First
சோழர்களின் உறவினர்களான இரும்புதலை அகமுடையாரும் -அழுந்தூர் வேள் வழிவந்த தமிழவேள் உமா மகேஸ்வரன் அகமுடையாரும்
———————————————————–
அகமுடையார் வரலாற்று முன்னோடி மரியாதைக்குரிய திரு.வீராச்சாமி அகமுடையார் அவர்கள் இன்று நம்மை போனில் அழைத்து சில விசய்ங்களை கூறினார்கள்.
அதிலும் குறிப்பாக
முதலாம் கரிகாலனின் தாய்மாமனான இரும்பிடர்த் தலையார் பற்றி அறிந்திருப்பீர்கள் . இவர் அகமுடையாரில் பிரிவாக இன்றும் இருக்கும் “இரும்புத்தலை அகமுடையார்” பிரிவினைச் சேர்ந்தவர் என்பதுவும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
தற்போது தஞ்சைப் பகுதியில் இரும்புதலை, கரந்தை, மானோங்கோரை போன்ற ஊர்களில் குறிப்பிட்ட இந்த இரும்பு தலை அகமுடையார்கள் செறிந்து வாழ்கின்றனர்.
அந்த குறிப்பிட்ட ஊர்களில் வாழ்ந்த இரும்புத்தலை அகமுடையார்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர் தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்கள் .இவர் ஐந்தாம் தமிழ் சங்கத்தை கரந்தையில் உருவாக்கியவர் என்பது நம்மில் பலரும் அறிந்த செய்தி!
ஆனால் நாம் அறியாத செய்தி என்னவென்றால் குறிப்பிட்ட தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்களின் பெயர்களுக்கு முன்னொட்டாக வரும் தமிழவேள் என்பது இவர்களின் பாரம்பரிய குடும்பப் பெயராகும்.
அதாவது குறிப்பிட்ட உமா மகேஸ்வரனார் சங்க காலத்தில் வாழ்ந்த அழுந்தூர் வேள் எனும் வேளிர் குல சிற்றரசன் வழிவந்த வேளிர் குடியினர் ஆவர் . இது குறித்து சிறு நூல் குறிப்பு ஒன்றினை தமிழவேள் உமா மகேஸ்வரன் அவர்கள் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர் என்று திரு.வீராச்சாமி அகமுடையார் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
சங்ககாலப் புலவர் இரும்பிடத்தலையாரும் குறிப்பிட்ட இந்த அழுந்தூர் வேள் மரபினர் ஆவர். ஏற்கனவே அகமுடையாரில் இரும்புத்தலை அகமுடையார் பிரிவினரே முதலாம் கரிகாழ சோழனின் தாய்மாமனான சங்ககாலப் புலவர் இரும்பிடத்தலையாரின் வழியினர் என்று குறிப்பிட்டு வந்த வேளையில்
தமிழவேள் தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்களும் அழுந்தூர் வேள் மரபினர் என்று குறிப்பிட்டுள்ள நூல் வழியாக மேலும் சோழர்கள் அகமுடையார்களே என கல்வெட்டு ஆதாரங்களை சில வருடம் முன்பே அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிட்டுருந்த நிலையில் “அகமுடையார்களே சோழர்களின் முன்னோர்கள்” என்ற கருத்து தொடர்ந்து வலுப்பெறுகிறது.
குறிப்பு:
வேலைப்பளு காரணமாக முன்பு போல் முழு நேரமாக வரலாற்றுத் தேடல் ,ஆய்வு செய்ய முடியவில்லை.இருப்பினும் அவ்வப்போது இப்பணி தொடரும்.
வேண்டுகோள்
——————
லாக் டவுன் காரணமாக இந்த நூலைப் பெற முடியவில்லை.இந்த நூல் வேறு எவரிடமேனும் இருந்தால் நம் பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் மேசேஜ் செய்ய வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்