First
ஓர் புதிய விதை…!!!
************************************
அறம் வளர்த்து ஆலயம் காத்த போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் ஆன்மீக மற்றும் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாரின் 228 வது குருபூஜை நன்னாலான இன்று,
தஞ்சாவூர் மாநகரில் திருவையாற்றில் புகழ் பெற்ற ஐயாறப்பர் கோவிலில் பச்சையப்ப முதலியார் எழுப்பிய மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலையும் மற்றும் அவரது மனைவி மற்றும் தமக்கையார் திருஉருவ சிலையும் அமைந்துள்ளது…!!!
வரலாற்றில் இன்று முதல் முறையாக மருது சேனை டெல்டா மண்டலம் சார்பில் பச்சையப்ப முதலியாரின் திருஉருவ சிலைக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கோவில் அருகிலே பச்சையப்ப முதலியார் உயிர் நீத்த அவரது வீட்டிலும் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…!!!
ஓர் புதிய விதையை விதைக்க தொடங்கிய இந்த பொன்னான தருணத்தில் சென்னையில் இருந்து அன்னதானம் செய்ய வந்திருந்த பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக நம்முடன் கலந்துக் கொண்டனர்…!!!
அடுத்த ஆண்டு பச்சையப்ப முதலியாரின் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான அகமுடையார் இளைஞர்கள் தஞ்சை திருவையாற்றில் ஒன்று கூடுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை…!!!
என்றும் களத்தில்…!!!
மருது சேனை – டெல்டா மண்டலம்
அகமுடையார் வரலாறு மீட்புகுழு
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்