First
அகம்படியராகிய துளுவ வேளாளர் -நேரடி கல்வெட்டு கிடைத்துள்ளது விரைவில் வெளிவரும்
——————————————
அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவாகிய துளுவ வேளாளர்கள் வடதமிழகத்தில் இரத்த உறவுகளாக வாழ்ந்துவருகின்றனர்.
அகமுடையார் துளுவ வேளாளர் என்ற பெயரில் சங்கங்கள் பல இன்றும் இயங்கி வருகின்றன.
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அகமுடையார் துளுவ வேளாளர்களும் ஒரே எண்ணில் ஒன்று என்று அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் மதிப்புமிக்க வரலாற்று அறிஞர்களான திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திரு. இல.தியாகராசன் அவர்களும் அகமுடையாரின் உட்பிரிவே துளுவ வேளாளர்கள் என்று தங்கள் நூல்களில் பல்வேறு இடங்களில் உறுதியாக குறிப்பிட்டுள்ளனர். இந்த இரு தொல்லியல் அறிஞர்களும் துளுவ வேளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழுக்காக வேறு சாதியாக இருந்து துளுவ வேளாளர் என்று சான்றிதழ் வாங்கியுள்ள போலிகளும், , அகமுடையார் பிரிவாகிய துளுவ வேளாளரையும் தங்கள் பக்கம் இணைத்துக்கொண்டால் தங்கள் மக்கள் தொகை கூடும் என்பதாலும் வேளாளர் பெயரில் அரசியல் செய்யும் சில அவமான சின்னங்களும் அகமுடையாரின் உட்பிரிவான உட்பிரிவாகிய துளுவ வேளாளர்களுக்கும் அகமுடையார்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற குழப்ப அரசியலை உருவாக்க முனைவதாக தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே சொன்னது போல் வாழ்வியல் சான்றுகள், சங்க பெயர்கள், வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள்,அரசு அறிக்கைகள் அகமுடையார் துளுவ வேளாளர் ஒன்றே என்பதை காட்டுகின்றது என்பதையெல்லாம் தாண்டி, தற்போது இதற்கு நேரடி கல்வெட்டு சான்றும் கிடைத்துள்ளது.
ஆம்! வடதமிழகத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு செய்தியில் ” அகம்படியரான துளுவ வேளாளரும்” என்ற நேரடி கல்வெட்டு செய்தி பதிவாகியுள்ளது. ஆகவே இந்த பொய்யர்களின் போலி பரப்புரையை வாயடைக்க செய்யும் நேரடி ஆதாரம் கிடைத்துள்ளது.
அது விரைவில் வெளிவரும்! காத்திருங்கள்! பொய்யர்களின் இழிபிறவிகளின் முகத்திரையை கிழிப்போம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்