பைந்தமிழ் சித்தர் மாணிக்க நாயக்கர்(அகமுடையார்) அவர்களின் நினைவு நாள் கொண்டாப்பட…

Spread the love

பைந்தமிழ் சித்தர் மாணிக்க நாயக்கர்(அகமுடையார்) அவர்களின் நினைவு நாள் கொண்டாப்பட்டது
——————-
தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும்,” என்று 1931ம் ஆண்டு முதல் குரல் எழுப்பியவரும், அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி நூல் தொகுப்பை வெளியிட்டவரும்
மறைமலையடிகளார் தொடங்கிய “தனித்தமிழ்” இயக்கத்துக்கு மாணிக்க நாயக்கர் புரவலராக இருந்தவரும், மேட்டூர் அணை அமைய காரணமாக இருந்தவருமாகிய சேலம் அகமுடையார் துளுவவேளாளர் குலத்தோன்றல் பைந்தமிழ் சித்தர் மேட்டூர் அணையின் நாயகன் *பா.வே.மாணிக்க நாயக்கர் (அகமுடையார்) * அவர்களின் நினைவு நாளான இன்று (டிசம்பர் 25) *மருது சேனை* சார்பாக நினைவு நாள் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாணிக்க நாயக்கர் படத்துடன் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் படமும் வைத்து மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த சேலம் மேற்கு மாவட்ட தலைவர் அருமை அண்ணன் #திரு_ந_பிரகாஷ்_அகமுடையார் Agri Agro அவர்களுக்கும்சேலம் மேற்கு மாவட்ட , ஒன்றிய,பேரூர் மற்றும் செல்லப்பிள்ளௌகுட்டை ஊராட்சி அத்தனை மருதுசேனை நிர்வாகிகளுக்கும் அகம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

புகைப்படங்கள் உதவி: திரு. அம்பலூர் எழில் இராவணன்
மாநில துணை பொதுச்செயலாளர்
மருது சேனை
(+65)83093303

சில செய்திகள்
இந்நிகழ்வு சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் வட்டாரத்தில் உள்ள
செல்லபிள்ளைகுட்டை ஊரில் நடைபெற்றது.செல்லபிள்ளைகுட்டை ஊரானது மாணிக்க நாயக்கர் பிறந்த பாகல்பட்டி ஊருக்கு மிக அருகில் ( 4 கி.மீட்டரில் ) உள்ள ஊராகும்.

மாணிக்க நாயக்கர் அகமுடையார் சாதியில் நாயக்கர் பட்டம் கொண்டவர். அகமுடையார்கள் விஜயநகர அரசர்களிடம் படைத்தலைவர்களாக(நாயக்கர்) இருந்ததால் இப்பட்டம் இவர்களுக்கு வந்தது .

சேலம் பகுதியில் அகமுடையார்கள் நீண்ட நெடிய காலமாக பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள். மாணிக்க நாயக்கர் பிறந்த சேலம் மாவட்டம் பாகல்பட்டிக்கு அருகில் உள்ள வாழகுட்டபட்டி எனும் ஊரில் அகம்படியார் பெயரில் அகம்படியார் ஏரி அமைந்திருந்ததை குறிப்பிடும் 12ம் நூற்றாண்டு கல்வெட்டு உட்பட பலகல்வெட்டுக்கள் இப்பகுதியில் கிடைத்திருப்பது இந்த உண்மையை உணர்த்துகிறது.
(ஆதாரம் இப்பதிவின் இறுதி 2 படங்களில் இணைக்கப்பட்டுள்ளது)
மற்றொரு பதிவில் சேலம் மாவட்ட அகமுடையார் வரலாறு பற்றி விரிவாக விளக்குகின்றோம்

#பாகல்பட்டி_ஜமீன்
#பா_வே_மாணிக்க_நாயக்கர்
#பாகல்பட்டி
#அகமுடையார்
#துளுவவேளாளர்






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo