First
புதையல் ரகசியம்-ஒளிந்திருக்கும் புதையல்! அரசு கவனிக்குமா?
———————————————————
தென்காசி,திருநெல்வேலியை (வாசுதேவ நல்லூர்) பகுதிகளை பாண்டியர் பெயர்களால் ஆண்ட வெட்டுமாவலி அகம்படியர்கள் கி.பி 1600-1700களில் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தாங்கள் வாழ்ந்த நகரை விட்டு கொங்குப் பகுதிக்கு செல்லும் போது முத்து ,நகை முதலான நகை பெரும்ஆபரணங்களை கொண்டு சென்றால் போகும் வழியில் பிரச்சனை ஏற்படலாம் என்று அறிந்து அதை
பருத்தியூருக்கு கிழக்கே கொண்டரங்கி மலைப் பாதை அருகே உள்ள வெள்ளை விநாயகர் கோவிலின் முன்பு 50 அடிக்கு 50 அடி குழி தோண்டி புதைத்துள்ளதாக தெரிகிறது.
இதைப் பற்றி கணக்கன் கூட்டத்தார் பட்டயம்(செப்பேட்டில்) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
50க்கு 50ம் அடி குழின்னா 250 சதுர அடி குழி அப்படியென்றால் பெரும் புதையல் குவியலே கூட இருக்கலாம். மேலும் இச்செப்பேட்டுச் செய்தியில் குறிப்பிட்டவர்களின் தாயாதி வழியினர் வந்தால் எடுத்துக் கொள்ளட்டும் என்றும் மற்றவர்களுக்கு இப்புதையல் தெரியாமல் போக பிள்ளையார் அருளட்டும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து ஒர் கல்வெட்டும் அங்கு நடப்பட்டதாகவும் செபேட்டுச் செய்தி கூறுகிறது!
குறிப்பிட்ட இந்த பாண்டிய வம்ச தாயாதிகள் கொங்கு பகுதியில் இன்றும் வசிக்கும் வெத்திலைக்காரர் ,வெத்திலைக்காரத் தேவர் என அழைக்கப்படும் அகமுடையார் சமுதாயத்தினர் ஆவர்.
மண்ணுக்குள் இருந்து கிடைப்பதெல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தம் என்று அரசு கூறுகிறது.ஆனால் புதையல் யாருக்குச் சொந்தமானது என்று தெளிவான குறிப்பு உள்ளது. ஆக இதுவரை யாரும் இப்புதையலை தோண்டி எடுக்காம இருந்தா அரசு இப்புதையல தோண்டி எடுத்து குறிப்பிட்ட வம்சாவழியினரிடம் அளிக்குமா?
யாமறியோம் பராபரமே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்