First
ஏறுதழுவுதலும் அகம்படியார்களும்
—————————————-
ஏறுதழுவுதலில் சமுதாயங்களின் பங்கேற்பு நீண்ட ஆராய்சிக்க்குரியது .காளைகள் சிந்து சமவெளிகாலத்திலேயே (5000 வருடத்திலேயே) போக்குவரத்திற்கு பயன்பட்டதாக சான்றுகள் உள்ளன.சிந்து சமவெளி என்பது முல்லை நிலமும்(காடும் ) இல்லாத மருதமும்( வயல்) இல்லாத ஒர் சமவெளிப்பகுதியாகும்(இந்நாகரீகத்திற்கு அறிஞர்கள் இட்ட பெயரே இதனை உணர்த்தும்) .இங்கு வணிகமே முக்கியத்தொழிலாக இருந்தது என்பதை எல்லா அறிஞர்களுமே ஒப்புக்கொண்டுள்ளனர். சிந்துசமவெளி குறியீடுகளில் அகம்படியினர் (அரசகுலத்தவர்) – என்ற குறியீடு கிடைத்துள்ளது.ஆகவே இதுவரை கிடைத்துள்ள குறிப்புகள் படி சிந்துசமவெளியில் வாழ்ந்தவ சமுதாயத்தினர் வணிகப் பெருமக்களும் (பொதுமக்கள்) , அரசகுலத்தவர்களான அகம்படியினரும் , இன்றைய விஸ்வகர்மாக்கள் எனும் ஆசாரிகளுமே ஆவர்.(இன்ன பிற சாதிகளும் இருந்திருக்கலாம் ஆனால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இன்னும் கிடைக்கவில்லை மேலும் சிந்துசமவெளி நாகரீகத்தில் சாதி அமைந்திருந்ததா என்பது ஆராய்சிக்குரியது ஆனால் தொழில் முறையில் அவர்கள் பிரிக்கபப்ட்டிருந்தனர் என்பது உறுதியாகும்.)
சிந்து சமவெளி குறியீடுகளில் நாம் ஏறுதழுவுதலில் காணும் திமிலுள்ள மாடுகள் காணப்படுகின்றன. ஏற்கனவே சொன்னது போல் சிந்துசமவெளி என்பது வணிக நாகரீகம் என்பதால் மாடுகள் அங்கு போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. வணிகர்கள் மாட்டுவண்டிகளைப் பயன்படுத்தி வணிகத்திற்கு செல்லும் போது அகம்படியினரே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்( இதற்கு சங்க காலம் முதலே இலக்கியம் ,கல்வெட்டு சான்றுகள் உள்ளன.) ஆகவே சிந்துசமவெளியில் காளைகள் அடக்குதல் நடைபெற்றிருந்தால் அதில் அகம்படியினரே முதற்கண் பங்கேற்றிருக்க வேண்டும்.
அடுத்து சிந்துசமவெளி நாகரீகம் அழிந்து தமிழர்கள் நகர்ந்து முல்லை நிலத்தில் குடியேறிய போது ஏறுதழுவுதல் ஆயர்களுக்காக மாறியதுஏனென்றால் அவர்கள் தான் மாடுகளை கால்நடைகளாக வளர்ப்பவர்களாக இருந்தார்கள் ஆகவே அதனை அடக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருந்தது.
அடுத்ததாக இந்த ஏறுதழுவ வேண்டிய அவசியம் ஆநிரை கவரும் கூட்டத்தினருக்கும் (இதில் பல்வேறு சாதியினர் அடங்கியிருந்தனர்) மற்றும் ஆநிரை மீட்பவர்களுக்கும் இருந்தது . ஆநிரை மீட்பிலும் அகம்படியினர் பெரும்பங்கு வகித்த காரணத்தினால் அகம்படியினர் குறிப்பிட்ட இக்காலத்திலும் ஏறுதழுவுதலில் ஈடுபட்டனர்.
