First
மாமன்னர் மருதுபாண்டியர் பெயரில் “லயன்ஸ் கிளப் ஆப் மதுரை -மாமன்னர் மருதுபாண்டியர் ” என்ற பெயரில் உருவாக்கியுள்ள நம் அகமுடையார் சொந்தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!
ஆம் மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் பெயரில் சென்ற ஜனவரி மாதம் (ஜனவரி 2017) லயன்ஸ் கிளப்பை உருவாக்கி நல்ல முன்னொடித் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள் நம் அகமுடையார் உறவுகள்! இந்த புதிய அமைப்பிற்கான பதிவு ,நடப்பு பிப்ரவரி மாதம்(பிப்ரவரி 2017) சில நாட்கள் முன் கிடைத்துள்ளதால் இனி வரும் நாட்களில், மருதுபாண்டியர்கள் பெயர் விளங்கும் வரையில் நல்ல பல சமூகப்பணிகளை லயன்ஸ் கிளப்பின் வாயிலாக செய்வார்கள் என்று நம்புகிறோம்,அவர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்!
லயன்ஸ் கிளப் போன்றவை பொதுமக்கள்,நீதித்துறை,காவல் துறை மத்தியில் நல்ல பெயரினைக் கொண்டிருப்பதால் ஆக்கப்பணிகளைச் செய்ய மேற்சொன்னவர்களிடம் எளிதாக அனுமதி பெற்று விட முடியும்.
ஆகவே அகமுடையார் உறவுகள் இது போன்று தங்கள் பகுதியில் மருதுபாண்டியர் மற்றும் இன்ன பிற அகமுடையார் குலத்தோன்றல்கள் பெயரில் லயன்ஸ் கிளப்புகளை உருவாக்கி மக்கள் பணிகளைச் செய்து சமுதாயத்திற்கு எல்லாத் தரப்பு மக்களிடமும் நல்ல பேரை ஏற்படுத்த வேண்டும்!
படத்தில் : லயன்ஸ் கிளப் ஆப் மதுரை -மாமன்னர் மருதுபாண்டியர் அமைப்பின் செயலாளர் அண்ணன் சந்திரன் அகமுடையார் அவர்கள்! அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல விரும்புவோர் தொடரு கொள்ள வேண்டிய எண்கள்: 9842183377, 8248844313 .நன்றி உறவுகளே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்