First
சோழர்களின் சாதி என்ன? காணொளி மறுபதிவேற்றம் செய்யப்பட்டது
————————-
28 வருடங்களுக்கு மேலான வரலாற்று வாசிப்பு அனுபவத்தையும் ,10 வருடங்களுக்கு மேலான அகமுடையார் வரலாற்று தேடல் அனுபவத்தையும் கொண்டு “சோழர்களின் சாதி என்ன ” என்பதை கண்டறிந்து காணொளி உருவாக்கியிருக்கிறோம்.
1 நிமிடம் எடிட் செய்தால் லேப்டாப் ஹேங்க் ஆகி திரும்பி ரிஸ்டார்ட் செய்து வீடியோ எடிட் செய்ய வேண்டிய சூழ்நிலை. 1 வாரம் தொடர்ந்து தினமும் தூங்க கூட நேரமில்லாமல் போராடி ஒரு வழியாக எடிட் செய்து முடித்து பின் இன்று , சோழர்களின் சாதி என்ன? என்ற காணொளியின் முதல் பாகம் புதிய வீடியோ அப்லோட் செய்துவிட்டோம்.
சென்ற முதல் பாகத்தில் 1 புதிய ஆதாரத்தை இதில் இணைத்துள்ளோம்.
காணொளிக்காக 5 மணி நேரத்திற்கும் மேலான ஒலிப்பதிவு செய்திருந்தோம். 5 பாகங்களாக வெளியிட முன்னர் திட்டமிட்டிருந்தோம். ஆனால் முதல் பாகத்திற்கே 1 வார காலம் தொடர் சிரமத்திற்காளாகிவிட்ட நிலையில் மீதியுள்ள பாகங்களை தயார் செய்து முடியாத நிலையில் உள்ளோம்.
ஆகவே இந்த முதற் பாகத்தை மட்டும் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளவும்.
நமது வீடியோவின் யூடிப் லிங்கை அப்படியே பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்,டுவிட்டரில் சேர் செய்து பகிர்ந்து கொள்ளவும்.
அப்போது தான் இந்த காணொளி குறித்த கேள்விகள் ஏதும் கேட்கப்பட்டால் அது குறித்து தெளிவான விடையை நாம் அளிக்க முடியும்.
குறிப்பு
சவுண்ட் எபெக்ட் ,பேகிரவுண்ட் இமேஜ் இவற்றையெல்லாம் வைத்து சிறப்பான காணொளி உருவாக்க ஆசை தான்.ஆனால் இருப்பதை எடிட் செய்யவே 1 வாரம் ஆகிவிட்ட நிலையில் இதையெல்லாம் செய்ய முடியாது என்பதால் தவிர்த்துவிட்டோம்.
நிறைய செய்திகளை அகற்றியும் கூட
முதற் பாகம் மட்டுமே 1.30 மணி நேரம் வந்துவிட்டது. ஆனால் தவிர்க்க முடியாதது .
நன்றி:
நம் ஆய்விற்கு கல்வெட்டுக்களை அளித்த அகமுடையார் அரண் நிறுவனர்திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது நன்றிகள்
மற்றும்.
நமது வீடியோவிற்கு
Thumbnail இமேஜ் டிசைன் செய்து அளித்த சகோதரர் அருண் பாலாஜ் அவர்களுக்கு நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்