First
அங்கப்போர்(அங்கம்போரா) கலையை இலங்கையில் உருவாக்கிய அகம்படியர்கள்- முன்னோட்டம்
——————————-
இருநாட்கள் முன்பு சேர் செய்த அங்கம்போரா ப்ரோமோ வீடியோ பார்க்காதவர்கள் முதலில் வீடியோவை பாருங்கள். பின்னர் கட்டுரையை படிக்கலாம் (அப்போது தான் சில விசயங்கள் புரியும் என்பதால்)
அங்கம்போரா எனும் பிரபலமான தற்காப்புக்கலை இலங்கையில் சிங்களர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையில் இது தமிழர்களால் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அகம்படியர்களால் உருவாக்கப்பட்ட தற்காப்புக்கலையாகும்.
புராணத்தில் வரும் இராவணன் தான் அங்கம்போரா தற்காப்புக்கலையை உருவாக்கியதாக சிங்களர்கள் நினைத்துக்கொண்டு அல்லது தெரியாமல் பேசிவருகிறார்கள்.
இராவணன் 30,000 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்ததாக சிங்களர்களே சொல்கிறார்கள்.
ஆனால் அங்கம்போரா தற்காப்புக்கலை பற்றிய தரவுகள் இலங்கையில் கி.பி 11ம் நூற்றாண்டிலிருந்து குறிப்பாக சோழர்கள் படையெடுப்பில் அகம்படியர்கள் இடம்பெற்ற காலத்தில் இருந்தே தொடர்ந்து கிடைக்கின்றன. 30,000 ஆண்டுக்கு முன்னர் உருவாக்கிய கலை என்றால் இதைப்பற்றிய குறிப்புகள் ஏன் 28,000 வருடங்களாக இல்லை என்பது கேள்வி! இதையே சிங்களர்களே கேள்வி எழுப்புகிறார்கள். இதை அடுத்து பார்ப்போம்.
முதலில்
அங்கம்போரா என்ற இந்த தற்காப்புக்கலையின் பெயரில் உள்ள “போர்” என்கிற வார்த்தையே இது தமிழ் முறையை சார்ந்தது என்று அறிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமல்ல பெரும்பான்மையாக பெளத்தர்களாகவும் சிறு பகுதி கிறிஸ்தவராகவும் உள்ள சிங்களர்கள் இன்றும் தங்களது அங்கபோரா பயிற்சியின் போது நடராஜரையும் பெண் தெய்வத்தையும் வணங்குகின்றனர்.
பார்க்க வீடியோ: https://www.youtube.com/watch?v=ueGDjCHfg4g
அதே போல் இதே வீடியோவில் சிங்கம் மேல் அமர்ந்த இந்து பெண் தெய்வத்தை வணங்குவதை காணலாம். யார் எந்த பெண் தெய்வம்? சிங்கத்தில் அமர்ந்திருப்பதை வைத்தே இது , கொற்றவை என்றும் நிசும்ப சூதனி என்று பெயரில் வழங்கி வரும் போர் தெய்வம் என்பதை புரிந்து கொள்ளலாம். நடராஜர் சிலையையும் இந்த பெண் தெய்வத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இவர் நிசும்ப சூதனி என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.
அது சரி பெளத்தர்களான சிங்களவர்கள் ஏன் தங்கள் தற்காப்புக்கலையின் போது இந்து தெய்வத்தை வணங்க வேண்டும்?
சோழர்களின் நடராஜர் ,சோழர்களின் நிசும்ப சூதனி தெய்வம் போன்றவற்றை இணைத்துப்பார்த்தால் இந்த அங்கம்போரா தற்காப்புக்கலை சோழ நாட்டு வீரர்களால் பின்பற்றப்பட்ட பயிற்சி முறை அதையை தான் இன்றும் இவர்கள் பின் தொடர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அடுத்து சோழர் படையினரில் இதை யார் உருவாக்கியிருக்க கூடும்! இதைக்காண்போம்!
அங்கப்போர் என்பதை தமிழ்நாட்டில் வாழ்ந்த அங்கக்காரர்கள் என்போரே கல்வெட்டு போன்ற முதன்மை ஆதாரங்களை மேற்கோள் காட்டி கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் எப்போதும் வென்றான் என்ற ஊருக்கருகில் சோழபுரம் ஊரில் கிடைத்த கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியில் அவ்வூரில் வசித்த
அங்கக்காரர்களில் ஒருவனான கொற்றன் குடியனான கலங்காத கண்டப் பேரையன் என்பவன் இறந்து போன தனது மகனின் நினைவாக சமாதி எழுப்பியுள்ளார். பின்னர் அங்கக்கார்கள் வணிகம் செய்த நகரத்தாரிடமிருந்து ஓர் நிலத்தை வாங்கி பூசை செலவீனங்களுக்காக அந்த நிலத்தை நகரத்தார் வசம் ஒப்படைத்துள்ளார். குறிப்பிட்ட அந்த அங்ககக்காரர்கள் பரிக்கிரகத்தை சேர்ந்தவர்கள் என்பது அந்த கல்வெட்டு செய்தியின் மூலம் தெரியவருகின்றது.
இதில் பரிக்கிரகத்தை சேர்ந்தவர் என்பது மூலமே இவர்கள் அகம்படியர் (இன்றைய அகமுடையார்) இனத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆம் பரிவாரம், பரிவாரத்தார் என்பது இன்றைய அகமுடையார்களை குறிக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை நம் அகமுடையார் ஒற்றுமை தளத்தால் பலமுறை விளக்கியுள்ளோம்.
அதே போல் அடுத்து குறிப்பிட்ட அந்த அங்கக்காரர் என்பபோர் கொற்றன் குடி என்று அழைக்கப்பட்டதை மேலே சொன்ன குறிப்பிடுகின்றது.
இதே பகுதியில் கிடைத்த மற்றோரு கல்வெட்டு செய்தியின் மூலம் அழகிய பாண்டிய விழுப்பரையுடன் பணியாற்றியவர்களில் அகம்படிய இனத்தவர்களில் கொற்றன் விரதம்முடித்தான் போன்ற பெயர்கள் இடம்பெறுவதை காணலாம்.
பரிக்கிரகத்தார் எனும் அகம்படியர்க்குறிய பெயர் கொண்டும் , கொற்றன்குடி என்று அகம்படியர் இதே பகுதியில் அழைக்கப்பட்டதை கொண்டும் குறிப்பிட்ட இந்த அங்கக்கார்கள் அகம்படியர் இனத்தவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
அடுத்து
இந்த அங்கக்காரர்கள் வணிகர்களுக்கு பாதுகாவலாக செல்பவர்கள் வணிகர்களின் சில கல்வெட்டுக்களில் அங்கக்கார்கள் காணப்படுகிறார்கள். இவர்கள் அகம்படியர்கள் எனும் பேரினத்தின் ஓர் பிரிவினர் அகம்படியர்கள் 2000ம் வருடத்திற்கும் மேலாக வணிக பாதுகாவல் படையாக பணியாற்றியதை கி.பி 2ம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டு போன்ற கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
நகரத்தார் எனும் வணிகப்பிரிவினருடன் அகம்படியார்கள் தொடர்ந்து வருவதை பல்வேறு கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த அகம்படியார் பேரினத்தில் வணிக பாதுகாவல் குழுவாக பணியாற்றியவர்களிடம் ஏழகத்தார், எழுநூற்றுவர்,முன்னூற்றுவர் ,அங்கக்காரர் போன்ற பல்வேறு பிரிவுகள் இருந்துள்ளனர். அகம்படியார்களில் அங்கக்காரர் என்போர் மிகவும் நுட்பமான போர்கலை பயிற்சியை கொண்டிருந்தனர். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக போரில் ஈடுபட்டதாலும் , பாதுகாவல் செய்வதாலும் இவர்களில் ஓர் பிரிவினர் தேர்ந்த வீரர்களாகி இவர்கள் தற்காப்புக்கலையும் , நுட்பமான தேர்ந்த போர் கலையையும் உருவாக்கியுள்ளனர்.
இன்றும் கேரளாவில் இருக்கும் வடக்கன் களரி ஆசான்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் அகம்படிய நாயர் பிரிவினர் ஆவர். அதே போல் இலங்கையிலும் அங்கம்போரா என்ற பயிற்சியை பூர்வீகமாக பயிற்றுவித்தவர்களும் அகம்படிய பிரிவினரான ஹெவபண்ணே என்பவர்கள் ஆவர் .இவர்கள் தமிழ் அகம்படியர்களுக்கும் , சிங்கள சாலகமா இன பெண்களுக்கும் பிறந்தவர்கள் ஆவர். அகம்படியர் வருகைக்கு முன்பு நெசவாளர்களாகவும் , வாசனை பட்டை உரிப்பவர்களாகவும் , மதகுருக்களாகவும் மட்டும் அறியப்பட்ட இந்த சாலகமா பிரிவினரில் ராணுவ பிரிவினர் (சத்திரிய குலத்தவர்) என்ற பிரிவு தோன்றிற்று. இன்றும் சாலகமா சாதியில் ஹெவபண்ணே பிரிவினரே சத்திரிய குலத்தவர் ஆவர் . இந்த அகம்படியர்கள் இன்றும் தங்கள் பெயருக்கு பின்னால் அகம்பொடி என்ற பின்னோட்டுடன் அழைக்கப்படுகின்றனர்.
