First
திருவிதாங்கூர்/திருவாங்கூர் அரசர்கள் அகமுடையார்களே-
—————————————————–
முதலாவதாக திருவிதாங்கூர்/திருவாங்கூர் அரசர்கள் அகமுடையார்களே என்பதற்கு நேரடிச் சான்றுகள்- வரலாற்றிஞர் சி.இராமசந்திரன் (இவர் பிராமணர்) எழுதிய நூல்களில் இருந்து!
அடுத்து திருவாங்கூர் அரசு சேர அரசர்களின் நீட்சியே (சான்றுகள்)
அப்ப மறைமுகமா சொல்ல வருவது என்ன? சேரர்கள்,திருவாங்கூர் அரசுகள் அகமுடையாருடையது(அகம்படியினர்)
என்ன ஒண்ணு! குறிப்பிட்ட ஆசிரியர் இன்றைய நாடார் சாதியினரின் வரலாற்றை தொடர்ந்து எழுதுபவர்.இவர் மட்டுமல்ல தசரதன் மற்றும் சமீபத்தில் இறந்து போன நெல்லை நெடுமாறன் போன்ற பல நாடார் சமுதாய எழுத்தாளர்கள் தொடர்ந்து அகமுடையார்(அகம்படியர்) வரலாற்றையே தங்கள் வரலாறு போல் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.அகமுடையார் வரலாறு தொடர்ந்து திருடப்படுகிறது.விரைவில் இதற்கு முடிவு கட்டப்படும்!
குறிப்பிட்ட இந்த நூலின் குறிப்புகள் நாடார் சம்பந்தமான வரலாற்று நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை(எதில் இருந்து எடுத்தாலும் உண்மை ,உண்மை தானே)
நூல் 1: வலங்கைமாலையும் சான்றோர் செப்பேடுகளும் ,பக்கம் எண் 161
நூல் 2 : சேதிராய நாடார்கள் பக்கம் எண்கள் 93 , 173,174
திருவிதாங்கூர் அரசர் சேர மரபினர் என்பதையும் சொல்லி ,திருவிதாங்கூர் அரசர்கள் அகம்படிய சாதியினர் என்று சொல்லிவிட்டு , அதே நூலில் சேரர் நாடார் சாதியினர் எனக் கூற முற்படுவது அவர்களுக்கே வேடிக்கையாக இல்லையா? கொடுமைடா சாமி!
அகமுடையார் வரலாறு நாடார் வரலாறு என்ற பெயரில் பெருமளவில் திருடப்பட்டுள்ளது.அது சரி சொத்துக்கு சொந்தக்காரன் சொத்தை பாதுகாக்காட்டி அடுத்தவன் திருடத்தான் செய்வான்! இவ்வாறான திருடப்பட்ட வரலாறுகள் தொடர்ந்து வெளிப்படுத்டப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்