அகமுடையார்மேட்ரி இன்று 500 வரன் பதிவுகளை கடந்தது! அகமுடையார் வரன் பதிய வாட்ஸ்அப்…

Spread the love

அகமுடையார்மேட்ரி இன்று 500 வரன் பதிவுகளை கடந்தது! அகமுடையார் வரன் பதிய வாட்ஸ்அப் எண்: 7200507629
—————————————-
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே!
உங்கள் அனைவருக்கும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக முதலில் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட
அகமுடையார்மேட்ரி இன்று 500 வரன் பதிவுகளை கடந்தது! அதுவும் கார்த்திகை திருநாளான இன்று இச்சாதனையை நிறைவு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடுமையான விடாமுயற்சி ,தீவிர விளம்பரப்படுத்துதல் மூலம் இப்பணியை நிறைவு செய்திருந்தாலும் அகமுடையார் உறவுகள் பலர் அகமுடையார்மேட்ரி பற்றிய தகவல்களை பல்வேறு பேஸ்புக் ,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு அகமுடையார்மேட்ரி மற்றும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக மனமார்ந்த நன்றிகள்!

அதிலும் குறிப்பாக அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க செயலாளர் அண்ணன் சேலம் திரு. குமார் அகமுடையார் அவர்கள் வரன்களை வழங்கிவதோடு பல்வேறு வகையிலும் உதவி வருகிறார்கள். அவர்களின் சமுதாய பணிக்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நமது மனமார்ந்த நன்றிகள்!

அதேபோல் காரைக்குடி அகமுடையார் சங்க செயலாளர் அண்ணன் திரு.செந்தில் சேர்வை (அகமுடையார்) , சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார்,
சகோதரர் திரு. ஜெயகாந்தன் அகமுடையார் , அண்ணன் திருப்பரங்குன்றம் திரு.வெங்கடேசன் அகமுடையார் கிருஷ்ணகிரி திரு.திருமூர்த்தி அகமுடையார் , தமிழ் தேசிய வீரசங்கம் நிறுவனர். சகோதரர் மருது பாலா (முத்துபட்டி பாலா) அகமுடையார் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

இன்னும் சிலர் பெயரை நான் மறந்திருந்தால் அவர்களையும் பொதுவாக குறிப்பிட்டு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் (பெயர் குறிப்பிடாததற்கு காரணம் எனது மறதி தானே தவிர வேறு காரணம் அல்ல)

அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்! இதேபோல் மற்ற அகமுடையார் சங்கங்கள்,அமைப்புகளும் நம்முடன் இணைந்து செயல்பட்டு அகமுடையார் சமுதாயத்திற்கு உதவுவதோடு

தற்போது 500 வரன்பதிவுகளை கடந்துள்ளோம். இப்போது வரன் பதிவு பணியை இன்னும் தீவிரப்படுத்த உள்ளோம்.
இன்னும் 1 மாதத்தில் மேலும் 500 வரன்களை சேர்க்க திட்டமிட்டு பணியாற்ற உள்ளோம்! விரைவில் 1000 வரன் பதிவுகளை கடந்துவிடுவோம்.

குறிப்பு:
என்ன 500 வரன்கள் தானா என்று சிலர் நினைக்கலாம். ஆனால20 வருடங்களுக்கும் மேலாக திருமண தகவல் மையம் நடத்தி வருபவர்கள் கூட அந்தந்த பகுதிகளில் உள்ள மற்ற சாதிகளையும் இணைத்து 500 ,1000 ஆயிரம் என்று கணக்கு காட்டி இருப்பார்கள் ஆனால் நாம் அகமுடையார் சாதி வரன்களை மட்டுமே சேர்த்து வருகிறோம். அதுவும் தொலைவு தரும் இடைவெளியால் பிரிந்து வாழும் அகமுடையார் வரன்களை எல்லா பகுதியில் இருந்தும் இணைப்பது என்ற பெரும்பணி ஊடாக இதை செய்துள்ளோம்.

மேலும் மணமகன் தகவல் பதிவுகளில் பலர் ஜாதக்கட்டம் இல்லாமல் ,வேலை போன்ற முக்கிய தகவல்களை கூட கொடுக்காமல் பதிவதாலும், இதுகுறித்து மணமகன் வீட்டாரை தொடர்புகொண்டாலும் இத்தவல்களை பலர் அப்டேட் செய்வதில்லை
ஆகவே பல மணமகன் பதிவுகளை அப்ரூவ் செய்யாமல் வைத்த்துள்ளோம். இதனாலும் பல்வேறு வரன் தகவல்கள் சேர்க்கப்படாமல் உள்ளது. மணமகள் வரன் டிமாண்டாக உள்ள காலத்தில் மணமகன் வரன் பதிவர்கள் அரைகுறையாக பதிவு செய்யாதீர்கள்! முழுத்தகவல்களையும் கொடுத்து பதியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதுமட்டுமல்ல திருமண வரன் பதிவுக்கு வருபவர்கள் நமக்கு அறியாத பகுதியில் வருபவர்களாக இருந்தால் அவர்களிடம் கூடுதல் நேரம் செலவழித்து ( 10 முதல் 15 நிமிடங்கள்) வரை செலவழித்து கூட அந்த பகுதியின் அகமுடையார் நிலைகளை கேட்டறிந்து தகவல் சேகரிக்கிறோம்.

அதேபோல் பல்வேறு பட்டங்களில் இருக்கும் அகமுடையார்களும் நம்மிடம் பதிவதால் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விரிவாக விளக்கி சொல்லி சமுதாயத்தில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்க்கின்றோம் (இதுபற்றிய அனுபவங்களை தனிப்பதிவில் கூறுகின்றேன்)


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo