First
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு- வெட்கங்கெட்ட வெள்ளாடுகளுக்கு பல சூடுகள்-
பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை அகம்படியர் சாதியே- மேலும் ஆதாரங்கள்.
————————————————–
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு(சுவடு) , நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்ற பழமொழி நம் நாட்டில் வழக்கத்தில் உண்டு.
ஆம் நல்ல மனிதர்களுக்கு ஒரு சொல் போதுமானது.
இராமநாதபுரம் பிரதானி பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை அகம்படியர் என்பதற்கு ஏற்கனவே ஆதாரங்களை வழங்கியிருந்தோம். இருப்பினும் இப்போதும் கூட சில சில வெட்கெங்கெட்ட வெள்ளாடுகள் பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளையை தங்கள் இனத்தவர் என எந்த ஆதாரமும் இல்லாமல் வெட்கமும் இல்லாமல் பேசி குழப்பம் செய்து வருகிறார்கள்.
அதை கண்டிக்கும் வகையிலும் உண்மையை எல்லோருக்கும் அறிவிக்கும் வகையிலும் மேலும் சில ஆதாரங்களை இப்பதிவில் அளிக்க இருக்கின்றோம்.
1) 1940ம் வருடத்திய மலேசிய இதழ் கட்டுரை
———————————————
இராமானுஜ பூபதி அல்லது எஸ்.ஆர்.எம் பூபதி பிள்ளை என்பவர் இராமநாதபுரம் பிரதானி பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளையின் வாரிசுகளில் ஒருவர் . கி.பி 1894ல் பிறந்தவர் . இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பின்நாட்களில் தன் சொந்த ஊரான இராமநாதபுரத்தில் இருந்து மலேசியா சென்று குடியேறி இறைப்பணியில் ஈடுபட்டதோடு சோதிட பலன்களை கணிப்பவராகவும் இருந்து வந்துள்ளார்.
1930-40களில் மலேசியாவில் இருந்து வெளிவந்த இதழ் ஒன்றில் இவரை பற்றிய வாழ்க்கை குறிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில் இராமானுஜ பூபதி எனும் எஸ்.ஆர்.எம் பூபதி பிள்ளை இராமநாதபுரம் அடுத்த சிருதலை எனும் ஊரை பூர்விகமாக கொண்டவர் என்றும் காரணவ ( படைத்தளபதி) அகம்படியார் குலத்தில் ஏழு தண்டிகை (பல்லக்கு) உடைய நல்லு சேர்வைக்காரர் மரபில் வந்த முத்திருளப்ப பிள்ளை மற்றும் வாலையம்மாள் ஆகியோருக்கு பிறந்தவர் என்றும் இவரது முன்னோர்( பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை) மந்திரி மற்றும் பிரதானி(படைத்தளபதி) பதவியில் இருந்த விவரமும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதில் இருந்தே இராமநாதபுர பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை அவர்கள் அகம்படியர் சாதியை சேர்ந்தவர் என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் இராமானுஜ பூபதி எனும் எஸ்.ஆர்.எம் பூபதி பிள்ளை அவர்கள் திருமணம் செய்தது சிவகங்கையை சேர்ந்த அகம்படியரான சீனி முருகப்பபிள்ளையின் மகளான ஶ்ரீவேலு லெட்சுமி அம்மாள் என்பவர் என்பதையும் இந்நூலில் தெளிவாக குறிப்பிடுகின்றது.
மேற்குறிப்பிட்ட சிவகங்கை வக்கில் சீனி முருகப்பபிள்ளை அவர்கள் அகம்படியார் டிஸ்கிரிட் சபை பிரசின்டாக விளங்கியவர் என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம். இருப்பினும் இப்பதிவில் இணைப்பு இதற்கான ஆதாரத்தை இணைத்துள்ளோம்.
ஆதாரம்:
1904ம் வருடம் வெளியிடப்பட்ட பாம்பன்_பால_சுப்பிரமணியசுவாமி_கோவில்_கும்பாபிஷேக_வழி_நடைச்சிந்து
பக்கம் எண்கள்
இந்த நூலை தமிழக அரசு இணையத்தில் பதிவிட்டுள்ளது. தகவலை சரிபார்க்க விரும்புவோர் கீழ்கண்ட லிங்கில் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம்.
