழக அரசு சட்டரீதியாக தேவரின அரசாணையை மத்திய அரசிடம் தள்ளிவிட்டது.
ஆக,உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டிஸ் வழங்கலாம்,அப்போது,மத்திய அரசு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் ஆலோசனைகளைக் கேட்கும்.
ஆக,நமது எதிர்ப்பினைத் துரிதமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பிடவேண்டும்.
அகம்படியர் தனித்த அரசியலை விரும்பும்,நமது சமூக வழக்கறிஞர்களைத் துரிதப்படுத்தவேண்டும்.
அருந்ததியர் சமூக உள் இட ஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டு,தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுவர் அமர்வு
அதனை உறுதி செய்துள்ளது.
மேலும்,உள் இட ஒதுக்கீட்டினை வழங்க மாநில அரசுக்கு அதிகாரமுள்ளதாக செய்தி படித்தேன்,அதுபற்றிய முழு விவரம் தெரியவில்லை.
நமக்கான இடம் காத்திருக்கும் வேளையில்,நாம் ஓரடி நகரக்கூட முயற்சிகளெடுப்பதில்லை.
வடக்கு,தெற்கு,டெல்டா,கொங்கு மண்டல அகம்படியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து,தொடர் செயற்பாடுகளால் மட்டுமே மத்திய,மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க முடியும்,சிறு முயற்சியான தற்போதைய அகம்படியர் எழுச்சியைத் தடுக்கவே வஞ்சகம் உள்பாய்கின்றது.
சட்டரீதியாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
கரைசேர வெகுதூரமுண்டு.
நன்றி!