துளுவ வேளாளர்களின் தலைவர்களாகிய சேர்வைக்கார்கள் – துளுவ வேளாளர்கள் அகமுடையார் பே…

Spread the love
0
(0)

First
துளுவ வேளாளர்களின் தலைவர்களாகிய சேர்வைக்கார்கள் – துளுவ வேளாளர்கள் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவினரே (தொடர்)
—————————————————
துளுவ வேளாளர் அகமுடையார் பேரினத்தின் ஒர் பிரினர் என்ற தொடரில், இன்று நாம் காண இருப்பது வட மாவட்ட அகமுடையார் (துளுவ வேளாளர்) மற்றும் தென்மாவட்ட அகமுடையார்கள் இவர்களுக்கிடையே இருக்கும் சாதி பட்டம் குறித்த ஓற்றுமை குறித்த செய்தியை தான்.

வடமாவட்டத்தில் சேர்வை, சேர்வைக்காரர் பட்டம்
————————————-
சேர்வை என்பது அகமுடையார்களில் தென்மாவட்டத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் பட்டம் அல்ல , வடமாவட்டங்களில் உள்ள அகமுடையார்களும், அகமுடையாரின் உட்பிரிவாகிய துளுவ வேளாளர்களும் பயன்படுத்தும் பட்டம் ஆகும்.

உதாரணத்திற்கு சொல்வோமென்றால்

வடதமிழகமான வேலூர் மாவட்டத்தின் வேலூர் நகரத்தில் உள்ள அகமுடையார் மற்றும் துளுவ வேளாளர்கள் பெரும்பாலும் முதலியார் பட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சாதி தலைவர்களாக உள்ளவர்கள் “சேர்வை” பட்டத்தை தங்கள் பெயருக்கு முன்னால் பயன்படுத்தி வருகின்றனர்.

இதை நானாக சொல்லவில்லை.

1919-1920 வருட காலத்திய
Quarterly Journal Of The Mythic Society Vol10
என்ற ஆய்வேட்டிலும் இத்தகவல் பதியப்பட்டுள்ளது.

அதாவது, மேற்கூறிய ஆய்வேட்டின் 293 ஆம் பக்கத்தில்…

துளுவ வேளாளர்களில் “சேர்வை” என்ற உட்பிரிவு இருப்பதாகவும், துளுவ வேளாளர்களின் தலைவர்கள் “சேர்வைக்காரர்” என்ற பட்டம் பெற்றிருந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றது.
(பார்க்க இணைப்பு : 1, 2)

இந்த நூல் 1920 ஆம் வருடத்திலேயே எழுதப்பட்ட ஆவணம் என்றாலும் வெறும் நூல் ஆதாரம் என்பதையும் தாண்டி இந்த உண்மையை நிரூபிக்கும் சான்றாக இன்றும் வாழும் அடையாளங்களாக வாழ்ந்த மனிதர்களின் பெயர்களை தாங்கி ஆதாரங்கள் நிற்கின்றன.

உதாரணத்திற்கு,

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரின் ஒர் அங்கமான வேலப்பாடி பகுதியில்
“சேர்வை முனுசாமி முதலியார்” என்ற அகமுடையார் (துளுவ வேளாளர்) பெயரில் தெரு அமைந்துள்ளது.

அடுத்து

வேலூர், சங்கரன்பாளையம் பகுதியில் “சேர்வை மாணிக்க முதலியார்” அகமுடையார் (துளுவ வேளாளர்) பெயரில் தெரு அமைந்துள்ளது.

இந்த தெருவின் கூளில் மேப் லிங்க் கீழே
https://www.google.com/maps/place/Servai+Manika+Mudaliyar+Street,+Sankaranpalayam,+Vellore,+Tamil+Nadu+632001/data=!4m2!3m1!1s0x3bad38e19a38c0eb:0x23d2c433fff4a3f7?sa=X&ved=2ahUKEwjK-8fRh6b7AhXOG7cAHU5qBYMQ8gF6BAgkEAE

அதுமட்டுமல்ல, இதே வேலூரில்

“சேர்வை ப.அரங்கசாமி முதலியார் அகமுடையார் (துளுவ வேளாளர்) பெயரில் பூங்கா அமைந்துள்ளது.
(பார்க்க இணைப்பு 3)

மேற்காட்டிய ஆய்வு நூல் ஆதாரம் வெறும் “சேர்வை” என்று குறிப்பிடுவதோடு நிற்கவில்லை. துளுவ வேளாளரின் குறிப்பிட்ட உட்பிரிவினர் “சேர்வை” என்று பொதுவாக அழைக்கப்பட்டதையும் அவர்களின் சாதி தலைவர்கள் “சேர்வைக்கார்” என்று அழைக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டுகின்றது.

இதே நிலையை தான் தென் மாவட்ட அகமுடையார்களிலும் பார்க்கின்றோம் . தென்மாவட்ட அகமுடையார்களிலும் “சேர்வை” என்ற பொது பட்டம் விளங்கி வருகின்றது அதே நேரம் தலைவர்களையும், சிறப்பு வாய்ந்தவர்களையும் குறிப்பதற்கு மட்டும் அந்த பட்டத்துடன் ஆர் விகுதி சேர்க்கப்பட்டு “சேர்வைக்கார்” என்று அழைக்கப்பட்டு வருவதை காணலாம்.

உதாரணத்திற்கு,

தென் தமிழகத்தின் பாளையக்கார் அனைவரையும் பணிய வைத்தவரும் , ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட மணிமுடியை, ஆங்கிலேய தளபதி கோப்புடன் போர் செய்து ஆங்கிலேய படையை வென்று மதுரை நாயக்க மன்னரான பங்காரு திருமலை நாயக்கருக்கு மீண்டும் முடிசூட்டிய பெரும் புகழ்படைத்த சேது தளவாய் “வெள்ளையன் சேர்வைக்காரர்” அவர்கள் அகமுடையார் சாதியை சார்ந்தவர்.

சேது நாட்டின் தளவாயும், ரெணபலி முருகன் கோவில் கட்டிய பெரும் இறை பக்தருமான “வையிரவன் சேர்வைக்கார்” அவர்கள் அகமுடையார் சாதியை சார்ந்தவர்.

ஆங்கிலேயரை பலமுறை வென்றதோடு, வறட்சியும், சின்ன சிறு நில பரப்பான சிவங்கங்கையை ஆண்ட போதும்,
வேறு எவரையும் விட 50க்கும் மேற்பட்ட கோவில்கள், சர்ச், மசூதி போன்ற இறை வழிபாட்டுத்தலங்களுக்கு வாரி வழங்கிய மாமன்னர் மருதுபாண்டியர் எனும் “மருது சேர்வைக்காரர்கள்” அகமுடையார் சாதியை சார்ந்தவர்.

இப்படி பலரை உதாரணமாக சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே, தென்மாவட்ட அகமுடையார்கள் மட்டுமல்ல வடமாவட்ட அகமுடையார்களும் (துளுவ வேளாளர்களும்) சேர்வை, சேர்வைக்காரர் பட்டத்தையும் கொண்டுள்ளனர் என்பதுவும் அகமுடையார்களின் உட்பிரிவே துளுவ வேளாளர் என்பதை வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.

தென்மாவட்டத்தில் முதலியார் பட்டம்
———————————
வட தமிழ்நாட்டில் உள்ள அகம்படியர்கள் அதன் உட்பிரிவான துளுவ வேளாளர்கள் “சேர்வை,சேர்வைக்காரர்” பட்டத்தை எப்படி பயன்படுத்து கிறார்களோ, அதைப்போல வடதமிழக அகமுடையார்கள் பெரும்பாலாக பயன்படுத்தும் முதலியார் பட்டம்
தென் மாவட்டத்தில் கிடைத்த பெரும்பாலான கல்வெட்டுக்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

உதாரணத்திற்கு

உசிலம்பட்டி அருகில் உள்ள ஆனையூர் (கட்டகருப்பன்பட்டி) என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு செய்தியில்

“அகம்படி முதலிகள் பெரியான் உய்ய வந்தானான விக்ரமசிங்க தேவன்”

ஆதாரம்:
மதுரை மாவட்ட கல்வெட்டுக்கள் தொகுதி, கல்வெட்டு எண் : 352/2003
(பார்க்க இணைப்பு -4)

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிடைத்த கல்வெட்டு செய்தியில்,

“அகம்படி முதலிகளில் எல்லாம் தருவானான தென்னகங்க தேவன்”

ஆதாரம்:
தென் இந்திய கல்வெட்டுக்கள்
தொகுதி : 3, கல்வெட்டு எண் 412.
(பார்க்க இணைப்பு – 5)

“அகம்படி முதலிகளில் திருமஞ்சணம் அழகியனான வீரசிங்க தேவன்”

ஆதாரம்:
தென் இந்திய கல்வெட்டுக்கள்
தொகுதி : 3, கல்வெட்டு எண் : 414.
(பார்க்க இணைப்பு – 6)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டு செய்தியில்,

“அகம்படி முதலிகளில் உடையான்
புவனசிங்க தேவன்”

ஆதாரம்:
புதுக்கோட்டை கல்வெட்டு தொகுதி, கல்வெட்டு எண் : 433.
(பார்க்க இணைப்பு – 7)

மேற்கண்ட கல்வெட்டுகள் போன்று
தென்மாவட்டத்தில் கிடைத்த பல்வேறு கல்வெட்டு செய்திகளில் தென் மாவட்ட அகம்படியர் இனத்தவர்கள் “முதலி” பட்டத்தோடு இருந்துள்ளனர் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த கல்வெட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் “முதலி” பட்டத்துடன் “தேவன்” பட்டமும் இருந்துள்ளது. பின்னாளில் தென்மாவட்ட அகமுடையார்கள் “முதலி” பட்டத்தை கைவிட்டு “தேவன்” பட்டத்தை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளது தெரிகிறது.

ஆகவே தென்மாவட்டத்தில் இருப்பவர்களும், வடமாவட்டத்தில் இருப்பவர்களும் ஓரே அகம்படியர் சாதியில் வேறு பட்டங்கள் கொண்டவர்கள் என்பதையும் தாண்டி இவர்களுக்குள் பட்டங்கள் ரீதியாகவும் ஒற்றுமை இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல, ஒரு முகத்தின் இரு கண்கள் போல இவை என்றும் ஒன்றாகவே இணைந்திருக்கும்.

சொல்வற்கு நிறைய உள்ளன. ஆனால் ஒவ்வொன்றாக பதிவு செய்வோம். நாம் பதிவிடும் செய்திகளை படித்ததோடு நிற்காமல் முகநூல்,வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றில் இப்பதிவுகளை பகிரச் செய்யுங்கள் அப்போது தான் நம்மை பிரிக்க நினைக்கும் பொய்யர்களின் புரட்டு வாதங்கள் தோற்பதோடு, வரலாற்று உண்மைகளை படித்து நாம் ஒன்று சேரமுடியும்.

“வரலாறு ஓரு நாள் நம்மை ஓன்று சேர்க்கும்” என்ற நம்பிக்கையோடு…

குறிப்பு:

சேர்வை என்ற பெயரில் வேலூர் மாநகரில் பல தெருக்கள்,பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் புகைப்படங்களை எடுத்து நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியாக அனுப்ப வேண்டுகிறோம்.

அதே போல் அகமுடையார் மற்றும் துளுவவேளாளர்களின் நில ஆவணங்களில் சேர்வை, சேர்வைக்கார் என்ற பட்டங்கள் குறிக்கப்பட்டுள்ளதையும் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டுகிறோம்.
நமது வரலாற்று மீட்புக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும்.

50 வருடங்கள் முன்பு வேறு பட்டியல் FC பிரிவில் இருந்த சாதியினர் சிலர் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழுக்காக போலியாக துளுவ வேளாளர் என சான்றிதழ் பெற்றவர்களும், அவர்களை பின்பற்றி அவர்களுக்கு பின்னால் வந்த போலி சான்றிதழ் வைத்திருக்கும் சிலர் தான் அகமுடையாருக்கிடையில் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.

அதேநேரம்

வடமாவட்டத்தில் மட்டுமல்ல, தென் மாவட்டத்தில் உள்ள உண்மையான துளுவ வேளாளர்களிடத்தும் இந்த சேர்வைக்காரர் பட்டம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. (அதனுடைய ஆதாரமும் நம்மிடம் இருக்கிறது. அதை தேவையான போது வெளியிடுவோம்).

கட்டுரையாக்கம்,
மு.சக்திகணேஷ் அகமுடையார்,
அகமுடையார் ஒற்றுமைத்தளம்,
மதுரை.

#துளுவவேளாளர்
#துளுவவெள்ளாளர்
#துளுவர்
#துளுவன்
#தொழுவவேளாளர்
#தொழுவவெள்ளாளர்
#துளுவமுதலியார்
#துளுவபிள்ளை
#துளுவநாயக்கர்
#thuluvavellalar
#thuluvan
#thuluvar
#thuluvamudaliar
#thuluvapillaiஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?