First
விழலுக்கிறைத்த நீரானதோ நம் முயற்சி
—————————————-
நமது பக்கத்தை இதுவரை கிட்டத்தட்ட 8000 (சுமார் 7800 பேர் ) வரை லைக் செய்துள்ளார்கள்.
பக்கத்தை லைக் செய்தவர்கள் அனைவரும் நம் பதிவுகளை லைக் செய்வார் என்று சொல்லமுடியாது. ஒரு பதிவு உடனே அனைவரையும் சென்றும் சேராது (பேஸ்புக் டிசைனே அப்படித்தான்)
ஆனால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்தவர்களில் 10% ஒரு பதிவை லைக் செய்தால் கூட அது 800 பேர் பதிவை லைக் செய்திருக்கலாம்.
சரி மிக மிக குறைவாக 1% லைக் செய்தால் கூட ஒவ்வொரு பதிவையும் குறைந்தது 80 பேர் லைக் செய்திருக்க வேண்டும்.
ஓவ்வொரு பதிவிற்கும் வருடக்கணக்கான அனுபவத்தை கொண்டு மாதக்கணக்காண தேடல் செய்து பல நாட்கள் செய்திகளை சேர்த்து,நீக்கி,பொருத்தி பார்த்து,எழுதி தான் பதிவு உருவாகின்றது. ஆனால் கிட்டத்தட்ட 8000 லைக்குள் இருக்கும் இந்த பேஸ்புக் பக்கத்தில் நாம் இடும் பதிவுகளுக்கு சராசரியாக 30 முதல் 40 பேர் தான் லைக் செய்கிறார்கள்.
மேலும் பதிவுகளை ஒரிவரே சேர் செய்கிறார்கள் அதானால் பதிவும் நமது பக்கத்தில் மட்டுமே சுழல்கிறது .
இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று தோன்றுகிறது.
அகமுடையார்களுக்கு வரலாற்றில் பெரிதாக ஆர்வம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே தான் எண்ண வேண்டியிருக்கிறது..
இதே உழைப்பை மற்ற விசயங்களில் செய்திருந்தால் தனிபப்ட்ட முன்னேற்றமோ அல்லது மாற்று சமுதாயங்களை சேர்ந்தவர்கள் வரலாற்று பதிவுகளை இது போல் செய்திருந்தால் அச்செய்தியை எவ்வளவு தூரம் வெளியே கொண்டு சென்றிருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
ஆகவே முடியும் போது எழுதுகின்றோம்…
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்