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0004046_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.pdf
2) 1921ம் காலத்திய நில ஆவணப்பதிவு
—————————–
மேற்குறிப்பிட்ட இராமானுஜ பூபதி அல்லது எஸ்.ஆர்.எம் பூபதி பிள்ளை அவர்கள் குடும்பத்தில் 1921ம் வருடம் பாகப்பிரிவினை உடன்படிக்கையை பதிவு செய்துள்ளார்கள்.
இந்த ஆவணத்திலும்
இராமானுஜ பூபதி அவர்களை குறிப்பிடும் போது
இராமநாதபுரம் தாலுகா சிருதலை கிராமத்தில் வசிக்கும் லேட் முத்திருளப்ப பிள்ளை அவர்களின் மகனான முத்திருளாண்டிய பிள்ளை அவர்களின் மகனான முத்திருளப்ப பிள்ளை மற்றும் வாலையம்மாள் அவர்களுக்கு பிறந்தவர் என்றும் இவர்கள் சிவ மதம் காரணவ ( படைத்தளபதி) அகம்படியார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.
இந்த 1921ம் வருடத்திய பத்திர ஆவணம்,ஏற்கனவே பார்த்த மலேசியா இதழில் வெளியான கருத்துக்களை மெய்படுத்தும் சான்றுகளாக உள்ளன.
இராமநாதபுரம் பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளையின் வாரிசுதார்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முத்திருளப்பன் மற்றும் முத்திருளாண்டி போன்ற பெயர்கள் தொடர்ந்து வந்துள்ளது.
ஏற்கனவே நாம் கொடுத்த ஆவணங்கள் மற்றும் இப்பதிவில் புதிதாக நாம் அளித்துள்ள ஆவணங்களை கண்ணுறும் எவரும் பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளை அகம்படியர் இனத்தவர் என்பதை உறுதி செய்துகொள்ளலாம். இருப்பினும் தேவைப்பட்டால் வரும் காலத்தில் மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவோம் .
நன்றி:
இப்பதிவிற்கு தேவையான மூல ஆதாரங்களான
மலேசிய இதழ் கட்டுரை மற்றும் பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை வாரிசுகளின் நில ஆவணத்தின் படங்களை நமக்கு வழங்கிய அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஏற்கனவே கொடுத்த ஆதாரங்களை பார்க்காதவர்களுக்காக ஏற்கனவே செய்த பதிவுகளின் லிங்குகள் கீழே
பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளை வாரிசும் இராமானுஜ பூபதி அல்லது எஸ்.ஆர்.எம் பூபதி பிள்ளை அவர்களின் அண்ணனுமான மு.இராமச்சந்திர பூபதி பிள்ளை அவர்களுக்காக 1939 வருடம் விருதுநகர் அகம்படியர் வாலிபர் சங்கம் அளித்த வரவேற்பு பத்திரம்
https://www.facebook.com/agamudayarotrumai/posts/4301976793169011/
பொக்கிசம் முத்திருளப்ப பிள்ளையின் உறவினரும் பாம்பன் சாத்தப்பிள்ளை என்பவரின் மகனான பாம்பன் சுவாமிகள் எனும் குமரகுருதாச சுவாமிகள் அகம்படியரே
https://www.facebook.com/agamudayarotrumai/posts/4349323538434336
ஸ்ரீமான் எஸ்.ஆர்.எம்.பூபதி பிள்ளை, (மு.இராமானுஜ பூபதி பிள்ளை) அவர்களின் குடும்ப பாரம்பரிய மற்றும் வாரிசுகள்
https://www.facebook.com/story.php?story_fbid=3179328522324249&id=100007413972239
இப்பதிவில் இணைத்துள்ளவை
1-மலேசியா இதழில் வெளியான கட்டுரையின் ஓர் பகுதி (அடிக்கோடுகளுடன்)
2- மலேசிய இதழின் முழு கட்டுரை மற்றும் இராமானுஜ பூபதி அல்லது எஸ்.ஆர்.எம் பூபதி பிள்ளை அவர்களின் புகைப்படம்
3- 1921ம் வருடத்திய நில ஆவணம் (முன் பகுதி)
4- மேற்கண்ட நில ஆவணத்தில் பின் பகுதி( ஆவணத்தின் கைரேகைகள் புகைப்படத்தில் நீக்கப்பட்டுள்ளன) .
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்