ஏறுதலுவுதல் பிற்காலத்தில் விளையாட்டாக உருவடுத்த போது அதில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டனர். கால்நடைகள் செல்வம் என்ற நிலை பின்னாளில் குறைந்த போது ஆநிரை கவர்வது எனபது குறைந்தது அதனால் ஆநிரை மீட்பும் குறைந்தது அதனால் அகம்படியர்கள் ஏறுதழுவுதலைக் குறைத்துக்கொண்டனர்.
குறிப்பு
பெரும் அளவிலான ஆநிரை கவர்தல் என்பது பின்னாளில் ஒரிரு மாடுகள் என்ற அளவில் தனிப்பட்ட மனிதர்களின் மாட்டுத் திருட்டாக பின்னாளில் மாறிப்போனது.
அதன் பின் விவசாயத்தில் மாடுகள் பயன்படுத்தப்பட்ட போது விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு குடிகள் மாட்டை பழக்க வேண்டும் என்பதற்காகஏறுதழுவுதலைக் கொண்டனர்.
அதே போல் ஏறுதழுவுதலில் ஆயர்கள் எனும் கோனார்கள் இதில் குறைந்து போயினர் இதற்குக் காரணம் மாடுகள் செல்வம் என்ற நிலையில் இருந்து வெறும் உடமை என்ற அடிப்படையில் பின்னாளில் மாறிதுவே.விவசாய நிலம் குறைந்ததால் மாடுகளின் தேவை குறைந்தது , மாடுகள் வளர்ப்பதை விட ஆடுகள் போன்ற கால்நடைகள் வளர்ப்புக்கு கோனார்கள் மாறியதுமே ஆகும்.
கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் வரை ஏறுதழுவுதல் என்பது தேவைக்கான பயிற்சி என்று இருந்துவந்த நிலையில் பின் அது வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாக மாறிப்போனதை நாம் பார்க்க முடிகிறது.இன்று ஏறுதழுவுதல் போட்டியில் பல்வேறு சாதியினரும் பங்கேற்கின்றனர்.
மதுரையைப் பொறுத்தவரையில் அலங்காநல்லூர்,பாலமேடு,அவணியாபுரம் போன்ற பகுதிகளில் நடத்தப்படும் போட்டிகள் பிரபலமானவை. இவை தவிர்த்து சிவகங்கைப் பகுதியில் சிராவயல் மதுரை மேற்கில் செக்காணூரனி,கரடிக்கல் போன்ற பகுதிகளிலும் தமிழ்நாடு முழுவதும் ஏறுதழுவுதல் போட்டிகள் நடக்கின்றன. இன்று ஏறுதழுவுதல் நிகழ்வில் (அகமுடையார்கள்,முத்தரையர்கள், மறவர்,கள்ளர், பள்ளர்) போன்ற பல்வேறு சாதியினரும் பங்கேற்கின்றனர்.
குறிப்பு:
கமேண்டிற்காக எழுதப்பட்டது.மற்றொருநாள் இதனை விரிவாக சான்றுகள் இணைத்து முழுக்கட்டுரையாக வெளியிடுகிறேன்.
மேலதிக விவரங்கள் (ஒன்றிரன்டு மட்டும் இப்போது)
http://www.agamudayarotrumai.com/2710
அகமுடையார் ஜாப்ஸ் தளத்தில் நடைபெறும் வேலைகளில் கடந்த ஒருவாரமாக தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் அகமுடையார் ஒற்றுமை தளத்திற்குத் தேவையான வரலாற்று ஆய்வுக்கு நேரம் கிடைக்கவில்லை( மூன்று நாட்கள் மற்ற எல்லா வேலைகளையும் விட்டு தொடர்ந்து தேடினால் தான் புதிய கட்டுரைக்கான ஆரம்பத் தொடக்கப்பள்ளி கிடைக்கும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்) .விரைவில் தொடர்ந்து கட்டுரைகள் வரும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்