@followers அகமுடையார் சாதியின் அழிவிற்கு நாங்கள் உடன்பட முடியாது-அகமுடையார் சாதி…

Spread the love

First
@followers அகமுடையார் சாதியின் அழிவிற்கு நாங்கள் உடன்பட முடியாது-அகமுடையார் சாதி சான்றிதழ் உள்ள மணமகன் வீட்டார் மட்டுமே அகமுடையார்மேட்ரி வரன் பதிவுக்கு வாருங்கள்!
—————————————-
அகமுடையார் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அகமுடையார் சான்றிதழ் இல்லாமல் மாற்று சாதி சான்றிதழ் வைத்திருக்கும் மணமகன் வரன்களை அகமுடையார்மேட்ரியில் அனுமதிப்பதில்லை என்று ஏற்கனவே சில முறை கூறியிருந்தோம்.

எனிமும் தினமும் இதுபோல் சாதி சான்றிதழ் மாற்றிய 2 பேராவது நமது மேட்ரிமோனியில் பதிவுக்கு வருகிறார்கள்!

இன்று காலையில் கூட விருதுநகர் பகுதியில் இருந்து மணமகனின் தந்தை ஒருவர் பேசினார். அவர் தன்னை அகமுடையார் என்று நிருபிப்பதற்கு பெரிதும் முயன்றார். நிறைய விசயங்களை கூறி எங்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்

ஆனால் உண்மையில் நாங்கள் அகமுடையார் சாதி என்று சொல்லும் ஒருவரிடம் நீங்கள் அகமுடையார் என்று நாங்கள் ஏற்கவில்லை என்று சொல்லவில்லை!

நாங்கள் திருமங்கலம்(மதுரை) பகுதியில் வசிப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் அகமுடையார் சாதியினர் பலர் எம்பிசிக்காக மாற்று சாதி சான்றிதழை வாங்கி இருப்பதை நன்கு அறிவோம்.
ஆனால் இப்படி மாற்று சாதி சான்றிதழை வைத்திருக்கும் அகமுடையார்களை ஏற்க ஆரம்பித்தால் என்ன ஆகும்!

ஒரு சில தலைமுறைகள் கடக்கும் போது குறிப்பிட்ட பகுதியில் அகமுடையார் சாதியே இல்லாமல் அழிந்து போகும் நிலை ஏற்படும்!
அரசு ஆவணங்களில் குறிப்பிட்ட பகுதியில் அகமுடையார்கள் சிறுபான்மை இனமாக காட்டப்பட்டு அகமுடையார்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிமைகள் கிடைக்காமலே போகும்!

பணத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் மற்ற மேட்ரிமோனிகளை போல அகமுடையாரா என்று மட்டும் கேட்டுவிட்டு வரன் பதிவு செய்ய சொல்லி இருப்போம்.

ஆனால் அகமுடையார்மேட்ரி தொடங்கப்பட்டதே அகமுடையார்களை ஒருங்கிணைப்பதற்காகவே . இதில் வரன் பதிவதற்கான முதல் விதியே, அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்துள்ளவர்களை அனுமதிப்பது தான்! அப்போது தான் பல்வேறு பட்டங்களில் உள்ள அகமுடையார்கள் தாங்கள் அனைவரும் ஒரே சாதி சான்றிதழ் பெறுகின்றார்கள் என்ற உண்மையை அறிந்து தாங்கள் ஒரே சாதி என்பதை உணர்வார்கள்! ஒன்றுபடுவார்கள் என்பதற்காகத்தான்.

இதன் மூலம் பணத்தை துட்சமாக நினைத்து அகமுடையார்களை விழிப்புனர்வு அடைய செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு அகமுடையார்மேட்ரி செயல்படுகிறது .தொடர்ந்து செயல்படும்! அகமுடையார் சமூகத்தில் தொடர்ந்து விழிப்புனர்வு ஏற்படுத்த நம்மாள் ஆன முயற்சி இது. நாங்கள் மேற்கொள்ளும் எல்லா பணிகளிலும் அகமுடையார்களை ஒருங்கிணைப்பதற்கான ,விழிப்புனர்வு அடைய செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்!

ஆகவே இதை புரிந்துகொண்டு அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருக்கும் மணமகன் வீட்டார் மட்டும் அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவுக்கு வாருங்கள்!

