@followers ஒரிஜினல் டுப்ளிகேட் பார்ப்பதற்கு அகமுடையார் சமுதாயம் அல்வா கடை அல்…

Spread the love

@followers ஒரிஜினல் டுப்ளிகேட் பார்ப்பதற்கு அகமுடையார் சமுதாயம் அல்வா கடை அல்ல! அகமுடையாரில் அனைவரும் ஒன்றே!
———————–
முதன்மை வரலாற்று தரவுகளான கல்வெட்டு செய்திகளில் 1000 வருடங்கள் மற்றும் அதற்கும் முன்னால்
அகம்படி என்கிற இந்த சாதியின் பெயருக்கு பின்னால் முதலி பட்டமே 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் மிகவும் பெரும்பான்மையாக வருகிறது. அதன் பின் தேவன் பட்டம் அதன்பின் ஒன்றிரண்டு இடங்களில் பிள்ளை பட்டம் வருகிறது.

இதுவரை எந்த ஒரு கல்வெட்டு செய்தியிலும் அகம்படி என்ற சாதி பெயருடன் சேர்வை என்ற பட்டம் வரவில்லை.

இப்பதிவு எல்லோருக்குமானது அல்ல! ஏனென்றால் தென் மாவட்ட அகமுடையாரில் பெரும்பாலானோர் வரலாற்று உண்மையை தெரிந்து கொண்டு எல்லா அகமுடையாரும் ஒன்று புரிந்து கொண்டார்கள்.

இப்பதிவு யாருக்கு என்றால்
எதற்கெடுத்தாலும் நாங்கள் இராஜகுலம் தாங்கள் தான் ஒரிஜினல் என்றும் என்று பேசி மற்ற அகமுடையார்களை டுப்ளிகேட் போல நினைக்கும் ஒரு சில தென் மாவட்ட அகமுடையார்கள் தெரிந்துகொள்ள வேண்டும்! திருந்த வேண்டும்!

இதை உங்களை குத்திக்காட்ட சொல்லவில்லை! உண்மையை தெரிந்து கொண்டு உணர்வோடு செயல்படுங்கள்!

இது சில தென்மாவட்ட அகமுடையாருக்கு மட்டுமல்ல! வடபகுதியிலும் அல்லது தஞ்சாவூர் பகுதியிலும் இதே தவறான புரிதலோடு இன்னும் சிலர் இருக்கலாம். அவர்களுக்கும் சேர்த்துத்தான் இப்பதிவு.

அகமுடையார் அனைவரும் ஒன்றே! அகமுடையார் ஒற்றுமை ஓங்குக!

தென்மாவட்ட அகமுடையானாக
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
மதுரை திருமங்கலத்திலிருந்து.

இணைப்பு
அகம்படியரும் அவர்களுக்கு தலைவர்களான அகம்படி முதலிகளும்
வடதமிழகமான இன்றைய விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தேவனூர் திருநாகீஸ்வரமுடையார் கோவிலில் கிடைத்த கி.பி 1290ம் ஆண்டு கல்வெட்டு

ஆதாரம்: ஆவணம் இதழ் 28, பக்கம் எண் 65

வடமாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகமான மதுரை,திருமங்கலம்,உசிலம்பட்டி, மேலூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுக்களும் அகம்படி சாதி பெயருக்கு பின்னால் முதலி என்ற பட்டத்துடன் தான் காணப்படுகிறது.

மேலதிக தகவல்
கி.பி 1600களின் காலத்தின் பின்னால் எழுந்த அகமுடையார் சாதியை சேர்ந்தவர்களை குறிப்பிடும் பல்வேறு கல்வெட்டுக்களில் சேர்வை என்ற பதம் பெருமளவு குறிக்கப்படுகிறது. அகமுடையார்கள் மட்டுமே ஊர்களில் கிடைத்த இந்த கல்வெட்டுக்கள் வழியாகவும்,அந்த கல்வெட்டு குறிப்பிடுபவர்களின் வழியினர் இன்றும் இருப்பதை கொண்டே அக்கல்வெட்டுக்களில் சேர்வை பட்டத்துடன் இருப்பவர்களை அகமுடையார் என்று அறிந்துகொள்கிறோம்.

கி.பி 1733 காலத்திய சிவகங்கை செப்பேடு எனும் செப்பேட்டில்” கோவானூர் ராசபாச அகம்படிய தாரரான வீரப்பன் சேர்வை மகன் சாத்தப்ப ஞானி ” என்று அகம்படி என்ற சாதி பெயருடன் சேர்வை என்ற பதம் குறிப்பிடப்படுகிறது.

மற்றபடி அகம்படி என்ற சாதி பெயருடன் சேர்வை என்ற பட்டத்துடன் எந்த கல்வெட்டும் இதுவரை கிடைக்கவில்லை. இருந்தால் பதிவில் கமேண்ட் செய்து விவாதிக்கலாம்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo