இராவணன் அகமுடையாரே, அங்கம்போரா அகமுடையாரின் தற்காப்புக் கலையை, பலபிட்டியா கொடி அ…

Spread the love

First
இராவணன் அகமுடையாரே, அங்கம்போரா அகமுடையாரின் தற்காப்புக் கலையை, பலபிட்டியா கொடி அகமுடையார்களுடையதே
————————————-
ஏற்கனவே 600 முதல் 800 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பலபிட்டியா அல்லது பாலபிட்டியா பகுதியில் கொடியேறிய அகம்படியர்களின் கொடி பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தோம்.

அகம்படியர்களின் அரசான சோழர்களின் கொடியிலும் சரி அகமுடையார்களின் இலங்கை அரசுகளான கண்டி,கம்பளை ராச்சியங்களிலும் சிவப்பு மஞ்சளை தங்கள் குலச்சின்னமாக பயன்படுத்தி வந்ததையும் அதன்பின்னர் இலங்கையின் பலபிட்டியா கொடியிலும்
தொடர்ந்து பயன்படுத்தி வந்ததையும் ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளில் குறிப்பிடுருந்தோம்.

இந்நிலையில் சமீபத்தில் “இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு” என்ற பெயரில் நக்கீரன் இணையதளத்தில் வெளிவந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. இதில் இராவணனை சிங்கள மயமாக்கும் இலங்கையின் முயற்சி பற்றிய செய்திகளை விவாதித்துள்ளனர்.

இதில் குறிப்பாக இலங்கையை சேர்ந்த பேராசிரியர் மிராண்டோ ஒபேசேகர என்பவர் பல்வேறு செய்திகளை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்(பார்க்க இணைப்பு படம் 1)

இலங்கையை ஆட்சி செய்த இராவணன் அகம்படியர் சமூகத்தை சேர்ந்தவர் இவர்களின் வழியினரே அகம்படியார்கள்
அங்கம்போரா(அங்கப்போர்) என்ற தற்காப்பு கலையை உருவாக்கி வளர்த்தவர்கள் அகம்படியர்கள்

ராவணனின் வழித்தோன்றாலாகிய அகம்படியர்களை இலங்கையின் முதலாவது விஜயபாகு அரசர் தெற்கில் பலபிட்டிய பகுதியில் குடியேற்றினார் என்பதையெல்லாம் கூறியுள்ளனர்.

ஏற்கனவே இராவணன் அகம்படியர் என்பதையும், அங்கம்போரா அகம்படியர்களின் தற்காப்பு கலை என்பதற்கும் வீடியோக்களை வெளியிட்டிருந்தோம்

அதேபோல் பலபட்டியா பிரதேச கொடி ,அகம்படியர்களின் கொடி என்பதையும் கூறியிருந்தோம் இதையெல்லாம் உறுதி செய்யும் ஆதாரங்களாக இலங்கையின் பேராசிரியரின் கருத்துக்கள் அமைகின்றன

குறிப்பு:
இன்னும் எவ்வளவோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் வரும் காலத்தில் வெளியிடுவோம்

தமிழ்நாட்டில் இருந்து சென்ற அகம்படியர்கள் பிற்காலத்தில் இலங்கை பெண்களை மணந்து இன்று சிங்களர்களாக மாறி விட்டனர் இவர்கள் இன்று அகம்பொடி என்ற பெயரிலும் இலங்கையில் உள்ள ஹேவகமா எனும் பிரிவினராகவும் அறியப்படுகின்றனர்.

இலங்கை அரசு அகம்படியர்களை ராவணனின் வழியினர் என்றும் அங்கம்போர் தற்காப்பு கலையின் முன்னோர்கள் என்பதையும் பலபிட்டியா பிரதேசத்தை அகம்படியர்களின் பகுதி என்ற உண்மையை அடையாளம் காட்டுவதெல்லாம் சரி!

ஆனால் அகம்படியர்களாக இருந்து சிங்கள பெண்களை மணனந்து இன்று
சிங்களர்களாக மாறிய அகம்படிய வழியினரை கைகாட்டி ஒட்டு மொத்த சிங்களரகளையே இராவணன் வழியினர் என்று மடைமாற்றி அதன் வழியாக சிங்களர்களை இலங்கையின் பூர்வ குடி என்று நிறுவப் பார்க்கிறது.

வரலாற்றை தெரிந்து கொள்ள நினைக்கிற மற்ற சிங்களர்களுக்கும் அகம்படியர் வழியினருக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

சோழர்,கண்டி,கம்பளை என அகம்படியர்களின் சிவப்பு மஞ்சள் கொடிகள் பற்றி ஏற்கனவே பதிவிட்ட லிங்க்:
https://www.facebook.com/100063919813164/posts/494782405995749




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. மிக்க மகிழ்ச்சி இரத்த உறவுகளுக்கு நன்றி

  2. தங்களுடைய கருத்தினை உற்றுநோக்கினால்,அகமுடையார்களை
    தோட்டக்காரா என கொங்கு பகுதிகளில் அழைக்கின்றனர்.
    எதனால் அப்படி அழைக்கின்றனரெனத் தெரியவில்லை.

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo