திருமங்கலத்தின் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த எம் பாட்டனார் கம்பரன்பர் வே.இராசு சேர…

Spread the love

First
திருமங்கலத்தின் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த எம் பாட்டனார் கம்பரன்பர் வே.இராசு சேர்வை(அகமுடையார்) அவர்களின் நினைவுதினம் இன்று!
———————————————————————————————————————–
திருமங்கலத்தின் வைணவ அடையாளமாக விளங்கும் பெருமாள் கோவிலையும், காவல் தெய்வமான முனீஸ்வரருக்கும் நகரின் மையப்பகுதியில் கோவில் எடுப்பித்து இன்று திருமங்கலம் நகரில் தவிர்க்க முடியாத வழிபாட்டுத்தலங்களை உருவாக்கியவர்.

அதுமட்டுமல்லாது நகரின் வெளிப்புறத்தில் அமைதியாக இறைவனை வழிபட சிவலிங்கம் ,முருகன் சன்னதியுடன் செந்திலாண்டவர் என்ற பெயரில் அழகும் அமைதியும் நிறைந்த ஓர் கோவிலையும் அமைத்தவர்.

அதோடு நிற்காமல் இலக்கியப் பேரவை,கம்பன் கழகம் போன்ற தாய்மொழியாம் தமிழுக்காகவும் ,இறைப்பணிக்காகவும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை முன்னெடுத்து திருப்பணித் தென்றலென்றும் ,கம்பரன்பர் என்றும் பெரியவர்களால் அவர்களாலேயே பட்டம் பல பெற்றவர்.

இன்று தமிழகத்தின் வணிகத்தின் பெரும் பங்கையே கைப்பற்றி இருக்கும் நாடார்களின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்த நாடார்கள் உறவின்முறை அமைப்பிற்கு அடித்தளம் அமைத்த திருமங்கலத்தில் நாடார்களின் முக்கிய திருவிழாவான வைகாசித்திருவிழாவை மிஞ்சும் விதமாக
தனிமனிதனாக 12 நாள் திருவிழாக்களை நடத்தி அனைத்து சமுதாயத்தினரையும் கலந்து கொள்ள வைத்து பெரும் பொருள் வசதிபடைத்த நாடார்களையே வியப்பில் ஆழ்த்திய பெருமைக்குரியவர்(இது திருமங்கலத்தின் மிகவும் புகழ்பெற்ற நாடார் பிரமுகர் ஒருவரே என்னிடம் அடிக்கடி சொல்லுவது. )

இவ்வாறு பல்வேறு சாதனைகளைப் படைத்து பெரும் ஆளுமையாக திகழ்ந்த எம் பாட்டனார் கம்பரன்பர் வே.இராசு சேர்வை(அகமுடையார்) அவர்கள் இறைவனடியைச் சேர்ந்த 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

இவர் இறைவனடை சேர்ந்த பின் சமயப் பெரியோர்களின் வழிகாட்டுதல்படி இவரது உடல் சித்தர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டு செந்திலான்டவர் ஆசிரமத்தின் கிழக்குப் பகுதியில் நினைவாலயம் அமைக்கப்பட்டது.

புகைப்படங்கள்
1)நினைவு நாள் போஸ்டர்
2) 1981ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கம்பரன்பர் பட்டம்
3)மேற்குறியது பற்றிய அன்றைய நாளின் பத்திரிக்கைச் செய்தி
4)ஆதினம் அவர்களின் பாராட்டுதல்
5) 1980களின் இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில்
6)தாத்தாவுடன் எனது சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம்
7) சமாதியில் நினைவு நாள் படையலின் போது







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo