@followers மாற்று சாதியினரை அனுமதித்து டைவர்ஸ் வரை கொண்டு செல்லும் திருமண வரன் …

Spread the love

@followers மாற்று சாதியினரை அனுமதித்து டைவர்ஸ் வரை கொண்டு செல்லும் திருமண வரன் வாட்ஸ்அப் குருப்கள்
——————-
ஓரிருவருக்கு திருமண வரன் அமைவதை நம்பி 1000க்கணக்கானோர் தங்களும் வரன் அமையும் என்று நம்பி காலத்தை பொன்னான காலத்தை விரயம் செய்து ஏற்கனவே திருமண வயதை கடந்து விட்டவர்களின் வயதை இன்னும் அதிகப்படுத்துவதை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

இன்று நாம் பார்ப்பது வாட்ஸ் அப் குருப்களில் வரன் தேட நினைத்து மாற்று சாதியில் திருமணம் செய்து டைவர்ஸ் வரை சென்ற மணமகள் வீட்டார் ஒருவரின் அனுபவத்தை பற்றி.

சில நாட்களுக்கு முன்பு நமது அகமுடையார்மேட்ரிக்கு பெண் வீட்டார் ஒருவர் கால் செய்தார். தன் பெண்ணிற்கு டைவர்ஸ் ஆகிவிட்டதாகவும் வரன் தேடுவதாகவும் தெரிவித்தார்.

நம் பேச்சை கண்ட அவர் இன்னும் மேலும் தகவல்களை விவரமாக கூறினார்.

அவர்களின் பெண் நன்கு படித்தவர் 5 இலக்கத்தில் சம்பளம் வாங்குவர் ,நல்ல அழகான தோற்றம் கொண்டவர் ,நல்ல குடும்ப பிண்ணனி கொண்டவர் இவரது வரன் தகவலை குருப்பில் கண்ட மணமகன் வீட்டார் பெண் வீட்டாரை யோசிக்க விடாமல் நெருக்கடி அளித்து திருமணம் செய்தனர்.

திருமணத்திற்கு பின்பு ஒரு சில நாட்கள் தனிமையிலேயே இருந்துள்ளனர் பின்பே மணமகன் பெரும் பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்தவர் ,அதனினும் விட அதிர்ச்சி என்னவென்றால் மணமகனின் தந்தை மாற்று சாதியை சேர்ந்தவர் என்பதாகும்.

இதில் முக்கிய பிரச்சனையே இந்த மணமகன் வரன் தகவலை அறிமுகப்படுத்தி தங்களுக்கு தெரிந்த வரன் நல்ல வரன் என்று அறிமுகப்படுத்தியதே அந்த குருப்பை சேர்ந்தவர்கள் தானாம்.

ஆனால் திருமணத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மணமகன் வீட்டார் நீதிமன்றம் சென்று விவாகரத்து வழக்கு தொடுத்தனர். மணமகன் வீட்டாரிடம் அறுவை சிகிச்சை போன்ற பெரும் குறை இருந்ததால் அவர்களும் விவாகரத்தை வழங்கிவிட்டனர்.

ஆம் இந்த வாட்ஸ்அப் குருப்கள் எவ்வாறெல்லாம் சாதி குழப்பத்திற்கு வழிவகுத்து டைவர்ஸ் வரை திருமணங்கள் சென்று விடுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் தான்.

ஆனால் பல்வேறு குருப்களில் உறுப்பினராக உள்ள நாங்களே எல்லா வாட்ஸ்அப் குருப்களிலும் இது போல் மாற்று சாதியை சேர்ந்த வரன்களை கண்டுபிடித்து பல முறை பதிவிட்டவர்களை அங்கேயே கண்டித்துள்ளோம். இவ்வாறு அடிக்கடி சொல்வதால் வாட்ஸ் அப் குருப் நடத்துபவர்களே எங்களை எதிரி போல் நினைத்திருக்கவும் கூடும்! ஆனால் என்ன செய்வது! மற்ற விசயங்களில் கூட பொறுத்துப்போவதுண்டு!

ஆனால் வாழ்க்கையோடு விளையாடும் திருமண விசயங்களில் நாம் கண்டிக்காமல் இருக்கவே முடியாது! அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது ஒரு பக்கம்! சமுதாயத்திற்குள்ளேயே ஓர் குழப்பத்தை , பிரச்சனைகளை உருவாக்கி விடும் என்பதுவும் நாம் இதை கண்டிப்பதற்கு முக்கிய காரணம்.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு தான் நமது அகமுடையார்மேட்ரி-திருமண தகவல் மையத்தில் மணமகன் வீட்டாரிடம் சாதி சான்றிதழ் வாங்கி உறுதி செய்த பிறகு தான் வரன்களை பதிவு செய்கிறோம்.

திருமணம் செய்யப் போகும் வரன் வீட்டார் ஒருவரை ஒருவர் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத்தான் போகிறார்கள். ஆனால் மாற்று சாதியை சேர்ந்தவரை தெரியாமல் வரன் பார்ப்பதற்காக கூட வர சொல்லிவிடக்கூடாது என்பதற்க்காத்தான் நமது அகமுடையார்மேட்ரியில் அனைத்து மணமகன் வீட்டாரிடமும் சாதி சான்றிதழ் வாங்கி சாதியை உறுதி செய்துகொள்கிறோம். அவர்களிடமும் தனிப்பட்ட விவரம் கேட்கிறோம்!

தினமும் 3 முதல் 5 வரன்கள் இவ்வாறு மாற்று சாதியை சேர்ந்தவர்கள் அகமுடையார் சாதி போல் பேசியோ அல்லது தெரியாமலோ நம்மிடம் பதிவுக்கு வருகிறார்கள். இப்பதிவு செய்வதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட ஒருவர் பேசினார் .இது போன்ற மாற்று சாதியினர் தினமும் பேசுவதால் தான் இதை எச்சரிக்கை பதிவாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றியது வெளியிடுகின்றோம்.

சரி விசயத்திற்கு மீண்டும் வருவோம்!

பெயர் வாங்க வேண்டுமே என்று செயல்படும் வாட்ஸ் அப் குருப்களும் சரி,
பணம் மட்டுமே பிரதானம் என்று செயல்படும் மேட்ரிமோனிகள் எல்லா வரன் தகவல்களையும் உடனே அனுமதிக்கும் வேளையில் நமது அகமுடையார்மேட்ரியில் சாதி சான்றிதழ் வாங்கியும் மற்ற தகவல்கள் வழியாகவும் சாதியை உறுதி செய்யாதவரை வரன் தகவல்களை அப்ரூவ் செய்வதில்லை.

இதனால் தான் நமது அகமுடையார்மேட்ரியில் 500 க்கும் மேற்பட்ட மணமகன் வரன் தகவல்களை இன்று வரை நாங்கள் அப்ரூவ் செய்யவில்லை.

ஆரம்பம் முதலே சாதி விசயத்தில் சமரசமில்லாமல் போராடுகிறோம்! உங்கள் ஆதரவுடன். வெல்வோம் என்ற நம்பிக்கையோடு

அகமுடையார் ஒற்றுமை வழங்கும் அகமுடையார்மேட்ரி-திருமண தகவல் மையம்
வாட்ஸ்அப் எண்: 7200507629
வெப்சைட்: Agamudayarmatri.com
அப்ளிகேசன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www

வாட்ஸ் அப் குருப் நடத்துவோர்களுக்கு:
உங்களால் விசாரிக்க முடியாது. எங்களாலும் முடியாது எவராலும் முடியாது ஆனால் குறைந்தபட்சம் சாதி சான்றிதழ் பெற்ற பின்பாவது வரன் தகவலை அனுமதிக்க் கூடாதா???

ஆனால் பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலான இந்த குருப்கள் சம்பந்தப்பட்ட வரன் வீட்டாரிடம் வரன் தகவல்களை வெளியிட அனுமதி வாங்குவது கிடையாது. ஏதோ ஒர் குருப்பில் பதிவு செய்த தகவலை எடுத்து அந்த வரன் வீட்டாருக்கே தெரியாமல் இவர்கள் மற்றொரு குருப்பில் பதிவு செய்கிறார்கள். சில நேரங்களில் அந்த வரன் வீட்டாருக்கு திருமணம் முடிந்திருக்கலாம்.
இதை பற்றி ஒரு குருப் நடத்துபவர்களிடம் நானே கேட்ட போது அவர்கள் “நாங்கள் நல்லது தான் செய்கிறோம், வரன் வீட்டாரிடம் கேட்டு ஏன் நாங்கள் அனுமதி பெற வேண்டும்?” என்றார்கள்.

அவர்கள் நல்லது என்று நினைத்து செய்யும் விசயங்கள் பல நேரங்களில் குடும்பத்தில் டைவர்ஸ் போன்ற குழப்பங்களை உருவாக்கும் என்பதை தாண்டி சாதியிலும் பெரும் பெரும் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதை அவர்கள் அறிந்திலர் போலும்!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo