சமீபத்தில் தம்பி குமரேசன் அகமுடையார் Kumaresan Kumaresan,ஆய்வு நூல்கள் வாங்குவதற…

Spread the love

First
சமீபத்தில் தம்பி குமரேசன் அகமுடையார் Kumaresan Kumaresan,ஆய்வு நூல்கள் வாங்குவதற்கு ரூபாய் 5000 அனுப்பியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே! இவற்றில் ரூபாய் 800க்கு பல அரிய நூல்களை வாங்கிவிட்டோம்!

அரிய புத்தகங்கள் (இவை இன்று பதிப்பில் இல்லை -இன்று இவை வேறு எங்கும் கிடைக்காது) என்பதால் இவற்றை பழைய புத்தகக் கடைகளில் பாதி விலைக்கும் குறைவாக வாங்கி திரு.பாலமுருகன் அகமுடையார்(நிறுவனர் -அகமுடையார் அரண்) அவர்கள் வாங்கி நமக்கு (அகமுடையார் ஒற்றுமை தளத்திற்காக) அளித்தார்கள்.அதற்காய் அவருக்கு எம் உளப்பூர்வமான நன்றிகள்!

இவற்றில் வாழ்வியற் களஞ்சியம் பெரும் தொகுதி – அ வரிசை -தமிழ் இன்சைக்ளோபிடியா- தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் வெளியீடு என்பது பெரும் தொகுதியாகும் பெருமுயற்சியில் உருவான தமிழ் கலைக்களஞ்சியம் இது இன்று வெளியில் விலைக்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

இது போல் நிறைய அரிய நூல்கள் ஏற்கனவே சொன்னது போல் இவைகள் இப்போது பதிப்பிற்கு வராது என்பதால் இவற்றை பெற்றதில் பெருமகிழ்ச்சி! மேலும் வாங்கிய புத்தகங்கள்!

தேடல் பாகம்-5,6 –ஆய்வுக் கட்டுரை தொகுப்பு -தமிழியல் துறை புதுச்சேரி வெளியிடு
பாண்டிய நாட்டில் வைணவக்கோவில்களும் கட்டிடக்கலையும்
தமிழ்நாட்டின் போர்களும் ஆட்சியாளர்களும்
நந்திபுரம்-இரா
விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
தளிச்சேரி கல்வெட்டுக்கள்-இரா.கலைக்கோவன்
காஞ்சிபுரம் மாவட்ட தடயங்கள்- நடன காசிநாதன்
திருபனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்
மாவீரர் மருதநாயகம் முகமது யூசூப்கான்
தமிழ் ஆராய்ச்சியின் புதிய எல்லைகள்-ஆய்வுக் கட்டுரை தொகுப்பு
இதழ்களைத் தாங்கிய இதழ்கள்-கட்டுரை தொகுப்பு

ஆக மொத்தம் தற்போது கிடைத்த 5000 ருபாயில் ரூபாய் 800க்கு இப்புத்தகங்களை வாங்கியுள்ளோம்! இன்னும் ஒருவாரத்திற்குள் மீதமுள்ள பணத்திற்கு ஆய்வேடுகள் ,நூல்கள் மற்றும் புதிய நூல்கள் வாங்கப்படும் வாங்கிய உடன் பதிவிடுகிறேன்.உறவுகளுக்கு நன்றி!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo