First
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிவந்தது- அகமுடையார் பேரினத்தார் சார்பாக நல்வாழ்த்துக்கள்
———————————
தமிழ்நாட்டில் வாழும் பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து
“தேவேந்திர குல வேளாளர்” என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,
பின் இந்தியாவின் மக்களைவை,மாநிலங்களைவை என
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ,பின் குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தது நீங்கள் அறிந்ததே!
இந்நிலையில் இந்த மசோதாவை தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதற்கான அரசானையை மே 17ம் தேதி மத்திய அரசு வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இனி குறிப்பிட்ட 7 உட்பிரிவினரையும் குறிப்பிடும் போது தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரிலேயே குறிப்பிட வேண்டுமாய் அகமுடையார் உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம்.
சுயமரியாதை வெளிப்பட, ஒற்றுமையாலும், தொடர்முயற்சியாலும் வென்ற தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு பழந்தமிழ் குடியாம் அகமுடையார் பேரினத்தின் சார்பாக மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்