நாளை(07 ஜீன்) வாக்ஸ் குழும நிறுவனர் தினம் மற்றும் உதவிகள் வழங்கும் விழா சென்னையி…

Spread the love

நாளை(07 ஜீன்) வாக்ஸ் குழும நிறுவனர் தினம் மற்றும் உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.
——————————–
சென்னை எக்மோர் மற்றும் மடிப்பாக்கத்தில் செயல்படும் சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் திரு.இராவணன் ஞானசுந்தரம் அவர்கள் . இவரின் தந்தை திரு. ஞானசுந்தரம் அவர்கள் சென்னையில் உள்ள தொழில் அதிபர்களில் ஒருவர் . இவர் நிறுவிய வாக்ஸ் குழுமமானது (Vox Group) ரியல் எஸ்டேட் , ஹோட்டல்கள், கைவினை பொருகள், விவசாயம் குவாரி மற்றும் தொழிற்சாலைகள் சம்பந்தபட்ட பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக திரு. ஞானசுந்தரம் மற்றும் அவரது மகனும் சங்கத்தின் தற்போதைய தலைவருமான திரு.இராவணன் ஞானசுந்தரம் அவர்கள் சிறந்த சமுதாய உணர்வு மிக்கவர்கள். இவர்கள் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மருதுபாண்டியர் மண்டம் அமைய 10 கிரவுண்ட் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளார்கள் என்பதோடு இன்னும் பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

2007ம் ஆண்டு வாக்ஸ் குழுமத்தை நிறுவிய திரு.ஞானசுந்தரம் அவர்கள் மறைந்தார். ஒவ்வொரு வருடமும் வாக்ஸ் குழுமத்தின் நிறுவனரை நினைவுகூர்ந்து ஒவ்வொரு வருடமும் ஏழை எளிய மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்த வருடத்திற்கான நிறுவனர் தின உதவிகள் நாளை(07 ஜீன்) அன்று சென்னையில் 17ம் ஆண்டு நிறுவனர் தின விழா நடக்க இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில்

“மாற்று திறனாளிகளின் தாயகம்” என்ற பார்வை குறைபாடுடையோர் உடையோருக்கான அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கு ஶ்ரீபெரும்புதூரில் நிலம் வழங்கப்படுகிறது.

பார்வை குறைபாடுடையோர் தொழில் மேம்பாட்டு மையம் அமைய நன்கொடை வழங்கப்பட உள்ளது.

மேலும் 500க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

1000 ஆண்கள்,பெண்களுக்கு வேட்டி,சேலை வழங்கப்படுகிறது.

2000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது.

மேலும் வாக்ஸ் குழும நிறுவனரின் வாழ்க்கை சம்பவங்களை பின்பற்றி “நிழலாடும் நினைவுகள்” என்ற சுயசரிதை நூலும் வெளியிடப்படுகிறது.

நிகழ்விடம்:
வாக்ஸ் விருட்சம்
எம்எம்ஆர்டி சாலை
கோவிலம்பாக்கம்
சென்னை- 117

வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்த அந்த அகத் தமிழரின் நினைவை போற்றுவோம்!

வாழ்த்துக்களுடன்
அகமுடையார் ஒற்றுமை.





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. இவர் சாய்ராம் கல்லூரியின் தாளாளர் லியோ முத்துவின் அக்காள் கணவர் என்பதும்…எனக்கு நெருங்கிய உறவினரும் ஆவார்…ஆனால் யாருடனும் நான் தொடர்பில் இல்லை…பண்பாளருக்கு நன்றிகள் பல இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்று MGR அவர்கள் பாடியது இவருக்கு பொருந்தும்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo