அரும் புகழ் அழித்த பாண்டிய தேவனும் – சூழ்ச்சி மிக்க பாண்டியர்கள் சோழர்களை அழித்…

Spread the love

First
அரும் புகழ் அழித்த பாண்டிய தேவனும் – சூழ்ச்சி மிக்க பாண்டியர்கள் சோழர்களை அழித்த கதையும்
——————————————————
இக்கட்டுரை சற்றே நீளமானது.தமிழ்நாட்டு வரலாற்று ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அகமுடையார் சமுதாய உணர்வாளர்கள் முழுவதுமாக படித்தல் நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடியும்.

வேறு செய்திகளை பேசுவதற்கு முன்னால் இப்பதிவின் மையக்கருவான கல்வெட்டு செய்தியை பார்த்துவிடுவோம்.

ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி 34 ,கல்வெட்டு எண் 175

இன்றைய குளித்தலை தாலுகா ரத்தினகிரி மலையில் அமைந்துள்ள கோவிலில் கிடைத்த கி.பி 1261ம் ஆண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு செய்தியில் இன்றைய அகமுடையார் இனத்தை சேர்ந்த ” உய்யான் அரும்புகழ் அழித்த பாண்டிய தேவன்” கோவில் பூசை நடைபெற நிலங்களை தானம் அளித்த செய்தியும் ஸ்பான மண்டபம் எழுப்பிய செய்தியும் காணப்படுகின்றது.

கல்வெட்டு செய்தி- விரிவு
———————
சிவபாத சேகரபுரத்து நகரத்தார்(ஊர் தலைவர்களிடம்) சோழப்பெருமாள் “அகப்பரிவாரத்து முதலிகளில் மதுரையில் தேவன் உய்யனாரும் புகலழித்த பாண்டிய தேவன்” எனும் இன்றைய அகமுடையார் இனத்தவன் நிலத்தை வாங்கி திருமாணிக்கம்மலை உடைய நாயனார் கோவில் தேவகன்மி மற்றும் கோயில் கணக்கு போன்ற கோவில் பணியாளர்ளிடம் ஒப்படைக்கின்றான்.

குறிப்பிட்ட இந்த நிலத்தில் விளையும் பயிர் விளைச்சலைக்கொண்டு முதலி புண்ணியாகத்திற்கு (அதாவது முதலி பட்டம் கொண்ட இந்த அகமுடையார்) பெயரில் ஹோமம் மற்றும் புன்னிய யாகம் செய்ய அதற்கு தேவையான பொருட்கள் வாங்க (நெய்,நூல், எள்ளு,கடுகு,பொரி,திருநீறு ,மஞ்சள் பொடி) , பள்ளித்தாமம் எனும் இறைவனின் பூசைக்கு தேவையான பூக்கள் வாங்கவும், இறைவனுக்கு அமுதுபடி ( பருப்பு சோறு, காய்கறி சோறு, உப்பு மிளகு சோறு,நெய் சோறு , வாழைப்பழம், வெற்றிலை படைக்கவும் ,திருவிளக்கு பூசையை சந்திராத்தவர் (சந்திர சூரியன் உள்ளவரை நடக்கும்படி) கொடுத்துள்ளான்.

இதை பெற்றுக்கொண்ட கோவில் அதிகாரிகள் சந்திராத்தவர் வரை நடப்பதாக கல்வெட்டி (கல்வெட்டு செய்தியில் பொறித்து) அளித்துள்ளனர்.

மேலும் அரும்புகழ் அழித்த பாண்டிய தேவன் பெயராலே கோவிலில் ஸ்தாபன மண்டம் எழுப்பியுள்ளான்.

இக்காரியங்கள் எல்லாம் சரியாக நடைபெறுகின்றதா என்பதை கண்காணிக்க கண்காணியாக மாதவிடங்கன் பிச்சன் ,வீரபாண்டிய ,கோவன் அடியான், கணக்கு மாணிக்க நாயகப்பிரியன், அளகைக்கோன்,சுந்தர பாண்டியச்சன், குலசேகர பெருமாள் சக்கரவர்த்தி, காணியுடைய ஆசாரிகளில் நயன முன்னூற்றுவ சக்கரவர்த்தி போன்றவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கல்வெட்டில் ஒப்பம் இட்டுள்ளார்கள் (எழுத்து) .

கல்வெட்டு தொடர்பான விரிவான செய்திகள்
———————————-
இந்த கல்வெட்டு படி எடுத்த கல்வெட்டு ஆய்வாளர்களே
பாண்டியர் கல்வெட்டில் சோழப்பெருமாள் (சோழ அரசன்) என்று குறிப்பிடுகின்றதென்று ஒருகணம் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது( இதை கல்வெட்டு செய்தியில் அவர்கள் கொடுத்துள்ள கேள்விக்குறி கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது)

ஆனால் இதை சில ஒப்பீடுகளுடன் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

முதலில் பாண்டியர் ஆட்சியாண்ட்டை குறிப்பிடுவதால் இது பாண்டியர் கல்வெட்டு என்பது தெளிவாகின்றது.

பாண்டியர் கல்வெட்டான இதில் சோழபெருமாள் என்று கல்வெட்டு குறிப்பிடப்படுவதாலும் கல்வெட்டின் காலமான கி.பி 1261ம் ஆண்டு பாண்டியர்கள் எழுச்சி பெற்று சோழ நாடு பாண்டியரின் ஆளுகைக்கு உட்பட்ட காலம் என்பதால் சோழப்பெருமாள் என்பது பாண்டிய அரசர்களால் சோழ நாட்டை ஆள சோழபெருமாள் என்ற பெயரில் பாண்டியரின் இராஜபிரதிநிதி சோழ நாட்டை கண்காணித்தது தெளிவாகின்றது.

மேலும் பெருமாள் என்ற பெயர் பாண்டிய நாட்டிலும் , சேர நாட்டிலும் அரசர்களை குறிக்க பயன்பட்ட பெயராகும் . சோழநாட்டிலோ தேவர்,உடையார் போன்ற பட்டங்களே அரசர்களை குறிக்க பயன்பட்டதே தவிர பெருமாள் என்ற எந்த சோழ அரசரையும் குறிக்க பயன்பட்டதே இல்லை எனும் போது சோழபெருமாள் என்பவன் பாண்டியர்களால் சோழ நாட்டை கண்காணிக்க அனுப்பப்பட்ட இராஜபிரதிநிதி என்பது தெளிவாகிறது.

பொதுவாக ஒருநாட்டினன் மற்றொரு நாட்டை கைப்பற்றும் போது வெற்றிகொள்ளப்பட்ட அந்நாட்டு அரசனையோ அல்லது அவரது வாரிசுகளையோ வெற்றி பெற்றவனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளச்சொல்லி அதை ஏற்றுக்கொண்டபின்பு அந்நாட்டை அவர்களே ஆளக்கொடுத்துவிட்டு அதன் பயனாக வரியை பெற்றுக்கொள்வர். இதுவே பண்டைய தமிழகத்தில் இருந்த நடைமுறையாகும்.

பாண்டிய நாட்டை பல முறை வென்ற சோழர்கள் தங்கள் மேலாதிக்கத்தை ஏற்று பாண்டியர்களே பாண்டிய நாட்டை ஆள பலமுறை அனுமதித்துள்ளனர். அதே நேரம் இதை மீறி பாண்டியர்கள் அத்துமீறும் போது சோழபாண்டியன் என்ற பெயரில் சோழர்களே ஆட்சியை தாங்களே கையில் எடுத்த நிகழ்வும் வரலாற்றில் நடந்துள்ளது.

தற்போது சோழர்கள் வலிகுன்றிய காலம் என்பதால் சோழநாடு பாண்டியர் வசம் வந்து சோழபெருமாள் என்ற பெயரில் சோழநாடு பாண்டிய நாட்டின் கண்காணிப்பில் வந்துள்ளது.

இக்கட்டுரையின் முக்கியமான விடயங்களே இனிமேல் தான் சொல்லப்படவிருக்கிறது.

இக்கட்டுரையின் நாயகனான “அகப்பரிவாரத்து முதலிகளில் மதுரையில் தேவன் உய்யனாரும் புகலழித்த தேவன்” என்ற பெயருடன் பல்வேறு வரலாற்றுச்செய்திகளை ஒப்பிட்டுப்பார்க்கும் போது வரலாற்றின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றது.

பாண்டியர்களின் சூழ்ச்சியும் கோழைத்தனமும்
———————————–
முன்னர் சொன்னபடி
சோழர்கள் பாண்டிய நாட்டை வெற்றிகொண்ட போதெல்லாம் சோழர்களின் அரசப்பிரதிநிதியாக தங்கள் உறவான அகமுடையார்களையே நியமித்துள்ளார்கள் . இதற்கு பல்வேறு கல்வெட்டு சான்றுகளும் , இன்றும் இருக்கும் களத்தரவுகளும் சான்று பகிர்கின்றன.

உதாரணத்திற்கு சொல்வதென்றால் இன்றைய விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட குலோதுங்க சோழர் காலத்து கல்வெட்டு செய்தியில் “அகம்படி முதலிகளில் பெரிய பெருமாள் பாண்டிய ராயன்” என்பவன் திருநந்தா விளக்கு எரிய நிலதானம் அளித்த செய்தி பதிவாகியுள்ளது.

அகம்படி இனத்தை சேர்ந்தவன் பெரிய பெருமாள் என்றும் பாண்டிய ராயன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளான். பெருமாள் என்பது பாண்டிய நாட்டில் அரசர்களை குறிக்கும் பயன்படும் வார்த்தையாகும் மேலும் ராயன் என்பதும் அரசரை குறிக்கும் பாண்டிய ராயன் என்பதிலிருந்தும் இவன் பாண்டிய அரசன் போன்று இருந்தவன் என்பதும் புலப்படும். சோழர் கல்வெட்டில் பாண்டிய அரசனாக இருந்தவனை குறிப்பிடுவதிலிருந்தே இவன் சோழநாடு சார்பாக பாண்டிய நாட்டை கண்காணித்த இராஜபிரதி நிதி என்பது தெளிவாக விளங்கும். மேலும் பெரிய பெருமாள் என்பதில் உள்ள பெரிய என்ற வார்த்தை உண்மையில் பாண்டிய மரபில் ஆட்சி செய்த பாண்டிய இளவல்களாகிய பெருமாள்களை குறைத்து பாண்டியராயனை உயர்த்திக்காட்ட பயன்பட்டது எனலாம்.

இவ்வாறு சோழ அரசர்களால் பாண்டிய நாட்டை வெல்ல அனுப்பப்பட்ட சோழர்களின் உறவினர்களான அகமுடையார்கள் பாண்டியர்களை வென்றபின் பாண்டிய நாட்டின் பல பகுதியில் சென்று குடியேறினர்.

இன்றும் பாண்டிய நாட்டில் சோழர் பெயருடன் விளங்கும் அனைத்து ஊர்களிலும் அகமுடையார்களே அந்த ஊர் உருவான பூர்வீக காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மதுரை அருகே உள்ள சோழவந்தான், சோழபுரம் , சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்ட கமுதி அருகே உள்ள வீரசோழன் போன்ற ஊர்களை உதாரணமாக சொல்லலாம். இன்று சோழர்கள் தான் என்று பொய்யாக உரிமை கோரும் எந்த சாதியினரும் இந்த ஊர்களில் இல்லை மாறாக இந்த ஊர்களில் எல்லாம் அகமுடையார்களே பெரும்பான்மையாகவும் ஆளும் வர்க்கத்தினருமாக உள்ளனர் . இது போன்ற பல உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.

இவ்வாறு போர்குடியினராகவும் ,அரசியல் அதிகாரிகளாகவும் பெரும் எண்ணிக்கையில் பரவிய அகமுடையார்களை எதிர்ப்பதை விடுத்து விவேகமான முடிவை பாண்டியர்கள் எடுத்தது தெரிகின்றது.

அதாவது சோழர்களை வீழத்த வேண்டுமென்றால் முதலில் சோழர்களின் மூலபலமாக விளங்கிய அகமுடையார்களை வீழ்த்த வேண்டுமென்பதை பாண்டியர்கள் விளங்கிக்கொண்டிருக்க வேண்டும். அதனாலேயே அவர்கள் அகமுடையார் இனத்தவரை தங்கள் படையிலும் ,அரசியல் அதிகாரிகளாகவும் அவ்வளவு ஏன் பெண் கொடுத்து மணவுறவிலும் இணைத்துக்கொண்டனர்..

இது பாண்டிய நாட்டில் கண்டறியப்பட்ட பல்வேறு கல்வெட்டு செய்திகள் மூலம் தெளிவாகின்றது.

30 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள்
கி.பி 12ம் நூற்றாண்டிற்கு பிறகு பாண்டிய நாட்டில் அகம்படி சாதியினர் பல்வேறு உயர் அரச பதவிகளிலும் , தளபதிகளாகவும் நியமிக்கப்பட்ட தகவலை அளிக்கின்றது.

அதிலும் குறிப்பாக கொடுங்குன்றம் எனும் இன்றைய பிரான்மலை கோவிலில் கண்டறியப்பட்ட குலசேகர பாண்டியர் காலத்து கல்வெட்டில் ” பிள்ளையார் அழகப்பெருமாள் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவனி நாராயண தேவன்” எனும் அகமுடையார் இனத்தவன் குறிப்பிடப்படுகின்றான்.

இதே நபரை திருக்கோளக்குடி பாண்டியர் கல்வெட்டில் பாண்டிய மன்னர் “மச்சுன்னார் அழகப்பெருமாள் நமக்கு சொன்னமையில்” என்று குறிப்பிடுகின்றது. மேலும் பல்வேறு கல்வெட்டுகளும் இதே செய்தியை சொல்வதை வரலாற்றிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அகமுடையார்களுக்கு பாண்டியர்கள் வழங்கிய உயர் பதவிகளும் திருமண உறவும் சோழர்களை வெல்வதற்காகத்தான் என்பதை நம் கட்டுரையின் இக்கல்வெட்டு செய்தி எடுத்துக்காட்டுகின்றது.

அதாவது இக்கட்டுரையின் மைய ஆதாரமான கல்வெட்டு செய்தியில் ” சோழபெருமாள் அகப்பரிவார முதலிகளில் மதுரையில் தேவன் உய்யனாரும் புகலழித்த பாண்டிய தேவன்” என்ற பெயர் கொண்டு

இவன் இன்றைய அகமுடையார் இனத்தவன் என்பதோடு இவனே சோழபெருமாளாகவோ அல்லது சோழபெருமாளின் அதிகாரியாகவோ இருந்திருக்க வேண்டும் எப்படி இருந்தாலும் இவன் மிகுந்த அதிகாரமுடையன் என்பதனை இவன் பெயரில் உள்ள பாண்டிய தேவன் என்ற பெயர் கொண்டும் , இவன் வழங்கிய தானத்தை கண்காணிக்க பல்வேறு உயர் அதிகாரிகளை நியமித்துள்ளான் என்பதில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.

அதிலும் காணியுடைய முன்ன்னூற்றுவ சக்கரவர்த்தி என்பவன் முன்னூறு படைவீரர்களுக்கு தலைவன் , பெரும் நிழக்கிழார் என்பது அவன் பெயரில் இருந்தே தெரிகிறது. இது போல குலசேகர சக்கரவர்த்தி போன்ற பெரும் அதிகாரிகளை தன் தானத்தை கண்காணிக்க நியமித்ததில் இருந்தே குறிப்பிட்ட பாண்டிய தேவன் என்பவன் பெரும் ஆதிகாரியாகவோ அல்லது இவனே பாண்டிய அரசப்பிரதிநிதியாக சோழநாட்டை கண்காணித்தவனாக இருக்க வேண்டும்.

மேலும் இவனை புகலழித்த , அரும்புகலழித்த என்று கல்வெட்டு செய்தி குறிப்பிடுகின்றது. வெறுமனே புகலழித்த என்று குறுப்பிட்டுருந்தால் வேறு எவர் புகழை வீழ்த்தியவன் என்று கடந்து சென்று விடலாம் ஆனால் கல்வெட்டின் பின்வரிகளில் அரும்புகழ் அழித்த என்ற வரிகள் தொடர்ந்து வருவதையும் குறிப்பிட்ட கி.பி 1261ம் ஆண்டு பாண்டியர்கள் சோழர்களை ஒடுக்கிய காலம் மற்றும் சோழபெருமாள் என்ற பெயர்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது குறிப்பிட்ட பாண்டிய தேவன் சோழர்க்களையே வீழ்த்தியுள்ளான் என்பது தெளிவாகிறது. இவ்வாறு பாண்டியர்களை வெல்ல சோழர்களால் அனுப்பப்பட்ட சோழர்களின் உறவினர்களாகிய அகமுடையார்களைக்கொண்டே சோழர்களை பாண்டியர்கள் முறியடித்ததை தான் சூதுச்செயல் என்று நாம் குறிப்பிடுகின்றோம்.இது வெறுமனே இந்த கல்வெட்டை வைத்து மட்டுமல்ல மற்ற கல்வெட்டு ,செப்பேட்டு செய்திகளும் கொண்டே இதை மேலும் உறுதிப்படுத்துகின்றோம்.

அகமுடையார்களை வளைத்து அதன் மூலம் சோழர்களை வீழ்த்துவதை பெரும் மன்னர்களான பாண்டியர்கள் செய்வார்களா ? என்று உங்களுக்கெல்லாம் கேள்வி எழலாம்! ஆனால் செய்தார்கள் என்று தான் சான்றுகள் அதைதான் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வளவு ஏன் ,போர்களத்தில் வெல்ல முடியாத ஆதித்த கரிகாலனை எல்லா அறங்களையும் மீறி சேரர்களின் துணையோடு பிராமணர்களை அனுப்பி சதி செய்து கொலை செய்தது பாண்டியர்கள் அல்லவா?

பாண்டியர்கள் வேண்டுமென்றால் போர்களத்தையும் தாண்டி கொலை செய்வார்கள் , சோழர்கள் படையெடுத்து வரும் போது மலை நாட்டிற்கோ, பொதிகைமலைக்கோ அல்லது இலங்கைக்கோ சென்று பதுங்கிக்கொண்டதும் உண்டு.
இவ்வளவு ஏன் முஸ்லீம் படையெடுப்பின் போது நாட்டையும் நாட்டு மக்களையும் நிர்கதியாக விட்டுவிட்டு ஓடியது நீங்கள் வரலாற்றில் படித்திருக்க்கலாம்.
பாண்டிய மன்னர்கள் எதிர்த்து போரிட்டுருந்தால் அல்லது போரிட்டு தடுக்க முயற்சி செய்திருந்தால் முஸ்லீம் படையெடுப்பின் போது இவ்வளவு செல்வங்களும் ,மக்கள் படுகொலையும் நடந்திருக்காது என்பது திண்ணம்.

ஆகவே தான் பாண்டியர்களின் இந்த செயல் சூழ்ச்சியும் கோழைத்தனமானது என்பதாக கட்டுரையின் தலைப்பிலேயே குறிப்பிட்டோம்.

(இது வேறு மிகவும் விரிவான செய்தி என்பதால் மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம் அல்லது அகமுடையார் வரலாறு நூல் வருகையில் இதை விரிவாக பேசலாம். )

பரிவாரம் சொல் விளக்கம்
———————-
இகல்வெட்டு செய்தியில் அகப்பரிவாரத்து என்று கல்வெட்டின் நாயகனை குறிப்பிடுவதால் இந்த அகப்பரிவாரம் என்ற பெயரையும் அகபரிவாரம் என்பது இன்றைய அகமுடையார் சாதியினரை குறிக்கின்றதா என்பதையும் கீழே உறுதி செய்யலாம்.

அதற்கு முன் பரிவாரம் என்பதன் பொருளை பார்ப்போமானால்…

பரிவாரம் என்ற இச்சொல் பரிவார் என்கிற சமஸ்கிருத வார்த்தையை வேர்சொல்லாக கொண்டது. பரிவார் என்கிற இந்த சமஸ்கிருத சொல்லுக்கு இன்றும் உறவினர் என்பதே பொருளாக உள்ளது. சமஸ்கிருத கலப்பில் தோன்றிய ஹிந்தி போன்ற உபரி மொழிகளில் பரிவார் என்ற சொல்லுக்கு உறவினர் என்ற அர்த்தமே இன்று வரை உள்ள்து.
இவர்கள் என்னுடைய உறவினர்” அல்லது “இது என்னுடைய குடும்பம்” என்பதை ஹிந்தி மொழியில் ஒருவர் சொல்ல விரும்பினால் அவர் ” ஏ மேரே பரிவார் ஹேன் ” यह मेरा परिवार हैं என்று பரிவார் என்ற வார்த்தையை உறவினர்களை சுட்ட பயன்படுத்துகிறார்கள்.

சந்தேகம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்து parivaar என்பதன் அர்த்தத்தை கூகிளில் கண்டறியலாம்.

https://www.google.com/search?q=parivaar+meaning&client=firefox-b-d&ei=s_SRYJHhEebMz7sP8Yyu0AQ&oq=parivaar+me&gs_lcp=Cgdnd3Mtd2l6EAEYATICCAAyAggAMgIIADICCAAyAggAMgQIABAKMgQIABAKMgIIADIECAAQCjICCAA6BwgAEEcQsAM6BwgAELADEEM6EwguEMcBEKMCELADEMgDEEMQkwI6CgguELADEMgDEEM6BAgAEEM6BwgAEMkDEEM6BAguEEM6AgguSgUIOBIBMVDZvQZYl78GYJrMBmgBcAJ4AIAB7ASIAfUQkgEFNC0xLjOYAQCgAQGqAQdnd3Mtd2l6yAEPwAEB&sclient=gws-wiz

ஆகவே பரிவாரம்,பரிவாரத்தார்அகப்பரிவாரம், அகம்படியர் என்ற சொற்கள் தமிழகத்தில் சோழநாட்டிலேயே ஆரம்பத்தில் புழக்கத்தில் இருந்தது.
சோழர்களிடம் அகம்படி நியாயம் எனும் தனி அமைப்பே உருவாகியிருந்தது.
சோழர்கள் தங்கள் உறவினர்களையே நெருங்கிய வட்டத்திலும்,அரசியல் அதிகாரிகளாவும் ,படைத்தலைவர்களாகவும் வைத்திருந்தனர். எல்லா பதவிகளிலும் முதன் உரிமை இவர்களுக்கே வழங்கப்படிருந்தது . பின்னர் தான் தகுதியுள்ள மற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

பரிவாரம் என்ற சொல்லுக்கு உறவினர் என்று நேரடியாகவே பொருள் இருக்க நம் தமிழ்நாட்டு தொல்லியல் அறிஞர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்கள் பரிவாரம் என்றால் வெறுமனே அரசு அதிகாரிகள் என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர். இதையே தவறை தான் அகம்படியர் என்ற வார்த்தைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அகம்படியர் என்றாலும் அரண்மனையில் வாழ்பவன் ,அரசனின் உறவினன் என்ற பொருள் தான் .ஆனால் இதையும் அறிஞர்கள் வெறுமனே அரசு அதிகாரிகள் என்று சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

இன்றைய அகமுடையார் சாதியினருக்கு அன்று அகம்படி,அகம்படியர்,கோயிற்றமர், உள்மனையார்,பரிவாரம்,மனைமகன்,மனைப்பெருஞ்சனம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பெயர்கள் என்றாலும் இவை அனைத்தும் ஒரே பொருள் கொண்டவை அதாவது இவை அனைத்திற்கும் அரண்மனையில் வாழ்பவன் என்றும் அரசனின் உறவினன் என்ப்பது தான் உண்மை பொருளாகும்.

சரி இப்போது பரிவாரம் என்ற வார்த்தைக்கு வருவோமானால்,
அகமுடையார்களின் வருகைக்கு முன்பு பரிவாரம்,அகம்படியர் போன்ற சொற்கள் பாண்டிய நாட்டில் வழக்கத்தில் இல்லை என்பதையும் சோழர்கள் தங்கள் உறவினர்களான அகமுடையார்களை விளிக்க பயன்படுத்தப்பட்ட இந்த பெயர் அகமுடையார்களின் வருகைப்பின்னரே பாண்டியநாட்டில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதை பாண்டிய நாட்டில் கிடைக்கும் பிற்காலத்திய கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது.

அகப்பரிவாரம்,பரிவாரம் எனும் பெயர்கள் இன்றைய அகமுடையார் சாதியினரைய்யே குறிப்பதாக பல்வேறு வரலாற்றிஞர்களும் குறித்துள்ளனர். மேலும் இக்கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படும் அகப்பரிவாரத்தை சேர்ந்த பாண்டிய தேவனுக்கு , தேவன் பட்டமும் முதலி பட்டமும் இருந்துள்ளதை கல்வெட்டு வரிகளே எடுத்துக்காட்டுகின்றன.
பரிவாரம் என்ற பெயர் கல்வெட்டு காலம் முதல் சமீப காலம் வரை அகமுடையார் மற்றும் யாதவர் சமூகத்தினருக்கு பயன்பாட்டில் இருந்துள்ளது. அப்படி இருக்கையில் இந்த குறிப்பிட்ட கல்வெட்டு அகப்பரிவாரம் என்று அகமுடையாரை குறிக்கிறதா அல்லது யாதவர்களை குறிக்கிறதா என்ற கேள்விக்கு விடையை கல்வெட்டு வரிகளில் உள்ள தேவன் மற்றும் முதலி பட்டம் நமக்களிக்கின்றது.
ஏனென்றால் முதலி பட்டம் யாதவர்களுக்கு இல்லை என்பதை கொண்டே இது அகமுடையார்களை குறிக்கிறது என்பதை இருமுறை உறுதியாக சொல்லலாம்.

அகமுடையார்களுக்கான பரிவாரம் என்ற பெயர் யாதவர்களான பாண்டியர்கள் வழியாக சில யாதவர்களுக்கும் வெகுகாலம் பின்பு பரவியுள்ளதை அறிய முடிகின்றது.

இன்னும் நிறைய செய்திகளை சொல்ல வேண்டுமென்ற ஆசை தான். ஆனால் வேலைப்பளுவும் ,நேரமின்மை காரணமாக இத்தோடு முடிக்கின்றோம்.

வணக்கங்களுடன்
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமை

நன்றி
குறிப்பிட்ட இந்த கல்வெட்டு செய்தியினை நாம் ஆராய்வதற்காக நம் பார்வைக்களித்த அகமுடையார் அரண் நிறுவனர்
திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி! அகமுடையார் வரலாறு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி ,சேகரித்து தொகுத்துவரும் இவரது முயற்சிகளை ஆதரிக்க வேண்டுமாய் அகமுடையா சமுதாய உறவுகளை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.

இணைப்புகள்
படம் 1,2,3- புகழ் அழித்த பாண்டிய தேவன் கல்வெடு
4- அகப்பரிவாரத்து பிள்ளையார் அழகப்பெருமாள் அவணி நாராயன தேவன், பிரன்மலை கல்வெட்டு
5- பெருமாள் என்ற பெயர் விளக்கம்- நூல் : பாண்டிய பெருவேந்தர் காலம்,தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
6- பரிவாரம் என்ற பட்டம் ( நூல் : இந்தியாவில் யாதவர் குலங்கள்)
7-அகப்பரிவாரம் பெயர் விளக்கம் (நூல்: பாண்டியன் டவுன்ஷிப்ஸ், திருமலை ,தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடுஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments
  1. நன்றி சகோதரரே வாழ்க வளமுடன் 🙏🙏 என் பெயர் சிவா துரைசாமி பக்தர் எடப்பாடி வட்டம் சேலம் மாவட்டம் 🐬 பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் சிவா பக்தர் 🐠🐠🐋🦈🦈

  2. மிகவும் சிறப்பான செய்திங்க உறவே. ஆனால் இன்று நம் இனத்தவர் யாரும் பெருமாள் என்ற பெயரை உபயோகிப்பதே இல்லையே. நமது உறவுகள் பெருமாள் என்று பெயரும் வைப்பதில்லை. ஒருவேளை மறந்திருப்பார்களா அல்லது மறைக்கப்பட்டு விட்டதா…!

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?