First
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அகமுடையார்
—————————————
விடுதலை வீரரும் ,கவிஞருமான புகழ்பெற்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையை பிள்ளைப் பட்டத்தை வைத்தும் , ராமலிங்கம் பிள்ளை பிறந்த நாமக்கல் மாவட்டம் மோகனூரை வைத்து சமீப காலமாக பிள்ளைமார் இனத்தவர்கள் தங்கள் சாதியினர் சொந்தம் கொண்டாடி முகநூல் ,யூடிப் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அதோடு நிறுத்திக் கொண்டாலும் பரவாயில்லை. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையை அகமுடையார் என்று அகமுடையார்கள் சிலர் சொல்லும் போதெல்லாம் அதை இவர்கள் எங்கள் சாதியை சேர்ந்தவரை அகமுடையார்கள் சொந்தம் கொண்டாடி வரலாற்று திருட்டு செய்கின்றார்கள் என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள்!
அவர்கள் அறியாமையை எண்ணி வருத்தமும் , நகைப்பும் வருகின்ற இவ்வேளையில் இச்சந்தேகத்தை தீர்த்து வைப்பது இந்த இரு சமூகத்தினருக்கும் நல்லது என்பதால் இப்பதிவை வரைகின்றோம்!
முதல் ஆதாரம்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களே தனது வாழ்க்கை வரலாற்ற்றை “என் கதை” என்ற நூலாக எழுதி வெளியிட்டிருந்தார்கள்.
முதலாவது
அந்நூலின் 106,107ம் பக்க்கங்களில் அகமுடைய நாயக்கரான சேலம் பாகல்பட்டி ஜமீன் மாணிக்க நாயக்கரை குறிப்பிடும் போது அவரை தந்து நெருங்கிய நண்பர் என்பதுடன் தனது உறவினர் என்றும் குறிப்பிட்டுள்ளார் (பார்க்க படம் 1,2)
பிள்ளைமார்/வெள்ளாளர்கள்க்கு நாயக்கர் பட்டம் உண்டா?
அகமுடையாரில் நாயக்ர் பட்டம் கொண்ட மாணிக்க நாயக்கர் உறவினரான நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அகமுடையாராக இருக்க முடியுமா இல்லை பிள்ளைமார் இனமாக இருக்க முடியுமா?
இரண்டாம் ஆதாரம்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களை பிள்ளைமார் என்று குழப்பமடைய அவர் பிறந்த மோகனூர் என்பதாக நினைத்து குழப்பமடைகிறார்கள். நாமக்கல் பகுதியில் சோழிய வெள்ளாளர் அதிகமாக இருப்பதாகவும் நாமக்கல் பகுதியில் பிள்ளை என்று பட்டம் கொண்டிருப்பதால் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சோழிய வெள்ளாளர் பிள்ளை என்று குழப்பமடைகிறார்கள்.
ஆனால் உண்மையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நாமக்கல் மாவட்டம் பூர்வீக ஊர் அல்ல.இவருடைய முன்னோர்களுக்கு
வடஆற்காடு மாவட்டம்,திருக்கோவிலூர் தாலுகாவில் அமைந்துள்ள பரனூர் என்ற ஊரே பூர்விகமாகும். இவ்வூரில் அகமுடையார்கள் பிள்ளைப்பட்ட்டத்துடன் உள்ளனர்.
குறிப்பிட்ட பரனூர் ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை அவர்களின் தந்தையின் வேலை காரணமாக நாமக்கல் மாவட்டம் மோகனூரில் குடியேறி உள்ளனர். இச்செய்தியை மேற்குறிப்பிட்ட இதே நூலில் பக்கம் எண் 23ல் நீங்கள் பார்க்க முடியும்(பார்க படம் எண் 3)
இதற்கு மேலும் பிள்ளைமார் வெள்ளாள நண்பர்களுக்கு சந்தேகம் இருப்பின்
குறிப்பிட்ட திருக்கோவிலூர் தாலுகா பரனூரில் உள்ளவர்களிடம் ராமலிங்கம் பிள்ளை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்