சங்ககால பெண் தெய்வங்கள் அழிந்தது எப்படி? -யூடிப்பில் நான் செய்த கமேண்ட் வழியே நம…

Spread the love

First

சங்ககால பெண் தெய்வங்கள் அழிந்தது எப்படி? -யூடிப்பில் நான் செய்த கமேண்ட் வழியே நமது வரலாறு
———————————

யூடிப்பில் நான் பார்க்கும் வீடியோக்களில் நான் செய்த கமேண்ட்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

குறிப்பு:
இந்த வீடியோவில் அகமுடையார் சமுதாயத்தை பற்றி பேசப்படவில்லை ,வீடியோவில் பேசுபவரும் நம் சமுதாயத்தவர் இல்லை. பொதுவாக நான் பார்க்கும் வீடியோவில் உள்ள கருத்துக்கள் வழியே நான் சொல்லும் அகமுடையார் சம்பந்தமான மற்றும் பொது வரலாற்று செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த புதிய முறை .ஆகவே விருப்பமுள்ளவர்கள் இப்பதிவில் உள்ள வீடியோவை பார்க்கலாம் அல்லது நமது கமேண்டை படித்து மட்டும் வரலாற்றை மெல்ல மெல்ல புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

நான் செய்த கமேண்ட் கீழே
—————–

நல்ல ஆய்வு ஆனால் சில குறைகள் மட்டும் உள்ளன. பெண் தான் குழந்தையை வளர்ப்பவள் அவளுக்கே குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தலும் அவர்களுக்கு சொல்லித்தரவும் முடியும் .தாய் தான் குழந்தைக்கு மொழியை அறிவிக்கிறாள். மொழியை தாய்மொழி என்று கூறுவதும் இதனால் தான் , 6000 வருடங்கள் முன்பு ஆணும் ,பெண்ணும் இணைந்து வேட்டையாடினர், போருக்கு சென்றனர் .அவ்வாறு வேட்டைக்கு செல்லும் போது முதியவர்களிடத்தில் குழந்தைகளை ஒப்படைத்து செல்வர் சங்க இலக்கியங்களிலும் முதியாள் ,முதுமகள் என்ற பதம் இந்த உறவின் எச்சம் ஆகும். இந்த பொது வழக்கம் (எல்லா குடும்பங்களும் முதுமகளிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்து தாங்கள் வேட்டைக்கு செல்லும் வழக்கம்) சிதைந்த பின்னரும் முதுமகளிர் அரசகுடும்பத்தினரின் குழந்தைகளை மட்டும் பேணும் வழக்கம் தொடர்ந்தது. இவர்களை முதுமகளிர் என்றும் தாய் தோழி மரபினர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

இப்படியே செல்கையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் வேட்டையாடுதலும், குழுவிற்கு தலைமையேற்றலும் முடிவுற்றிருந்தது. சம்பந்தப்பட்ட அந்தந்த தாய்மார்களே குழந்தைகளை பேண ஆரம்பித்தனர் , இதனால் அவர்கள் வேட்டையாடுதலுக்கும்,போருக்கு செல்வதும் இல்லாமலே போயிற்று. பெண்கள் உணவு சேகரித்தல், காட்டு விவசாயம் செய்யுதல், உடை தயாரித்தல் ,குழந்தைகளை பேணுதல் என்பதோடு நிறுத்திக்கொண்டனர். 3000 வருடங்களுக்கு முன்பு தாய் தெய்வ வழிபாடே இருந்தது. பெண்களே குழந்தைகளை உற்பத்தி செய்ய காரணம் என்பதால் பெண்களின் பிறப்புறுப்பை தெய்வமாக கொண்டாடும் மரபும் இருந்தது. ஆனால் பின்னாளில் ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெறமுடியாது என்பது தெரிந்த பின்பு அது ஆண்களின் ஆண்,பெண் இணைந்த வழிபாடாக (ஆண்,பெண் பிறப்புறுப்பை வழிபடும்) முறையாக மாறியது. இந்தியாவிற்குள் சிந்து சமவெளியின் வழியாக புகுந்த ஆரியர்கள் மண்ணின் மக்களை அசுரர் என்று அழைத்தனர் இந்த அசுரர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்ததால் இவர்களை உருவாக்குவள் பெண் என்பதால் அவளை ராட்சசி என்றும் அரக்கி என்றும் சித்தரித்தனர் ( உதாரணத்திற்கு அகமுடையார்களின் குலதெய்வம் இராக்காயி அல்லது ராக்காட்சி, இருளாயி ,கொற்றவை) போன்றவை அசுர ராட்சதர்களின் தாய் எனவும் அவர்களே ஆரியர் அழியவும் காரணமாக இருப்பவள் என்று கருதி அந்த இறைவடிவங்களை குழந்தைகளை தின்பவர்களாகவும், கொல்பவர்களாகவும் சித்தரித்தனர்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo