வாணாதிராயர் அகமுடையார்களே -தாய்லாந்தில் கிடைக்கும் ஆதாரம்———————-…

Spread the love

First
வாணாதிராயர் அகமுடையார்களே -தாய்லாந்தில் கிடைக்கும் ஆதாரம்
—————————————————–
தாய்லாந்தின் நாட்டுப்புற அல்லது புராணங்களில் Chao Krung Bhali (เจ้ากรุงพาลี) எனும் பலி வழிவந்தவர் இறைவனாக குறிப்பிடப்படுகிறார். இவர் பூமியை பாதுகாப்பவராகவும் குறிப்பிடப்படுவதோடு இறை இல்லத்தின் (அரண்மனையை) பாதுகாவல் கடவுளாகவும் குறிக்கப்படுவதாக தாய்லாந்து புராணங்கள் குறிக்கின்றன.

ஏற்கனவே திருவல்லம் ஊரில் கிடைத்த கி.பி 9ம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டு செய்தியில் மாவலி வாணதிராயர்கள் தங்களை சிவபெருமானுக்கு வாயிற்காவலனாக (ப்ரதிஹாரீ க்ருத) மஹாபலியின் குலத்தில் வந்தவன் என்று கூறியுள்ளதை ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.
பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்!

https://www.facebook.com/100063919813164/posts/470780361729287

ஆகவே அகம்படியர்களை அவர்கள் தொழிலாக குறிக்க பயன்பட்ட பதத்தையே மகாபலி வழிவந்த வாணாதிராயர்கள் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர் என்பது தாய்லாந்தில் கிடைக்கும் சான்றுகள் மூலமாகவும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

அதுமட்டுமல்ல மகாபலி வழிவந்த வாணாதிராயர்கள் தங்கள் அரசகொடியாக கருடக்கொடியை கொண்டிருந்தது போல ,மஹாபலி வழிவந்ததாக அறியப்படும் தாய்லாந்தின் ராஜவம்சமும் வாணாதிராயரின் கருடக்கொடியை கொண்டுள்ளது.

அதுமட்டுமல்ல சோழர்களை போல ,கண்டி,கம்பளை அரசவம்சங்களை போல தாய்லாந்து அரசகுடும்பத்தினரும் அகம்படியர்களின் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களையே தங்கள் கொடி ,உடை உட்பட அனைத்து அடையாளங்களில் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல சிவனின் அம்சமாகவும் கயிலையில் காவல் செய்யும் அகம்படி நந்தி தேவர் உருவம் கொண்ட ( மனித உடலும் காளை உருவமும் கொண்ட கடவுள் ) காக்கும் கடவுளாக தாய்லாந்து புராணங்கள் கூறுகின்றன. இதுவும் நம்முடன் ஒத்துப்போகின்றது.

மகாபலி அரசர்கள் இலங்கை, இந்தோனேசியா ,கம்போடியா என்று உலகமெங்கிலும் தங்கள் முத்திரையை பதித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

அதே நேரம் வாணாதிராயர்கள் அகமுடையார்கள் என்பதை சில வருடங்கள் முன்பே ஒன்றிரன்டு ஆதாரத்துடன் கூறியிருந்தோம். தற்போது இது குறித்து விரிவான பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கமான காணொளி விரைவில் வெளியிட உள்ளோம்.

இந்த வீடியோ வரும் போது உடன் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் நமது அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.

https://www.youtube.com/agamudayarotrumai

அதே போல் அகமுடையார் சமுதாய நிகழ்வுகள், வரலாற்று தகவல்களை உடனே பெற
அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .

https://play.google.com/store/apps/details…

லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community

நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!

இணைப்புகள்
1- மஹாபலி பற்றிய விக்கிபிடியா பக்கம் ( விக்கிபிடியா குறிப்பிட்டுள்ள மூல ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் அதையும் இணைப்போம்)
2- தாய்லாந்து அரசனின் கொடி
3- சிவப்பு மற்றும் மஞ்சள் உடையில் தாய்லாந்து அரசர் 10ம் ராமா





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo