துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் ஓர் பிரிவே ———————————-…

Spread the love

First
துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் ஓர் பிரிவே
——————————————–
துளுவ வேளாளர் என்று அறியப்படும் சாதியினர் அகமுடையார் சாதியின் 13க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஓர் பிரிவு ஆகும்.

1300 வருடங்களுக்கு முன்பான உத்திரமேரூர் கல்வெட்டு தொடங்கி 100 வருடங்களுக்கு முன்பான கல்வெட்டு,செப்பேடுகள்,ஆவணங்கள் வரை தென் மாவட்ட அகமுடையார்களும், வடமாவட்ட அகமுடையார்கள் என அகமுடையார்கள் அனைவரும் அகம்படி என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட்டதையும் இவர்கள் அனைவருமே போர் தொழிலையே செய்துவந்தை கல்வெட்டு போன்ற முதன்மை வராலாற்று ஆதாரங்கள் மூலம் கண்ட அகமுடையார்கள் தாங்கள் ஒருவரே என்ற உண்மையை அறிந்துகொண்டார்கள்.

ஆனால் தென் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு துளுவ வேளாளரை என்ற அகமுடையாரின் பிரிவாக ஏற்றுக்கொள்ள இன்னும் சற்றே தயக்கும் . இதற்கு காரணம் அகம்படி என்றால் போர்குடி என்றும் துளுவ வேளாளர் என்றால் வேளாளர் என்றும் அவர்கள் சாதாரண விவசாய குடிகள் ,போர்க்குடிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என கருதுகிறார்கள்.

ஆனால் உண்மையில் அகமுடையாரின் ஓர் பிரிவாகிய துளுவ வேளாளர்களும் ,அகம்படியர்களின் அதே தொழில் பிரிவையே செய்துள்ளனர் என்பது 8ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் கழுகுமலை நடுகல் செய்தி மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

அதாவது இன்று
சென்னை பூந்தமல்லி முதலியார்கள் என்று அறியப்படும் துளுவ வேளாள முதலியார்களின் முன்னோர்கள் கழுகுமலை நடுகல் செய்தியில் “உள்வீட்டு கோயிற் சேவகர் தொழு சூரன்” என்ற அகம்படியர்களை குறிக்கும் அதே பெயராலேயே அழைக்கப்பட்டுள்ளனர் ..

அதாவது அரண்மனையில் ( உள்வீடு) பணியாற்றும் வீரர் சாதியை சேர்ந்த தொழுவீரன் பிரிவை சேர்ந்தவன் இந்த பூந்தமல்லி பகுதியை சேர்ந்த தொழுசூரன் என்பவன் ஆவான்.

ஆகவே கழுகுமலை கல்வெட்டு செய்தியின் மூலம் அகம்படியர்களை குறிக்க பயன்பட்ட அதே பெயரே இன்று துளுவ வேளாளர் என்று அறியப்படும் சாதியின் முன்னோனை குறிக்க பயன்பட்டுள்ளது அதுமட்டுமல்ல குறிப்பிட்ட வீரனும் அகம்படியர்களின் அதே போர் தொழிலையே மேற்கொண்டிருந்தான் என்பதும் , சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அந்த வீரன் 500 கி.மீட்டர் தாண்டி வந்து கோவில்பட்டி பகுடியில் நடந்த போரில் பங்கெடுத்து இறந்துள்ளான் என்பதை பார்க்கும் போது அவன் எப்படிப்பட்ட வீரக்குடியை சேர்ந்தவன் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல பாண்டிய மன்னனின் கோட்டை தளபதியான ரணகீர்த்தி என்ற பெருவீரன் ஒருவன் கோட்டையை பாதுகாக்கும் போரில் வீரமரணம் அடைந்தான் . தென் மாவட்டத்தை சேர்ந்த இவனும் முன்னர் சொன்ன தொழுசூரனை போல உள்வீட்டு சேவகன்(அரண்மனையை சேர்ந்த போர்வீரன்) என்றே அழைக்கப்பட்டுள்ளான். பூந்தமல்லி தொழு சூரனும், தென்மாவட்ட ரணகீர்த்தியும் ஒரே சாதியின் இரு பிரிவை சேர்ந்தவர்கள் இவர்கள் தோளோடு தோள் நின்று பாண்டிய மன்னனுக்காக போர்புரிந்து இறந்துள்ளார்கள்.

இந்த வரலாறெல்லாம் புரியாமல் இந்த அகமுடையார் இனம் தங்கள் ஒரே சாதிக்குள்ளே பட்டங்களால் பிரிந்து அறியாமையால் அழிந்து கொண்டிருக்கிறது.

நம் அறியாமையை பயன்படுத்தி சில வெள்ளாட்டு கூட்டம் நம் சொந்த உட்பிரிவான துளுவ வேளாளர்களை நம்மிடம் இருந்து பிரித்து தங்கள் சாதி என சொல்லி ஒரு பக்கம் வெள்ளாட்டு கூட்டம் நமக்குள்ளேயே பிரிவினையே ஏற்படுத்த பார்க்கிறது.

மற்றொரு பக்கம் திருட்டுக்கூட்டம் ஒன்று நம் கூடவே உறவு போல் உறவாடி நம் சொந்த சாதிக்குள்ளேயே பகைமையை ஏற்படுத்தி நம் பிரித்தாண்டு , அரசியல் போன்றவற்றில் நம்மை ஏமாற்றி நம் தோளில் ஏறி சுகமாய் சவாரி செய்கின்றது.

ஒருபக்கம் வஞ்சகமான வெள்ளாடுகள், மற்றோரு பக்கம் உறவாடி கெடுக்கும் திருட்டு கூட்டம்! இதற்கு இடையில் பரிதாபமாக பலியாகும் அகமுடையார் இனம்!

சொந்த சாதி பிரிவையே வேறு சாதி என நினைக்கும்,மறுக்கும் அவலம் இந்த அகமுடையார் சாதியில் மட்டுமே நடப்பதினால் தான் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருந்தும் அரசியல் போன்ற தளங்களில் நாம் புறக்கணிக்கப்படுவதோடு தொடர்ந்து பல அநீதிகள் இந்த சமுதாயத்திற்கு நடந்து வருகிறது… ஓற்றுமையாக இல்லையேல் அழிந்து மண்ணாக போவது உறுதி. இனியாவது ஒற்றுமயாவோம்! இனியும் இந்த அநீதிக்கு அகமுடையார்கள் துணை போகாதீர்கள்! அகமுடையார் பேரினமாக ஒன்றினையுங்கள்!

குறிப்பு:
பூந்தமல்லி தொழு சூரனின் கழுகுமலை கல்வெட்டை இதுவரை பார்க்காதவர்கள். கீழே லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.பாருங்கள்!

https://www.facebook.com/891728770860514/posts/5265874966779184

இந்த ரணதீரன் பற்றிய நடுகல் கல்வெட்டு செய்தி விரைவில் தனிப்பதிவாக ஆதாரங்களுடன் விரிவாக பதிவு செய்யப்படும்!

#துளுவவேளாளர்
#துளுவவெள்ளாளர்
#துளுவர்
#துளுவன்
#தொழுவவேளாளர்
#தொழுவவெள்ளாளர்
#துளுவமுதலியார்
#துளுவபிள்ளை
#துளுவநாயக்கர்
#thuluvavellalar
#thuluvan
#thuluvar
#thuluvamudaliar
#thuluvapillai




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo