பிரிந்த சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கங்கள் ஒன்றாக இணைந்தது- புதிய தலைவரா…

Spread the love

பிரிந்த சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கங்கள் ஒன்றாக இணைந்தது- புதிய தலைவராக திரு. இராவணன் ஞானசுந்தரம் அவர்கள் பொறுப்பேற்றார்
————————–
சென்னையில் பாரம்பரியமிக்க அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் இடையில் ஏற்பட்ட சில காரணங்களால் பிரிந்து அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்,கல்வி அறக்கட்டளை என்ற பெயர்களில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் அகமுடையார் கல்வி அறக்கட்டளை மடிப்பாக்கத்தின் அப்போதைய செயலாளர் அண்ணன் சேலம் திரு.குமார் அவர்களின் பெரு முயற்சியாலும் தலைவர் திரு. அன்பழகன் அவர்களின் ஒத்துழைப்பின் காரணமாக அகமுடையார்மேட்ரியுடன் இணைந்து வரன் சந்திப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி சென்னை மடிப்பாக்கம் மருதுபாண்டியர் மாளிகையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையேற்று நடத்த வந்த சென்னையில் செயல்பட்டு வரும் வாக்ஸ் குழுமத்தின் (vox Group of Companies) தலைவரும் பெரும் தொழிலதிபருமான திரு. இராவணன் ஞானசுந்தரம் உள்ளிட்ட சமுதாய பெரியவர்களிடம் அகமுடையார் சங்கங்கள் பிரிந்து செயல்படுவது குறித்த விசயம் அண்ணன் சேலம் திரு.குமார் மற்றும் மடிப்பாக்கம் தலைவர் திரு.அன்பழகன் அவர்களின் முயற்சியால் விவாதிக்கப்பட்டது.

அதன் பெயரில் பிரிந்து இருந்த சங்கங்களை ஒன்றாக சேர்க்க முடிவு எடுக்கப்பட்டு அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம், அகமுடையார் கல்வி அறக்கட்டளை ,அகம் கல்வி அறக்கட்டளை போன்றவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு அதன் முதல் தலைவராக திரு. இராவணன் ஞானசுந்தரம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடைபெற்ற தேர்தலில் கல்வி அறக்கட்டளையின் செயலாளராக ஐயா திரு.அன்பழகன் அவர்கள் , பொருளாளராக அண்ணன் சேலம் திரு. வி.எம் குமார் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கட்டுள்ள தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துக்கள்! புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. இராவணன் ஞானசுந்தரம் அவர்களின் தலைமையில் சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கங்கம் சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களும் ,வணக்கங்களும்.

புகைப்பட இணைப்புகள்
1-வாக்ஸ் குழுமத்தின் (vox Group of Companies) தலைவரும் பெரும் தொழிலதிபருமான திரு. இராவணன் ஞானசுந்தரம் அவர்கள்
2- தலைவருடன் , அகமுடையார் கல்வி அறக்கட்டளை செயலாளர் ஐயார் திரு. அன்பழகன் அவர்கள்
3- அகமுடையார் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அண்ணன் சேலம் திரு. குமார் அவர்கள்

குறிப்பு:
மூன்று நாட்களுக்கு முன் வரலாற்று கட்டுரை தொடர்பாக தரவுகளை தேடி, கட்டுரை எழுதி கொண்டிருந்ததால் இச்செய்தியை உடன் வெளியிட முடியவில்லை.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. இறைவன் ஆசியுடன் வாழ்த்துகள்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo