பா.ஜ.கவின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் திரு. இராம்.சீனிவாசன் அவர்களை சந்தித்…

Spread the love
0
(0)

First
பா.ஜ.கவின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் திரு. இராம்.சீனிவாசன் அவர்களை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினோம்
—————————-
மாமன்னர் மருதுபாண்டியர்கள் குறித்து பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருபவர் தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை அண்ணன் திரு. வெங்கடேசன் Venkatesh Ogun அவர்கள், அவரும் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பில் நானும் (மு.சக்திகணேஷ்) பெயரில் பா.ஜ.கவின் மாநில பொது செயலாளர் பேராசிரியர் திரு. இராம்.சீனிவாசன் Raama Sreenivasan அவர்களை நேற்று (05-12-2023) காலை மதுரையிலே சந்தித்தோம்.

அவரிடம் அண்ணன் திரு. வெங்கடேசன் அவர்கள் பிஜேபி மாநில தலைமை, டெல்லி தலைமை மற்றும் அமைப்புகளிடம் மருதுபாண்டியர்கள் நினைவை போற்ற பலமுறை மனுக்கள் செய்துள்ளதாகவும் ஆனால் பாஜக கட்சியினர் மற்றும் தலைவர்கள் எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை ,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற வருத்தத்தை ஆழமாக பதிவு செய்தார்.

அதற்கு பேராசியர் அதில் உள்ள சாதக ,பாதங்கள் போன்றவற்றை கூறினார்.

அதன் பின் மருதுபாண்டியர்கள் குறித்து நம்முடன் ஆர்வத்துடன் பேசிய அவர் முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டார் .அதாவது மருதுபாண்டியருக்கு முன்னரும் சரி,பின்னரும் சரி விடுதலை போராட்டத்திற்கு போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களுக்கெல்லாம் மருதுபாண்டியர்கள் விடிவெள்ளியாக விளங்கியுள்ளனர்.
அதாவது சில மன்னர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் வெளியில் இருந்து வந்த ஆங்கிலேயர் வந்து வரிகேட்பதையும் ,அந்த பாளையங்களின் விசயத்தில் ஆங்கிலேயர் தலையிடுவதையும் எதிர்த்தனர் அதிவும் விடுதலை போரட்டம் தான் என்றாலும்

மருதுபாண்டியர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிக்காக மட்டும் போராடவில்லை, சம்பு தீவு என அழைக்கப்பட்ட அன்றைய பாரத தேசம் முழுவதும் உள்ள அனைத்து அரசர்களும் ,மக்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வேண்டும் என்று அழைத்தார். இதை மருதுபாண்டியர்கள் வெளியிட்ட விடுதலை பிரகடணம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. என்று கூறினார்.

எத்தனை உண்மையான வார்த்தைகள்! இதைத்தான் நாம் அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பலமுறை சொல்லிவந்துள்ளோம்!

பின்னர் பேராசிரியர் அவர்கள் மருதுபாண்டியர்கள் விடுதலை பிரகடணம் வெளியிட்ட திருச்சி பகுதியில் மருதுபாண்டியர்களின் விடுதலை பிரகடணம் நினைத்தூண் கோரிக்கையை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

அடுத்து அகமுடையார்கள் எப்படி வாக்களிக்கிறார்கள்? என்று என்னிடம் கேட்டார்!
அகமுடையார்கள் சில சாதிகள் போல பெரும் கூட்டமாக திரள்வதில்லை. ஆனால் வாக்களிக்கும் போது கட்சியை பின்னுக்கு வைத்து அவர்களுக்கு யார் நெருக்கமானவர்களோ அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள் குறிப்பாக அகமுடையார்கள் அதிமாக உள்ள பகுதியில் அகமுடையார்களுக்கே வாக்களிக்கிறார்கள் . அதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றேன். (இந்த மனப்போக்கை பயன்படுத்தியே அகமுடையார் தொகுதியில் மாற்று சாதிகள் அகமுடையார்களுக்கு உறவு சாதி என்று காண்பித்து ஒட்டு வாங்க முயற்சிக்கிறார்கள் என்பது அவரிடம் நாம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும் அது தான் உண்மை! ) ஆகவே அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அகமுடையார்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும்

பேராசிரியரிடம் பேசிய இன்னும் சில விசயங்களை அப்படியே நான் பொதுவெளியில் சொல்ல முடியாது சில கோரிக்கைகளை அவரிடம் மீண்டும் வலியுறுத்த இருக்கின்றோம்.

பேராசியர் ஏற்கனவே மருதுபாண்டியர் பற்றி சில முறை ஆனால் ஆழமாக உணர்ந்து பேசியுள்ளார் என்பதாலும், வேறு ஓர் தேர்தல் ஒட்டிய முக்கிய காரணம் உள்ளதாலும் இக்கோரிக்கையை அவர் வலியுறுத்துவார் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்!