Agampodi என்று பேஸ்புக் அல்லது இணையத்தில் தேடினால் அகம்படிய இனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான இன்று சிங்களர்களாக மாறி உள்ளவர்களை காண முடியும். போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக அகம்படியர்கள் அங்கப்போரா எனும் போர்கலையை பின்பற்றி சன்டையிட்டனர் என்று சிங்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
வரலாற்று நோக்கில் வர்மக்கலை என்ற பெயரில் எஸ். இராமச்சந்திரன் எனும் வரலாற்றிஞர் வர்மக்கலையையும், அங்கக்கார் பற்றியும் ஆய்ந்து கட்டுரை எழுதியுள்ளார்.
http://www.sishri.org/varmam.html
இக்கட்டுரையில் அங்கக்கார் என்போர் தமிழ்நாட்டிலேயே இன்று நாடார் என்று அறியப்படும் சாதியினரும், அகமுடையார் என அறியப்படும் அகம்படியர் சாதியினர் மட்டுமே என்று எழுதியிருப்பார்.
பார்ப்பனரான வரலாற்றிஞர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் நாடார் சாதியினருக்காக பணியாற்றுவர் நாடார்களை ப்ரோமோட் செய்ய எழுதப்பட்ட கட்டுரை என்றாலும் அங்கக்கார் என்போர் அகம்படியர்கள் என்பதை குறித்திருப்பார் . இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் அங்ககார்கள் அகம்படியர் என்பவரே என்பதற்கு மட்டுமே வலுவான ஆதாரங்களை அக்கட்டுரையில் காட்டி இருப்பார். ஏன் என்றால் அங்கக்கார் என்போர் அகம்படியர் தான் .
உலகத்திலேயே ஓர் இனம் 2000 வருடங்களுக்கு மேலாக போர் தொழிலை இடைவிடாது தொய்வில்லாமல் செய்து வந்துளது என்றால் அது அகம்படியர் இனம் தான். அதுவும் எழுதப்பட்ட ஆதாரங்களை தொடர்ச்சியாக 2000 வருடங்களாக கொண்டுள்ளது. அதையெல்ல்லாம் ஓர் நாள் ஒவ்வொன்றாக வெளியிடுவோம்.
குறிப்பிட்ட திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டங்களில் அகம்படியர்களை குறிப்பிடும் பல்வேறு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தங்கள் பூர்வீக ஊர்களில் இருந்து தொலைவில் வசித்ததால் அங்கு வாழ்ந்த அகம்படியர்கள் பலர் அங்கு வாழ்ந்த மற்ற சமுதாயத்து பெண்களை திருமணம் செய்து இன்று வேறு சாதியில் கலந்துவிட்டனர். ஆனாலும் இன்றும் இதே ஊர்களில் அகம்படியர்கள் பூர்விகமாக வாழ்ந்து வருகின்றனர். அகம்படியர்களாகவும் அகம்படியர்களின் பிரிவாகிய துளுவ வேளாளர்களாகவும் இன்றும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். அவற்றை மற்றொரு கட்டுரையில் காண்போம்.
குறிப்பு:
இந்த கட்டுரை குறித்த மேலதிக பல ஆதாரங்களை திரட்டியுள்ளோம். ஆம் அதற்கே பல வருட உழைப்பு தேவைப்பட்டுவிட்டது. ஆராய்வதும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஆதாரங்களை தேடி சேர்ப்பது என்பது என ஒவ்வொரு கட்டுரைக்குமே பல நாட்கள் தேவைப்படுவதால் நிறைய விசயங்களை ஒரே நேரத்தில் பேச முடிவதில்லை. அகமுடையார் சமுதாய மக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இதை விரிவாக ஆராய்ந்து நிறைய தரவுகளோடு
ஒருநாள் நிச்சயம் அனைத்தும் பதிவு செய்வோம்!
இணைப்புகள்:
1-4: இந்த பதிவின் வீடியோவில் (சிங்கள பெளத்தர்களின் அங்கம்போரா ) இடம் பெறும் சோழர்களின் நடராஜர் மற்றும் நிசும்பசுதனி வழிபாடு

5- சோழர் காலத்து நிசும்பசூதனி ( வீடியோவில் உள்ள நிசும்பசுதனி உருவத்தோடு ஓப்பிட்டுப்பார்க்க)
6- எஸ். இராமச்சந்திரன் அவர்கள் எழுதிய sishri.org இணையதளத்தில் எழுதிய ”
வரலாற்று நோக்கில் வர்மக்கலை
” கட்டுரையின் குறிப்பிட்ட பகுதி

7- கல்வெட்டு ஆண்டறிக்கை ( இது எந்த வருடத்தியது என்பதை மறந்துவிட்டோம் , மற்றொரு பதிவில் இதை கண்டுபிடித்து தெரிவிக்கின்றோம்) இந்த ஆண்டறிக்கை குறிப்பை நாம் ஆய்வு செய்ய வழங்கியவர் அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் (அவருக்கு நமது நன்றிகள்) .
8- மற்றொரு அங்கக்காரன் கல்வெட்டு குறித்து முனைவர்.நிரஞ்சனா தேவி என்பவர் எழுதிய கட்டுரை
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்