சேந்தங்குடி ஜமீன் -வன்னிய பிரிவை சேர்ந்த அகமுடையார் சாதி ———————…

Spread the love
0
(0)

சேந்தங்குடி ஜமீன் -வன்னிய பிரிவை சேர்ந்த அகமுடையார் சாதி
——————————
அகம்படியர் (இன்றைய அகமுடையார்) சாதியில் பல்வேறு பிரிவுகள் இருந்துள்ளன. அதில் ஒன்று தான் வன்னியர் எனும் பிரிவாகும். இந்த வன்னியர் என்ற சொல் இவர்கள் அரசர்கள்,வலிமையானவர்கள் என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது.

அகமுடையாரில் வன்னியர் என்ற பிரிவு,பட்டம் போன்றவை இருந்ததற்கு நிரம்ப ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இப்பதிவில் ஓர் அறிமுகம் மட்டும் பார்ப்போம்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ளது தானவநாடு ஆகும்.இப்பகுதியில் சேந்தங்குடி எனும் ஊரை தலைமையிடமாக கொண்டு சேந்தன்குடி ஜமீன் எனும் அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.
இந்த சேந்தன்குடி ஜமீன்களின் பழைய நிலப்பத்திரங்கள் அனைத்தும் சாதி அகம்படியர் என்று குறிப்பிடுகின்றன.இவற்றை பற்றி ஏற்கனவே ஓர் பதிவை செய்துள்ளோம் .

பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்க வேண்டுகிறோம்.
https://www.facebook.com/100063919813164/posts/657517533055568

https://www.facebook.com/100063919813164/posts/713096267497694

நிலப்பத்திரங்கள் மட்டுமல்ல இந்த ஜமீனின் தற்போதைய வாரிசுகளின் பள்ளி கல்வி சான்றிதழ்களும் அகமுடையார் சாதி என்றே பெறப்பட்டுள்ளன(வேண்டுமென்றால் அதையும் பதிவிடுவோம்)

இந்த சேந்தன்குடி ஜமீன் பெயரில் “சின்ன வன்னியனார் பண விடு தூது” என்ற நூல் 1800களில் அல்லது அதற்கு முற்பட்ட காலங்களில் இயற்றப்பட்டுள்ளது. ஓலை வடிவில் இருந்த இந்த நூலை தமிழ் தாத்தா உவேசு ஐயர் பெற்று பிற்காலத்தில் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தாரார் நூலாக வெளியிட்டுள்ளனர்.

இந்த அரசர்கள் வழுவாடி என்றும் தேவர்,சேர்வை பட்டம் கொண்டவர்கள். அகமுடையாரில் வன்னியர் பிரிவை சேர்ந்தவர்கள்.

இதற்கு ஆதாரமாக நீதிமன்ற ஆவணம் ஒன்றை இப்பதிவில் வைக்கின்றோம்.
1940கள் காலத்தில் அகம்படியர் சாதியை சேர்ந்த சேந்தங்குடி ஜமீன் உறவுகள் பட்டுக்கோட்டை மழவராயர் கங்காணியார் எம்.கே .சொக்கலிங்கம் பிள்ளை எனும் அகம்படியருக்கு ஜமீனை எழுதி கொடுத்து விட்டனர்.

இதுகுறித்து பின்னாளில் வழக்கு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஏற்பட்டது. இவ்வாறான
வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்த போது வைக்கப்பட்ட சாட்சிகள் (வாத பிரதிவாதங்கள்) இது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவர் குறுக்கு விசாரனையின் போது சேந்தங்குடி ஜமீன்கள் அகம்படியர் சாதியையும் வன்னிய கோத்திரத்தையும் உடையவர்கள் என்றும் சாட்சியமளித்த தன்னுடைய குடும்பம்(அவருடைய கணவருடைய குடும்பம்) ஜமீனின் பங்காளி குடும்பம் என்றும் கொத்தமங்களம் கோவில் திருவிழாவின் போது முதல் தாம்பூழம்(வெற்றிலை) ஜமீனுக்கு அளிக்கப்படும் என்றும் பின் ஜமீன் தன்னுடைய கணவருக்கு அளிப்பார் எனவும், பின் அது மற்றவர்களுக்கு அளிக்கப்படும் ” என்றும் தனது சாட்சியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் சாதியை சேர்ந்தவர் என்பதற்கு நில ஆவண சான்றுகளை பார்த்திருப்பீர்கள். இப்பதிவில் சேந்தங்குடி ஜமீன்களுக்கு வன்னியர் பிரிவு என்பது இருப்பதை அறிவதன் வாயிலாக அகமுடையாரில் வன்னியர் பிரிவு இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சேந்தங்குடி மட்டுமல்ல இதன் அருகில் உள்ள அறந்தாங்கி அரசர்கள் நேமநாடு அரசர்கள் விசாயலயத்தேவன் உள்ளிட்டோர்களும் வன்னியர் பிரிவை சேர்ந்த அகம்படியர் சாதியினர் ஆவர். இவர்கள் அனைவரும் உறவினர் என்பதோடு திருமண உறவிலும் இணைந்திருந்தவர்கள் ஆவர் .
இவர்களின் வழியினர் இன்றும் அகம்படியர் சாதியினராக இப்பகுதியில் பெரும்பான்மையாகவும் ஆளும் வர்க்கமாகவும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:
இந்த நீதிமன்ற ஆவணத்தை திரட்டி நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது நன்றி!

திரு.பாலமுருகன் அவர்கள் சேந்தன்குடி ஜமீன்கள் அகமுடையார் ஜாதி என்பதற்கு மேலும் பல நிலப்பத்திர ஆவணங்கள், நீதிமன்ற சாட்சிகள் கையெழுத்துகள் போன்ற ஆதாரங்களை பெற்றுள்ளார் அவற்றையெல்லாம் வரும் காலங்களில் ஒவ்வொன்றாக பதிவிடுகின்றோம்.

அதேபோல அகம்படியர் சாதியில் வன்னியர் பிரிவு இருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் வரும் காலங்களில் வெளியிடுவோம்.

நீங்கள் அகமுடையார் சாதியில் வன்னியர் பிரிவை சேர்ந்தவர்களாகவோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அதற்கான ஆதாரங்கள் அல்லது தகவல்களை இப்பதிவின் கமேண்டில் தெரிவிக்கலாம் அல்லது 7200507629 என்ற எண்ணில் தொடர்புகொண்டோ வாட்ஸ்அப் செய்தியாகவோ தெரிவிக்கலாம்.

மேலதிக தகவல்
இப்பதிவு சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் ஜமீன் என்பதை விளக்கும் பதிவு அல்ல. ஏற்கனவே இதற்கு சான்றுகள் பல அளித்து விட்டோம். இன்னும் நூற்றுக்கணக்கான சான்றுகளையும் பதிவிட உள்ளோம். இப்பதிவு சேந்தங்குடி ஜமீன் அகமுடையார் ஜமீன் என்பதையும் அகமுடையாரில் வன்னியர் பிரிவு இருந்தது என்பதையும் ஒருங்கே விளக்கும் பதிவாகும்.

வன்னியர் என்பது அரசர்களை ,வலிமையானவர்களை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பெயராகும்,விஜயநகர ஆட்சியாளர்களை கூட கல்வெட்டுக்கள் வன்னியர் என்று அழைக்கின்றது. மேலும் இப்பெயர் பல்வேறு சாதியினருக்கு இருந்ததை அறிய முடிகின்றது. அதற்கான ஆதாரங்களும் பல உள்ளன. நாம் நமக்கான விசயத்தை மட்டும் பேச வேண்டும் தேவையில்லாமல் மற்றவற்றை பேசவேண்டாம் என்பதால் இதை இப்போது பதிவில் வெளியிடவில்லை.

தானவநாடு அகமுடையாருடையது என்பதற்கும் அதன் ஜமீன்கள் என்பதற்கும், அப்பகுதியில் பெருமையுடன் பல்வேறு பழம் பட்டங்களில் புகழுடன் வாழ்ந்தவர்கள் என்பதற்கும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஆயிரத்திற்கும்(1000க்கும் ) மேற்பட்ட நிலப்பத்திரங்கள் சாட்சியாக உள்ளன.அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்.

இதுபோல் வரலாற்றை திரட்டி அதை வெளியிடுவது சாதாரண பணி அல்ல. ஒருமுறைக்கு பல முறை இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் போக்குவரத்து செலவு, தங்கும் செலவு, உணவுக்கான செலவு , பொறுமையாக இருந்து பேசி , ஆவணங்கள் திரட்டி ( ப இடங்களை புகைப்படம் எடுத்து, ஆவணங்களை ஸ்கேன் செய்து ,ஜெராக்ஸ் செய்து ) என ஆவணங்களை பாதுகாக்க வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி நம்முடைய பொன்னான நேரம் ,வேலை வாழ்க்கையை இதற்காக செலவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் பெரும் பணி! சமுதாயம் இப்பணிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Agamudayar Otrumai
Logo
× How can I help you?