மேலும் கோரிக்கை நிறைவேற்றுவது அவர்களது கட்சி வலுப்படவே உதவ போகிறது. அகமுடையார்களின் கோரிக்கைகளை எந்த கட்சி நிறைவேற்றுகிறதோ அந்த கட்சிக்கு அகமுடையார்கள் ஓட்டளிக்கப்போகிறார்கள்!

ஆம்! அதனால் தான் முதலிலேயே நான் சொன்னேன். சில சாதிகள் பெரும் கூட்டமாக திரள்வார்கள்! ஆனால் ஓட்டளிக்கும் போது சிறு சிறுவிசயங்களுக்கு முகங்கொடுத்து மாறிவிடுவார்கள்! ஆனால் அகமுடையார்கள் சிறு கூட்டமாக கூட கூடுவதில்லை. ஆனால் அவர்கள் ,தம் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு , தங்கள் சமுதாயத்திற்கு நன்மை செய்தவர்களுக்கு சரியாக வாக்குகளை செழுத்துகிறார்கள்!

மத்திய அரசாக இருந்தாலும் சரி,மாநில அரசாக இருந்தாலும் இதை கவனம் கொண்டு செயல்பட வேண்டும்!

நீங்கள் பெறப்போவது தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்தின் பெரும் ஆதரவை இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அகமுடையார் சமுதாயத்தின் ஒரு சில நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான்!

குறிப்பு:
நமது கோரிக்கைகளுக்காக பிஜேபியிடம் சென்று நாம் ஏன் கோரிக்கை வைக்க வேண்டும்? ஒருவேளை நீங்கள் பிஜேபியா என்று எண்ண வேண்டாம்! என்னை (அகமுடையார் ஒற்றுமை) பொறுத்தவரை கட்சி எல்லாம் முக்கியம் அல்ல!

நம்மை பொறுத்தவரை நமது சமுதாய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்! எவர் ஆட்சியில் இருக்கிறார்களோ அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி! அதை நாம் அங்கு வலியுறுத்துவோம். அது மாநிலம் நிறைவேற்றுகிற விசயம் என்றால் மாநிலத்தில் ஆளுகின்ற திமுகவிடமும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை என்றால் மத்தியில் ஆள்கின்ற பிஜேபி கட்சியிடம் தான் அந்த கோரிக்கையை வைக்க வேண்டும். அந்த எண்ணத்தில் கோரிக்கையை வைக்கின்றோம். எந்த கட்சி ஆண்டாலும் அவர்கள் ஆளுகின்ற கட்சியிடம் தானே கோரிக்கையை வைக்க வேண்டும்!

4000 வருடங்களாக ஆட்சி செய்த அகமுடையார் இனம்
——————————
முன்னதாக நிகழ்வுகளை பாஜக மாநில மகிளா மோர்ச்சாவின் செயலாளர்,நமது உறவினர் திருமதி Meenambigai Bjp அவர்கள் ஒருங்கிணைத்தார் ! அவர்களிடமும் அவர்களின் உடன் இருந்த கட்சியியினரிடமும் அகமுடையார் சமுதாயத்தின் வரலாற்றை பற்றி சற்று கூறினோம்.

மெளரியர்கள்,குப்தர்கள், குஷானர்கள் போன்ற இந்தியாவை ஆண்ட பேரசர்கள் பல இருந்தன ஆனால் அவர்கள் கூட தொடர்ச்சியாக நீண்டகாலம் ஆள முடியவில்லை .ஒரிரு நூற்றாண்டுகளே அவர்களால் ஆளமுடிந்தது மேலும் இன்று அவர்கள் வழியினர் இன்று எங்குமே காணப்படவில்லை.

ஆனால் 4000 வருடங்களுக்கும் மேலாக எழுதப்பட்ட வரலாற்றை இந்தியாவில் கொண்ட ஒரே இனம், அதுமட்டுமல்ல 4000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து கடந்து 80 வருடங்கள் முன்புவரை ஒர் இனம் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்ததென்றால் அது உலகத்திலேயே அகமுடையார் இனம் மட்டுமே!
அதுமட்டுமல்ல 4000 வருடங்களாக தொடர்ச்சியாக ஓர் இனம் வரலாற்றில் குறிக்கப்படிருக்கிறதென்றால் உலக வரலாற்றிலேயே அது அகமுடையார் சாதி தான் என்பதை சற்றே விளக்கமாக
கூறினேன். இதை பற்றி வரும்காலத்தில் விரிவாக ஆதாரங்களோடு அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிட உள்ளோம்!

நிக்ழ்சிக்கு ஏற்பாடு செய்த பாஜக மாநில மகிளா மோர்ச்சாவின் செயலாளர் ,அக்கா திருமதி Meenambigai Bjp அவர்களுக்கும் தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை ,அண்ணன் புல்வாய்க்கரை திரு .வெங்கடேசன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?