First
தேவர் பட்டப்பெயரை “சாதி” யாக அறிவிக்க “கள்ளர் மகா சங்கம்” எதிர்ப்பு
———————————————————-
ஏதோ அகமுடையார்கள் மட்டும் முக்குலத்தோர் எனும் பெயருக்கும் தேவர் என்ற ஒற்றை அடையாளத்திற்கும் இன்று புதிதாய் எதிர்ப்பு தெரிவிப்பது போல் சிலர் முக நூலில் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில்
1945 ஆம் ஆண்டு அகில இந்திய முக்குலத்தோர் சங்கம் சார்பாக, ஆங்கிலேயர் அரசாங்கத்திற்கு கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை “தேவர்” என்ற பெயரில் சாதியாக அறிவிக்க வேண்டி அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கள்ளர், அகமுடையார், மறவர் சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பாக “தேவர்” பட்டப்பெயரை சாதி பெயராக அறிவிக்க ஆட்சேபனை செய்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான மனுக்களில் ஒரு மனுவை பதிவிட்டுள்ளேன்.
மிதமுள்ள மனுக்களும் அடுத்தடுத்த பதிவில் தொடரும்….
முக்குலம், தேவரினம் என்ற மாய அரசியலில் மயங்கி கிடக்கும் கள்ளர், மறவர், அகமுடையார் சாதிகளை சேர்ந்த சமூக உணர்வாளர்கள் இந்த கடிதத்தை முழுமையாக வாசித்து தாங்கள் பிறந்த சாதியின் மேன்மைக்கு பாடுபடவும்.பட்டப்பெயர் என்றும் சாதியாக உருமாற முடியாது.
கள்ளர்,மறவர், அகமுடையார்ஆகிய மூன்று சாதிகளும்என்று தனித்தனி சாதிகளே!மனுவின் சாரம்,தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுக்கா, கள்ளர் மகா சங்கம் பொது கூட்டம், 12-11-1945, திங்கள், மாலை 04 மணிக்கு வடுவூர் சீனிவாசப் பெருமாள் சந்நதிக்கெதிரில் உயர்திரு, ஆர்.கிருஷ்ணசாமி வன்னியர் அவர்கள் தலைமையில் கூடி ஆலோசிக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆஜர் 5000 கள்ளர் மகா ஜனங்கள்,கள்ளர், மறவர்,அகம்படியர் ஆகிய மூன்று வகுப்பினருக்கும் “தேவர்” என்ற ஒரு பெயர் கொடுப்பதைப் பற்றி சென்னை அரசாங்கம் விடுத்திருக்கும் விஷயமாக ஆராய்ச்சி செய்ததில் எந்த வகையிலும் மூன்று பிரிவினர்களுக்கும் எவ்வித சம்பந்தமோ, பழக்க வழக்க முதலிய விஷயங்களில் ஒரே முறையை அனுசரிப்பதோ எக்காலத்திலும் கிடையாதானதபாலும், குறிப்பாக கள்ளர்களுக்கு ஆயிரக்கணக்கான அநேக விதமான பட்டப் பெயர்கள் வம்ச பரம்பரையாய் இருந்து வருவதால் இதற்கு மாறாக மூன்று ஜாதியார்களையும் ஒரே ஜாதியாராக மதிக்கவோ பல பட்டங்களிலிருந்து வருவதை மாற்றி “தேவர்” என்ற ஒரே பட்டப் பெயரை வைத்துக் கொள்ளவோ முடியாதென்றதை ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொண்டு மேல்கண்ட யோஜனையை கைவிட்டு விடும்படி சென்னை அரசாங்கத்தாரை இச்சங்கம் கேட்டுக்கொள்வதாய் ஏக மனதாய் தீர்மானிக்கிறது. தலைவர்
ஆவண உதவி,அகமுடையார் அரண் ஆவண நூலகம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்