First
எனக்குத் தெரிந்து இது நாள் வரை ரஜினிகாந்த் வாரம் , சிநேகா வாரம் என்று வெறும் திரைப்பட நடிகர்/நடிகளைகளுக்கு சிறப்புத் திரைப்படங்களை ஒளிபரப்பி வந்த தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் இன்று தான் ஒர் நல்ல காரியத்தைச் செய்தன!
மருதுபாண்டியரின் பிறந்த நாளான இன்று கவிஞர் கண்ணதாசனின் இயக்கத்தில் வெளியான மருதுபாண்டியரின் திரைக்காவியமான சிவகங்கைச் சீமைத் திரைப்படங்களை வசந்த் டிவி மற்றும் பாலிமர் டிவி என இரு தமிழ் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின!ஒருவகையில் இது நாள் வரையில் தமிழ்த் தொலைக்காட்சிகள் நம் தமிழ் சமுதாயத்திற்கு செய்து வந்த ஓரவஞ்சனைக்கு இந்த இரு தொலைக்காட்சி சேனல்களும் ஒர் பிராயச்சிம் செய்தது எனலாம். மற்ற தொலைக்காட்சிகளும் நல்லதொரு பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புவோம்.
எவ்வாறாகிலும் தமிழ்நாட்டு விடுதலை வீரர்களான மருதுபாண்டியர்களின் பிறந்த நாளில் அவர்கள் நினைவுகூறும் விதமாக நல்லதொரு படத்தினை ஒளிபரப்பு செய்தமைக்காக தழிழ்கூறும் நல்லுலகம் சார்பாக எங்கள் நன்றிகள்!
புகைப்பட உதவி: அண்ணன் Venkatesh Ogun
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்