First
சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன்
————————————————————–
கி.பி 1500களில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்தவன் வரகுண ஶ்ரீ வல்லபன் எனும் பாண்டிய மன்னன் இவன் யாகம் நடத்தி தனது பெயரை தீட்சதன் என்றும் சோமையாஜி என்று மாற்றிக்கொண்டான் என்பதை இப்பாண்டிய மன்னன் வெளியிட்ட திருநெல்வேலி புதுக்கோடை செப்பேடு கூறுகிறது.
தேவர்களுக்கு சோமரசம் என்னும் மதுவை அளித்து செய்யப்படும் ஒரு வேள்வி சோமயாகம் எனப்படும்…மிகவும் சிறப்புடைய இந்த யாகத்தைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய பிராமணர் சோமயாஜி/சோமயாஜியார் என்று அழைக்கப்படுவர். அப்படி ஒரு யாகத்தை நடத்தி தனது தனது பெயரை மேற்குறிப்பிட்ட மாதிரி மாற்றிக் கொண்டான் போலும்.
ஆதாரம்: நூல் பாண்டியர் காலச் செப்பேடுகள்!
பக்தி கொஞ்சம் முத்திப் போய் பிரமணாராகவே மாறிப் போன இப்பாண்டிய மன்னனுக்கு அடுத்து வந்த பாண்டிய அரசனும் தன்னை தீட்சதன் என்று அழைத்துக் கொண்டதில் இருந்து ஒரு சந்ததியே சாதி/தொழில் மாறி இருந்த இடம் தெரியாமல் மாறி விட்டது எனலாம்.
வரலாற்றில் பல விசித்திரங்கள் ஒளிந்திருக்கின்றன அதில் ஒன்று தான் இதுவும்!
கூடுதல் தகவல்:
இவ்வாறு செப்பேட்டில் பிராமணராக மாற்றிக் கொண்ட பாண்டியர்கள் வேறு யாருமல்ல பாண்டியர்கள் பெயரால் நெல்லை,தென்காசி பகுதிகளை ஆண்ட வெட்டுமாவலி அகம்படியர் என்று கல்வெட்டு,செப்பேடு ஆவணங்களில் குறிப்பிடப்படும் இன்றைய அகமுடையார் சமுதாயத்தினரே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்