வேண்டுகோள்
————
அகமுடையார்மேட்ரியின் உறுதியையும், முயற்சியையும் ஆதரிக்க விரும்பும் அகமுடையார் உறவுகள் பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தை உங்களுக்கு தெரிந்த அகமுடையார் குருப்கள்,உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

மேலதிக தகவல்
அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருக்கும் அகமுடையார் மணமகன்களை நாங்கள் அப்படியே ஏற்பது இல்லை. வரன் வீட்டாரிடம் பேசி அவர்கள் அகமுடையார் சாதியினர் தானா என்பதை கேட்டு உறுதி செய்துகொள்கிறோம்.

ஆகவே அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்ய மணமகன் அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருக்கவும் வேண்டும்+ அகமுடையார் சாதியினராகவும் இருக்க வேண்டும்.

பெண் வீட்டாரை பொறுத்தவரை பெண் வீட்டாரிடம் பேசி அவர்கள் அகமுடையார் சாதி சான்றிதழ் கேட்பதை கட்டாயமாக செய்வதில்லை. ஏனென்றால் மாற்று சமுதாயத்தினர் யாரும் தங்கள் வீட்டு பெண்ணை மாற்று சாதிக்கு கொடுக்க முன்வருவதில்லை.அதுவும் பெண் டிமாண்டாக இருக்கும் இந்த காலத்தில்.
மேலும் பெண்ணின் வீட்டில் மாற்று சாதி சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களை நாம் அனுமதிக்கா விட்டால் அவர்கள் தாங்கள் மாற்றியுள்ள சாதியில் சென்று திருமணம் செய்துவிட்டால் என்ன ஆவது? திருமணத்திலும் குழப்பம் ஏற்படும்!

இப்போது உங்களுக்குள்ளேயே ஓர் கேள்வி ஏற்படும். அப்படியென்றால் மாற்று சாதி சான்றிதழ் பெற்றுள்ள அகமுடையார் மணமகன்களும் மாற்று சாதியில் சென்று திருமணம் செய்துவிட்டால் என்ன ஆவது?
ஆனால் அதிர்ஷ்டவசமாக
எதிர்தரப்பினர் நம்மை போல் அவர்கள் ஏமாளிகள் அல்ல! பேசும் போது தான் எதிர் தரப்பினர் நாம் எல்லாம் ஒன்று பேசுவார்கள்! ஆனால் அவ்வளவு எளிதில் நம்மவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்! நன்றாக படித்து உயர்ந்த பதிவியில் உள்ள மணமகன் என்றால் மட்டும் கொடுக்க முன்வருவார்கள்!
மேலும் எத்தனையோ மேட்ரிமோனிகள் உள்ளன. அவர்கள் எங்கு சென்று வரன்களை தேடிக்கொள்ளலாம். இப்படி சொல்வதன் மூலம் அகமுடையார்மேட்ரி கண்டிப்புடன் நடந்து கொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அகமுடையார் சாதியை காப்பாற்ற நம்மால் ஆன முயற்சியை தீவிரமாக கடைபிடிப்போம். ஆம் வியாதிப்பட்டவர்கள் கசப்பு மருந்தை குடித்தே ஆகவேண்டும் அப்போது தானே நோய் குணமடையும். இதுவும் அகமுடையார் சமுதாயத்தை பிடித்திருக்கின்ற தீவிர நோய் போன்ற பிரச்சனை தான்.

வேண்டுகோள்
————
அகமுடையார்மேட்ரியின் உறுதியையும், முயற்சியையும் ஆதரிக்க விரும்பும் அகமுடையார் உறவுகள் பதிவில் இணைக்கப்பட்டுள்ள படத்தை உங்களுக்கு தெரிந்த அகமுடையார் குருப்கள்,உறவுகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. கள்ளர் மறவர் என்று இருக்கும் வறுமையிலும் நேர்மை dnt ககாக MBC vaangi வைத்திருப்பார்கள் தென் பகுதியில் இதுபோன்று நடக்கிறது வடக்கு பகுதியில் நாங்கள் மாற்றினோமா இல்லையே தென் தமிழகம் மட்டுமே இதுபோல் போனத் போகட்டும் இனிமேலாவது உருப்படி ஆகட்டுமேதமிழகத்தில் நாமே மக்கள் தொகை அதிகம் துழுவ பட்டம் பிள்ளை பட்டம் சீர்கருநீக r பிள்ளை பல பிரிவுகள் ஒழித்து ஒரே பிரிவாக மாற்றினால் மக்கள் தொகையில் நாமே அதிகம் முன்னெடுக்க வேண்டும் தலைவர்கள் வேலை வாய்ப்பு இல்லாததால் தானே sc சான்றிதழ் வன்னியர் சான்றிதழ்.சாதி மாறி நம் சாதியே அழிந்து போகும் அகமுடையார்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo