First
#யாத்திசை திரைப்பட பரிதாபங்கள்
——————————-
பெரிய மலைகளோ ,காடுகளோ இல்லாத சோழ நாட்டில் எயினர் குடி இருந்தனராம்!
2 இலட்சத்திற்கு மேல் படைவீரர்கள் கொண்டிருந்த சோழர்கள் தங்கள் பகுதியில் இல்லாத காடுகளிலும் மலைகளிலும் பாண்டியர்களுக்கு பயந்து ஒளிந்து கொண்டார்களாம்? கொஞ்சம் கூட நியாயமே இல்லாம புளுகிறுக்கானுங்க!
இப்படி எத்தனையோ பரிதாபங்கள்! யாத்திசை திரைப்படத்தில்!
நான் படங்களை அடிக்கடி திரையரங்கு சென்று பார்ப்பது என்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அரிதாகவே திரையரங்கு சென்று பார்க்கிறேன்.
சரி தமிழில் வரலாற்று படம் வருகிறதே அதை ஆதரிப்போமே என்று திரையரங்கு சென்று பார்த்தேன்.
திரைப்படம் எடுப்பதில் பிரச்சனை (டெக்னிக்கல் சரியாக வரவில்லை) என்றால் பரவாயில்லை! திரைக்கதையே சரியாக இல்லையே! இதுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படமே பரவாயில்லை!
#யாத்திசை
மேலதிக தகவல்: சோழநாட்டில் எயினர்கள் தான் இல்லை.ஆனால் எயில் நாடு,எயிற்பட்டினம் என்பவை தொண்டைமண்டலத்தில் இருந்தன. இந்த எயில் என்பது அரண் அல்லது கோட்டையை குறிக்கும்.வாணாதிராயர்கள் ,சோழர் குடிகளின் அடையாளமாக இந்த எயில் திகழ்ந்தது. இவர்கள் பெயரும் இதில் இருந்தே உருவானது . கோவில்பட்டி நடுகல் குறிப்பிடும் அகமுடையாரின் துளுவ வேளாளர் வீரர் பிரிவும் இந்த எயில் சம்பந்தப்பட்டதே!! இதையும் பின்னர் விளக்குகின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்