சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார்…

Spread the love

First
சென்னை அருகில் உள்ள திருநின்றமலையில் கிடைக்கப்பெற்ற விஜய நகர பேரசரான சயன உடையார் எனும் முதலாம் புக்கன்ன உடையார் காலத்திய கல்வெட்டு( 14ம் நூற்றாண்டு கல்வெட்டு) அகம்படியார்களுக்கு விதிக்கப்பட்ட தண்டம் குறித்து பேசுகிறது.

இக்கல்வெட்டுச் செய்தியின் படி திருநின்றமலை அருகில் உள்ள படுவூர் என்ற ஊரின் தலைவர்களான
சேதிராயன்,காலிங்கராயன்,ஆதித்தன் உள்ளிட்ட அகம்படியார்கள் தங்கள் காவல் பணியை கைவிட்டதனால் பல சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்பட்டதையும் அதனால் குறிப்பிட்ட அகம்படியார் இனத்தைச் சேர்ந்த ஊர்தலைவர்களும் அவர்களின் கீழ் பணிபுரிந்த அகம்படியார்கள் என 48 அகம்படியார்களுக்கு தண்டம் விதிக்கப்பட்ட செய்தியும் குறிக்கப்பட்டுள்ளது!

இக்கல்வெட்டுச் செய்தியின் மூலம் வடதமிழகத்தில் பெரும்பாலான அகம்படியார்கள் 8ம் நூற்றாண்டுக்கு முன்பே வேளாண்மைக்குச் சென்று விட்ட போதிலும் குறிப்பிட்ட அளவிலான அகம்படியார்கள் தொடர்ந்து தங்களின் பூர்வீக காவல் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த செய்தியை அறிய முடிகின்றது!

நெடுநாட்களாக காவல் பணியில் ஈடுபட்ட வந்த இவர்கள் திடீரென்று தங்கள் பணியை உதறியதற்கான காரணம் தெரியவில்லை என இக்கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.ஊர்தலைவர்களாக அதிகாரமும் பெரும் வருமானம் வரக்கூடிய ஊர்காவல் பணியை ஏன் கைவிட்டனர் என்பது குறித்து தெரியவில்லை. ஒருவேளை விஜயநகர அரசின் மேலாண்மையை ஏற்காமல் இதைச் செய்தார்களா என்பது ஆராய்ச்சிக்குரியது!

மேலும் அகமுடையார்களுக்குரிய சேதிராயன்,காலிங்கராயன் எனும் பாரம்பரியப் பட்டங்களோடு ஆதித்தன் என்ற பட்டமும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆதித்தன் பட்டம் சோழர் தொடர்பானதாக இருக்கலாம்(மேற்கூடிய பட்டங்களை அகமுடையார்கள் பயனபடுத்திய சான்றுகள் வேறு ஒரு நாளில் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் வெளியாகும்)

ஆதாரம்: The Early History Of The Madras Region 1957 பக்கம் 144-145




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo