First
வைரவன் சேர்வைக்காரர்(அகமுடையார்) கட்டிய இரணபலி முருகன் கோவில்-செப்பேடு சான்று
——————————-
கி.பி 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேது பகுதியில் தளவாயாக இருந்தவர் வைரவன் சேர்வைக்காரர் எனும் அகம்படியர் இனத்தவர். இவர் புகழ்பெற்ற போர்படை தளபதியாக இருந்ததோடு அல்லாமல் ஆன்மீக சிறப்பு மிக்க பணிகளை ஆற்றியுள்ளார். அப்பணிகளில் ஒன்று தான் இராமநாதபுரம் அருகில் பெருவயல் எனும் ஊரில் இவர் கட்டிய இரணபலி சுப்பிரமணியர் கோவிலாகும்.
இக்கோவிலை அமைத்த இவருக்கு கோவிலின் உள்ளே சிலையும் கோவிலின் வெளியே பள்ளிப்படை ( நினைவாலயம் ) உள்ளது. பார்க்க படம் 1
வைரவன் சேர்வைக்கார் இரணபலி முருகன் கோவில் உருவாக்கியதை “பெருவயல் செப்பேடு ” குறிப்பிடுகிறது (பார்க்க படம் 23)
அதாவது பெருவயலில் இருக்கும் சாத்தப்பன் சேருவைக்காரன் புத்திரன் சேது தளவாய் வயிரவநாதன் சேருவைக்காரன் உண்டு பண்ணிவிச்ச சுப்பிரமணி சுவாமியான பெருவயல் ரணபலி முருகையாவிற்கு”
என்ற வரிகள் மூலம் பெருவயல் ஊரை சேர்ந்த சாத்தப்பன் சேருவைக்காரன் மகனான சேது தளவாய்(தளபதி) பதவியிலிருந்த வயிரவன் அல்லது வயிரவநாதன் சேருவைக்காரன் எனும் அகம்படியர் பெருவயலில் சுப்பிரமணிய சுவாமி கோவிலை உருவாக்கினார் என கி.பி 1738 காலத்திய பெருவயல் சேப்பேடு செய்தி வழியாக தெரியவருகின்றது.இந்த செப்பேட்டு செய்தியை பின்பற்றி பல்வேறு நூல்களிலும் இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் அரசர்கள் கட்டிய கோவில்களுக்கு மத்தியில் தளபதியாக இருந்து சிறப்புமிக்க கலைநயம் வாய்ந்த கோவிலை கட்டிய வைரவன் சேர்வைக்காரர் தான் எத்துனை பெருமைக்குரியவர்!
இக்கோவிலை பற்றிய சில படங்கள் இப்பதிவில் இணைக்கின்றோம்.
குறிப்பிட்ட செப்பேட்டு வாசகம் ,சிவகங்கை சீமை என்ற நூலின் 31ம் பக்கம் முதல் 35ம் பக்கம் வரையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் நமக்கு தேவையான பக்கத்தின் வாசகத்தை மட்டும் அடைப்புக்குள் காட்டியுள்ளோம் (பார்க்க படம் 3)
குறிப்பிட்ட பெருவயல் செப்பேட்டு பட்டயத்தின் மூலபிரதி தளவாய் வயிரவன் சேர்வைக்காரரது வழியினரும் பாரத ஸ்டேட் வங்கியின் அருப்புக்கோட்டை கிளை மேலாளருமாய் பதவி வகித்த திரு. எம்.மீனாட்சி சுந்தரம் அகமுடையார் குடும்பத்தினரிடம் உள்ளது .
கோவில் புகைப்படங்கள் உதவி: திரு.சிவசந்தோஷ் பாஸ்கரன்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்