வரலாற்றில் அகமுடையார், ஸ்ரீமான் எஸ்.ஆர்.எம்.பூபதி பிள்ளை, (மு.இராமானுஜ பூபதி பி…

Spread the love
5
(1)

First
வரலாற்றில் அகமுடையார்,

ஸ்ரீமான் எஸ்.ஆர்.எம்.பூபதி பிள்ளை, (மு.இராமானுஜ பூபதி பிள்ளை)
—————————————————

மேற்கண்ட கட்டுரையின் நாயகன், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பிரதானியாக வரலாறு படைத்த,
பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளை அவர்களின் வம்சாவழியினர் ஆவார்.

இவர் தென்னிந்தியாவில் சதுபேதிகள் தலைநகராகிய, இராமநாதபுரம் சீமையில், சிருதலம் (சிருதலை) என்ற சிற்றூரின் கண்ணே, “காரணவ அகம்படியர்” குலத்தில்,

வீசுபுகழ் கொண்ட ஜெயவீர வன்னி 32 பாளையப்பட்டு தளகர்த்தன், ஏழு தண்டிகை நல்லு சேருவைகாரர் மரபில்,

பிரதானி, பொக்கிஷம் முத்திருளப்பப் பிள்ளை (இராமநாதபுரம் சீமையின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு சிறந்த நிர்வாகியாவார்.) 1761-1775 முதல் 1780-1795) வரை உள்ள காலத்தில், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் ஆட்சிகாலத்தில், பிரதானியாக இருந்தார். பிரதானி என்பது முதல் அமைச்சர் பதவியாகும். அரசருக்கு அடுத்தபடியாக பிரதானிக்கு அதிகாரங்கள் இருந்தன.

முல்லை பெரியாறு அணை கட்டுவதற்குப் பொறியாளர் மேஜர் ஜான் பென்னிகுக் அவர்களே முழுக்காரணம் என்றாலும், முல்லை பெரியாறு நீரை, வைகையாற்றில் இணைக்கும் பணியினை ஆராய்ந்து, அதில் உள்ள சாத்தியக்கூறுகளை
விளக்கியவர்கள், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் பிரதான அமைச்சராக இருந்த பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளை அவர்களும், அவருடன் சென்ற 12 பேர்களை கொண்ட குழுவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட குழுவில் கேப்டன் ஸ்மித் ஆங்கிலேயர் உள்ளிட்ட அனைவரின் பரிந்துரை ஏற்கப்பட்டாலும், சமஸ்தானத்தின் பொருளாதார நெருக்கடியினால், 1789 இல் இத்திட்டம் கைவிடப்பட்டது. பிறகு நீண்ட முயற்சியினால் முல்லை பெரியார் அணை பின்பு கட்டப்பட்டது.

கொடிவழி,

1) பிரதானி –
பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளை – வீரகாளியம்மாள் (மனைவி),

(வீரகாளியம்மாள் – ஆலங்குளம் சிவபுத்திரன் சேர்வை மகள்).

2) ௸ புதல்வர் –
மு. முத்திருளாண்டியா பிள்ளை.

3) ௸ புதல்வர் –
மு.மு.முத்திருளப்ப பிள்ளை,

“ஸ்ரீமான் மு.மு.முத்திருளப்ப பிள்ளை” அவர்களுக்கு, இரண்டு மனைவிகள்,

மூத்தமனைவி,
ஸ்ரீமதி தெய்வயானை அம்மாள் அவர்களுக்கு,

1) மு.இராமசந்திர பூபதி பிள்ளை,
2) மு.துரைராஜூ பூபதி பிள்ளை என்ற இரண்டு ஆண் மகன்களும்,
3) ‎சரஸ்வதி என்ற ஒரு பெண் மகளும்,

இரண்டாம் மனைவி,
ஸ்ரீமதி வாலையம்மாள் அவர்களுக்கு,

ஒரே அருந்தவப்புதல்வராக,

ஸ்ரீமான் மு.இராமானுஜ பூபதி அவர்கள்,

ஜெய௵ (1894) ஆடி௴ 25௳ புதன்கிழமை விசாக நட்சத்திரம் கன்னியாலக்னத்தில் உதித்தார்.

இவருடைய முன்னோர்கள், பொக்கிஷம், மந்திரி பிரதானி வேலைகளிலிருந்த படியால் இவர் குடும்பத்தாருக்குப் “பிள்ளை” பட்டம் மருவிற்று. இவர் முன்னோர்களைப் பற்றி, “கான்சாகிப் சண்டை” என்ற புத்தகத்திலும், “ராஜராம் ராயர் மானி” நூலிலும் விபரமாய் தெரியலாம்.

இவர்களின் குலதெய்வம்,
மூக்கையூர் (சாயல்குடி அருகாமையில் உள்ள ஒரு கடற்கரை கிராமம்)
அருள்மிகு முத்திருளப்பசாமி ஆகும்.

இக்குடும்பத்தினர் முத்திருளப்பன், முத்திருளாண்டி என்ற குலதெய்வத்தின் பெயர்களை பரம்பரை பரம்பரையாக அடுத்தடுத்து தொடர்ந்து சூட்டிக் கொள்ளும் மரபு இம்மரபினர்களுக்கு உண்டு.

மேற்கண்ட முன்னோர்களின் சமாதி இராமநாதபுரம், “நீலகண்ட ஊரணி”யில் அமைந்துள்ளது.

மு.மு.முத்திருளப்ப பிள்ளை காசியில் சமஸ்கிருத கலாசாலையில் பத்தாண்டு கல்வி பயின்று சைவ சித்தாந்தம், வேதாந்த சாஸ்திரங்களைப் பயின்று சைவரானார். அன்று முதல் இவர்கள் குடும்பங்கள் பூராவும் சைவரானார்கள்.

இவர் தகப்பனார் மு.மு.முத்திருளப்ப பிள்ளையை பற்றி இந்தியன் லா ரிப்போர்ட்டுகளில் விவரமாய் காணலாம். இவரும் இளவயதிலேயே, தமிழ், ஆங்கிலம் இரு பாஷையிலும் கற்றுத்தேறியதுடன், புராண இதிகாசங்களையும், சோதிட சாஸ்திரங்களையும், செவ்வனே, பேராவலுடன் படித்தும், கேட்டும் அப்பியாசம் செய்தும் வந்தார்.

இவருடைய கல்வி அறிவு நுட்பங்களையும், குலம், குணம் முதலியவைகளையுங் கண்டு,

பாம்பன் சுவாமிகள் பரம்பரையில் வந்த பாம்பன் சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் மூத்த மகனும்,

சிவகங்கை ஜமீன் வக்கீலும்,
மதுரை ஜில்லா போர்டு உறுப்பினரும், சிவகங்கை தாலுக்கா போர்டு துணைத் தலைவரும், “இந்திரகுல ராஜவம்ச அகம்படியார்” டிஸ்டிரிக்ட்டு சபைப் பிரஸிடெண்டும், தமிழபிமானியும், சீமானும், சிவநேசச் செல்வரும்
ஆகிய மகா-௱-௱-ஸ்ரீ, ஸ்ரீமான்
“எஸ்.சீனிமுருகு பிள்ளை” அவர்கள்
தன் அருந்தவப் புதல்வி,
ஸ்ரீமதி வேலு லெட்சுமி அம்மாளை, மு.இராமானுஜபூபதி பிள்ளை அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

இளமையில் விவாகம், உயர் தரப் படிப்புக்கு அனர்த்தமாயிற்று. இவர் மூன்று பெண் குழந்தைக்கும், ஓர் ஆண் குழந்தைக்கும் (ஆண் குழந்தை பிறந்த
6 மாதத்தில் மறைவு) தந்தையானார்.

அரசாங்கத்தாரிடம் பிரபல உத்தியோகங்கள் வகித்து வரும் நாளில் இவருடைய பின்னோதரர் எம்.துரைராஜூவின் விவாக சம்பந்தத்தால் நேர்ந்த மனத்தாங்கல்களால், சொத்து சுதந்தரங்களையும், ஆஸ்தி பூஸ்திகளையும் மனைவி, மக்களையும் துறந்து, திடும்மென யாருமறியா வண்ணம் மலாய் (மலேசியா) நாடு போந்தார். இவரது பிரிவாற்றாது இவரது மனைவியார் உயிர் நீத்தனர்.

இவரது மூத்த பின்னோதரர், ஸ்ரீமான்
மு.இராமச்சந்திரபூபதி பிள்ளை அவர்கள், அரசு கூட்டுறவு சொசைட்டி டெப்டி ரிஜிஸ்டராக பணியாற்றினார். மேலும் சென்னை மாகாண அமுடையார் மகாசன சங்கத்தின் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் தலைவராக (1926-1941) செயலாற்றினார்.

சுருங்கக் கூறில் இவர் ஒரு பிரபல குடும்பத்தைச் சார்ந்தவரே யாவர்.

மலாய் நாட்டில் தாமதிக்கப் பிரமேயமில்லையாயினும் பூர்வ ஜன்மாந்திர கர்ம வசத்தால் இவணிருப்பதாய் கூறுகிறார். இவர் இம்மலாய் நாட்டில் சோதிடத்தை ஆங்கிலம், தமிழ் (Eastern as Well as Western) இருவகையிலும் கற்றிருக்கிறபடியால் இவரிடம் ஆங்கிலேயர், சட்டைக்காரர், சீனர், மலாய்காரர், யாழ்ப்பாணிகள், செட்டிப்பிள்ளை, துலுக்கர்கள் முதலான இந்திய மக்கள் பலரும் சோதிடம் கேட்டின்புறுகின்றார்கள். இவர் ஈஸ்வர பக்தியும், கடவுள் வணக்கமும், சர்ச்சனர் உறவும், ஆசார ஒழுக்கமும், உள்ளதை உள்ளபடி ஒழியாமல் துணிந்து பலன் சொல்லும் ஆற்றலும் பணம் பெரிதும் பாராட்டாமல், சிரத்தை காட்டுவதாலும் விசேடவாக்கு வல்லபம் உள்ளவராகவு மிருப்பதினால் இவரிடம் பிரபல உத்தியோகஸ்தர்களும் வியாபாரிகளும், சகல வகுப்பினரும் பலன் கேட்டு செளகரியமடைகின்றார்கள்.

இவரை நான் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த போது வியாள மஹாதிசையில் புதன் புத்தியில் ஒரு நூல் வெளியிடுவேனென்று சொன்னதுடன் 1936 – ல் என் கைரேகைகளை பரிசீலனை செய்து 1937-ல் நிச்சயம் ஒர் நூல் எம்மால் வெளிவருமென்று வற்புறுத்திக் கூறினார்.

இவர் சொல்லும் பலன்கள் சரியாகவும் உண்மையாகவும் இருப்பதாக பலர் சொல்லவும் நாம் கேள்விப்படுகிறோம். நான் நேரில் பல கால் சம்பாஷனை செய்து பார்த்ததிலும் போதிய சோதிட ஆராய்ச்சி உள்ளவரென்றே தீர்மானித்தனம். இவர் வெகுஜன உபகாரியாகவும், தன் காலத்தையும் வருவாயும், பெரும்பாலும் சத்விஷயங்களில் செலவு செய்து வருவதாகவும் கேள்விப்படுகிறோம்.

மு.இராமானுஜ பூபதி – வேலு லெட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மூன்று பெண் மகவுகள்,

1) தங்கவேல், (மகள்),
(க/பெ.K.சுப்ரமணியன்).

௸ தாரர்கள் வாரீசு,

K.S.இராசேந்திரன் (பேரன்),
இரா.இந்திரா (மனைவி).

௸ தாரர்கள் வாரீசு,

திருமதி. இரா.தனபாக்கியம் (கொள்ளுபேத்தி)
(க/பெ S.இராமசாமி)

இவ்வம்சாவழியினர் மதுரையில் வாழ்கின்றனர்.
——————————-
2) இரத்தினம்மாள், (மகள்)
(க/பெ.V.சுப்ரமணியன்)

௸ தாரர்கள் வாரீசுகள்,
(பேரன், பேத்திகள்)

1) சு.சண்முகநாதன்,
2) ‎கி.உமாராணி,
3) ‎சு.இராதாகிருஷ்ணன்,
(வேளாண்துறை – ஓய்வு)
4) ‎சு.இராமானுஜ பூபதி,
5) ‎சு.சுந்தரராசன்,
6) ‎சு.சந்தானலெட்சுமி,
(இளம் வயதில் மறைவு, திருமணம் ஆகவில்லை)
7) ‎மு.கெளசல்யா,
8) ‎போ.மல்லீஸ்வரி,
9) ‎சு.நித்தியானந்தம், (கால்பந்து வீரர்)
(உதவி பொறியாளர்-BHEL) திருச்சி).

இவ்வம்சாவழியினர்,
ஈரோடு, சென்னை,திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.
———————————
3) கிருஷ்ணவேணி (மகள்),
க/பெ சீ.சிங்காரவேலு
(சு.சீனிமுருகு பிள்ளை மகன்).

வாரீசு இல்லை.
—————————–
ஸ்ரீமான் மு.இராமானுஜ பூபதி பிள்ளை அவர்கள், 04-08-1962 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இராமேசுவரத்தில் தனது மூன்றாவது மகள் கிருஷ்ணவேணி இல்லத்தில் காலமானார்.

சான்றாதார ஆவணங்கள், நூல்கள்.

1) பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளை அவர்களின் குடும்ப வரலாறு,
ஓலைசுவடி ஆவணங்கள்.

2) கொடிவழிப் பட்டியல்,

(ஓலைசுவடி ஆவணமும், கொடிவழி பட்டியலும் மு.இராமச்சந்திரன் பூபதி பிள்ளையின் மகன் இரா.தசரதன் (டெப்டி கலெக்டர்-ஓய்வு) அவர்கள் வசமிருந்தும்,

திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் இராமானுஜபூபதி பிள்ளை அவர்களின் பேரன் நித்தியானந்தம் அவர்களிடம் இருந்து கிடைத்தது).

3) பொக்கிஷம் முத்திருளப்ப பிள்ளை அவர்களின் பூர்வீக சொத்து பாகப்பிரிவினை செய்து கொண்ட சொத்துப் பத்திரம் (1921) நகல்,

3) TAMIL NADU DISTRICT GAZETTEERS
RAMANATHAPURAM,
Dr.A.RAMASWAMI,
GOVERNMENT OF TAMIL NADU, 1972.

4) தெரிந்ததும் தெரியாததும்,
தொகுதி -2, குமர.ராசப்பா,
எழில் ராஜ் பதிப்பகம், காரைக்கால்.
(பக்கம்: 39-51)

5) மலேசியா இதழில் இருந்து வெளியிடப்பட்ட இவரைப் பற்றிய சிறு வரலாற்று குறிப்புதான் இந்த கட்டுரையின் பகுதி,
பக்கம் : IX – XI, புகைப்படம்.
(எந்த ஆண்டு வெளியிடப்பட்டது என்ற முழுவிவரம் கிடைக்கவில்லை)

இராமானுஜ பூபதி அவர்களின் பேரனான K.S.இராசேந்திரன் அவர்களின் மகள்,
திருமதி.இரா.தனபாக்கியம் அவர்கள் வீட்டில் இருந்து எனக்கு கிடைத்த சில ஆவணங்களில் இதுவும் ஒன்று.

6) பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வழிநடை சிந்து நூல் (1904).
————————————————
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.


இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?