First
மஹாபலி வாணாதிராயர் அகம்படியர் சாதியினரே – வேலியர்க்கோன் திறற்கம்பன் வீதிவிடங்கன்
———————-
குடியாத்தம் பகுதியில் கிடைத்த கி.பி 719 ம் ஆண்டு காலத்திய கல்வெட்டு செய்தியில் ஶ்ரீமகாபலி வாணராயர் அரசர் வாயிற்காவலனாக (ப்ரதிஹாரீ) இருந்த மஹா பலி குலத்தில் பிறந்தவர் என்கிற செய்தி குறிப்பிட்டுருந்ததை எடுத்துக்காட்டினோம்.
ஆதாரம்:
தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 3, பக்கம் எண் 90-92
ஒருவேளை இதை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இதை பார்க்க முடியும்.
https://www.facebook.com/100063919813164/posts/470780361729287
சரி சோழர் அரசர்களுடன் திருமண உறவு கொண்டு சங்க காலம் முதல் புகழ் பெற்று விளங்கும் வாணர் குலம் ஏன் தங்களை வாயிற்காப்போன் என்று சுருக்கிக்கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் ,குடியில் எண்ணிக்கை பெருகும் போது அந்த மன்னர் சார்ந்த குடியினர் வேற்று அரசர்களுக்கும் சென்று பணிபுரிய துவங்குவர். அப்படி அகம்படியர்களின் ஒரு பிரிவாகிய அகம்படியர்கள் பாண்டியர்,கங்கர் உள்ளிட்ட தங்கள் இனம் சேராத அரசர்களிடமும் மெய்காவல் ,தளபதிகள்,படைவீரர் என்று பணிபுரிந்துள்ளார் என்பதோடு திருமண உறவும் கொண்டிருந்தார்கள்.
அப்படி பணிபுரிந்ததால் இதுவே தங்களுடைய அடையாளமாக பின்னாளில் இவர்கள் கொண்டனர்.
சோழர் ,வாணர் போன்ற அரசகுடியை கொண்டிருந்த
அகம்படியர்களை அவர்கள் செய்த தொழிலை வைத்து அடையாளம் கொண்டு எப்படி பின்னால் வந்த இலக்கிய ஆசிரியர்கள் மெய்காவல் என்றாலே அகம்படியர் என்று பயன்படுத்த ஆரம்பித்தார்களோ, , மானுடவியல் ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்களால் இது எடுத்தாளப்பட்டதோ அதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது இந்த வாணாதிராயர்களின் சாசனங்கள் எனலாம்.
இதை இன்னோரு நாள் விரிவாக பேசலாம்.
எது எப்படியோ! மாவலி வாணாதிராயர்கள் ஆரம்பம் முதலே தங்களை அகம்படியர் என்று தெளிவாக அறிவித்துள்ளனர் பின்னாளும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இக்கட்டுரையில் நாம் பார்க்கவிருப்பது இந்த செய்தி அல்ல.
மாறாக மற்றோரு சாசன செய்தியாகும்.
இக்கல்வெட்டு தென் ஆற்காடு மாவட்டம் ,திருக்கோவிலூர் அருகே அமைந்துள்ள்ள கீழூர் எனும் ஊரில் உள்ள வீராட்டானேசுவர் கோவிலில் கிடைத்த கல்வெட்டு செய்தியாகும்.
இக்கல்வெட்டு செய்தியில்
“வேலியர்கோன் திறற்கம்பன் வீதிவிடங்கன்” கோவிலுக்கு பொற்பூக்களை தானமாக வழங்கியதோடு இராஜ இராஜ சோழ மன்னனிடம் கோவிலுக்கு சில கோரிக்கைகளையும் வைத்தான் என்று அறிய முடிகின்றது.
ஆனால் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம். இந்த வீதிவிடங்கன் என்பவன் மற்றோரு செப்பேடு செய்தியில் குறிப்பிடப்படும் வீதிவிடங்கன் உபயகுலமாலன் இரவி என்கிற மஹிமாலைய வாணாதிராயர் என்பவனின் முன்னோனாவான் .
ஆதாரம் : சோழர் செப்பேடுகள், தஞ்சை பல்கலைக்கழகம் வெளியீடு
ஆகவே இந்த வேலியர்கோன் திறற்கம்பன் வீதிவிடங்கன் என்பவன் வாணாதிராயர் எனும் வாணர் குடியை சேர்ந்தவன் என்பதை அறியலாம்.
மேலும் இந்த வீதிவிடங்கன் வீராட்டானேசுவர் கல்வெட்டு செய்தியில் “வேலியர்கோன்” என்று அழைக்கப்படுகிறான். வேலி என்பது கோட்டையை குறிப்பதாகும். வேலியர்கோன் என்பதன் மூலம் இந்த வீதிவிடங்கன் வாணாதிராயன் என்போன் வேலியர் என்று கோட்டையை பாதுகாக்கும் குடிப்பிரிவனராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளான்.
இதை மறுபடி உறுதி செய்யும் சான்றாக இதே சாசனத்தின் கீழ்வரியில் “குலவேலி காவலான்” என்பதன் மூலம் கோட்டை காவல் செய்யும் குடியில் வந்தவன் என்பதை தெளிவாக பதிவு செய்கின்றான்.
கோட்டை பாதுகாப்பு பணியில் அகமுடையார்களே இருந்ததை பல்வேறு கல்வெட்டுக்களும் எடுத்துக்காட்டுகின்றன. பல்வேறு வரலாற்று அறிஞர்களும் இதை சுட்டுக்காட்டியுள்ளனர்.
இன்றும் கூட அகமுடையார் சாதியில் கோட்டைப்பற்று அகமுடையார்கள் எனும் பிரிவு விளங்கி வருவதை இதை எடுத்துக்காட்டும்.
அதே நேரம் பிரதிஹாரா என்ற வாயிற்காவலர் என்று மாபலி வாணாதிராயர்களை குறிப்பிடும் கல்வெட்டு செய்தியுடன் ஒப்பிட்டால் இச்செய்திகளை நாம் உறுதி செய்துகொள்ள முடியும்.
அதுமட்டுமல்ல
பாண்டிய மன்னரிடம் அதிகாரம் பதவியில் இருந்த பிள்ளையார் அவணி நாராயாண தேவன்
என்பவரும் இதே வாணாதிராயர் பிரிவை சேர்ந்தவர் இவரும் அகமுடையாரை குறிக்க பயன்படும் அகப்பரிவாரத்தார் என்று பிரான்மலை கல்வெட்டில் குறிக்கப்படுகின்றார். இவர் மற்றோரு கல்வெட்டு செய்தியில் வாணனார் வழுதி நாராயண தேவர் என்றும் திருநட்ட பெருமாள் எனும் சுந்தரபாண்டிய வாணவதரையர் மகன் என்பதாலும் இவர் வாணர் குலத்தவர் என்பதை அறிய முடியும்.
இந்த அவணி நாராயண தேவன் ,பாண்டிய அரசனின் சகோதரியை மணந்தவர் செப்பேடு மற்றும் கல்வெட்டுக்களில் பாண்டிய மன்னர்கள் இவரை மைத்துனன் என்று அழைத்துள்ளது தெரிகின்றது. பாண்டியர்களுடன் திருமண உறவில் இணைந்ததாலும் ,பாண்டிய நாட்டை வாணாதிராயர்கள் ஆண்டதாலும் வழுதி என்ற பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டனர்
ஆதாரங்கள்
தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7, கல்வெட்டு எண் 863
நூல்: சாசன செய்யுள் மஞ்சரி, பக்கம் எண்கள் 49-58
ஆசிரியர்: மயிலை.சீனி.வேங்கடசாமி
வாணாதிராயர்களின் தொடக்க கால சான்றுகள்ள் அனைத்தும் வாணாதிராயர்களை அகமுடையார்கள் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்-சில
—————–
உபயகுலமாலன் -பொதுவாக உபயகுலமாலன் என்பது இருகுலங்களுக்கு இடையில் நிகழ்ந்த திருமண உறவால் பிறந்தவர்களை குறிக்கும்.
சோழர்களில் குலோத்துங்கனை உயப குலம் என்று குறிப்பதை பார்க்கின்றோம். சூரிய குலமாகிய சோழ தாய்க்கும், சந்திரகுலமாகிய சாளுக்கிய தந்தைக்கும் பிறந்த குலோத்துங்கனை உபயகுலம் என்பதாக கல்வெட்டுக்களும்,செப்பேடுகளும் குறிப்பதை போல இந்த வீதிவிடங்கன் மஹாபலி வாணாதிராயரை உபயகுலம் என்று சாசனம் குறித்து நிற்கின்றது.
ஆனால் இந்த வாணாதிராயன் யார் யாருக்கு இடையில் பிறந்தவன் என்ற கேள்வி எழுகின்ற போது அதற்கு விடையாக மற்றோரு செப்பேடு துணையாக வருகின்றது.
விக்ரம சோழனின் செப்பேட்டு செய்தி ஒன்றில் இவன் ” இரவி என்கிற மஹிமாலைய வாணாதிராயன் ” என்று அழைக்கப்படுவதன் மூலம் இவன் சூரிய குலமாகிய சோழருக்கும் ,வாணர் குலத்திற்கும் பிறந்தவன் என்பதை அறிகின்றோம். இருப்பினும் இதை இன்னும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.
இன்னும் விரிவாக பேசுவதற்கு நிறைய விடங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளோம்.
ஆனால் நேரமின்மையால் இவற்றை விரிவாக பேசவும் கூடுதல் ஆதாரங்களை இணைக்கவும் முடியவில்லை.
கல்வெட்டு சம்பதமான பதிவிட்டு சில நாட்கள் ஆனதினால் இராஜ இராஜ சோழரின் சதய நன்னாளில் வரலாற்று செய்தி வெளியிட வேண்டுமென்பதற்காக இன்று செய்தி வெளியிடுகின்றோம். மற்றோரு நாளில் இதை விரிவாக பேசுவோம்.
அகமுடையார் என்ற சாதியில் சூரிய குலம் ,வாணர் என்ற குலங்கள் அரகுடியை வைத்து இருவேறு குலங்கள் இருந்துள்ளன. இதையும் மற்றோரு நாள் சான்றுகளுடன் விரிவாக பேசுவோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்