First
தேவர் அரசாணை என்பது மற்றவர்களை நம்முடன் இணைப்பது மட்டுமல்ல, அகமுடையார்களையே பிளப்பதற்கான சூழ்ச்சி! – அகமுடையார் சங்கங்கள் தூங்குகின்றனவா?
—————————————
தேவர் அரசாணை என்பதில் என்பது கள்ளர் மறவர் என்ற சம்பந்தமில்லாத சாதியினரை நம்முடன்(அகமுடையாருடன்) இணைக்க முயற்சிப்பது மட்டுமல்ல
அகமுடையார் இனத்தை இரண்டாக மூன்றாக நான்காக பிளக்கும் ஒர் சூழ்ச்சி ஆகும்!
எப்படி என்றால்
ஏற்கனவே புதுச்சேரியில் அகமுடையார் என்ற ஒரே பெயரில் இருந்த சாதி சான்றிதழை பிரித்து
புதுச்சேரியில் பூர்விகமாக வசிக்காத மிக மிக சிறுபான்மையினராக வசிக்கும் கள்ளர் மறவர்கள் தென் மாவட்ட அகமுடையார் தூண்டி விட்டு ,ஒன்றாக இருந்த அகமுடையார் சாதி பெயரை பிரித்து
தென் மாவட்ட அகமுடையார் என்று பிரித்து சம்பந்தமில்லாத கள்ளர் மறவர்களுடன் இணைத்து சாதி சான்றிதழ் வாங்க வைத்துவிட்டனர்.
ஆக தேவர் அரசாணை என்பது கள்ளர் மறவர்களுடன் சம்பந்தமில்லாத நம்மை (அகமுடையார்களை ) இணைக்க முயற்சி என்பதை தாண்டி நம் அகமுடையார் இனத்தையே கூறு போடும் முயற்சியாகும்.
இந்த ஆபத்தை அகமுடையார் முன்னோர்கள் பல காலம் எச்சரித்துள்ளனர்.
நாமும் இதை பற்றி கடந்த ஒரு வருடமாக எச்சரித்தோம். அதன் தொடர்ச்சியாக தேவர் அரசாணை நடைமுறை படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கிற்கு எதிராக அகமுடையார் சமுதாய இயக்கங்கள்,தனிமனிதர்கள் மனு அளிக்க கோரினோம்.
இதற்காக அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் எதிர்ப்பு மனு மாதிரி ஒன்றையும் வெளியிட்டார்.
ஆனால் இவ்வளவு செய்தும் பல அகமுடையார் இயக்கங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளன.
பொதுவாக அகமுடையார் இயங்கங்களை நான் விமர்சனம் செய்வதில்லை. ஏன் என்றால் மக்கள் பணி செய்வதில் பொருளாதாரம் ,நேரம் ,உழைப்பு போன்றவை தேவைப்படும்.சமுதாய மக்களும் திரண்டு ஆதரவளிப்பதில்லை.
ஆனால் அகமுடையார்களையே கூறு போட நினைக்கும் இந்த பெரும் ஆபத்தை புரிந்துகொண்டு அகமுடையார் இயக்கங்களால் ஒரு 100 ரூபாய் செலவழித்து ஒரு மனு அனுப்ப கூட முடியாதா?
பெரிய பெரிய வேலைகளை தான் செய்ய முடியாது! ஏன் என்றால் அதற்கு முன்னர் சொன்ன தடைகள் இருக்கும் .அதை நாமே பல தடவை சொல்லியுள்ளோம்!
ஆனால் அகமுடையார் இயக்கங்கள், சங்கங்களே!
இந்த அரசாணை ஆபத்து குறித்து உங்களால் ஒரு மனு அனுப்ப கூட முடியாதா?
இதை கூட செய்ய முடியாவிட்டால் நீங்களேல்லாம் எதற்கு???
அதேவேளை சமுதாய மக்களே! ஆகவே அகமுடையார் சமுதாய சங்கங்கள்,இயங்கங்கள் அனைவரும் இந்த தேவர் அரசாணை ஆபத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மற்றும் நீதிமன்றத்திற்கு மனு அளிக்க வேண்டும்!
மனு அளித்தவர்கள் அந்த மனுவை பொதுவெளியில் வெளியிட வேண்டும்!
இவ்வளவு பெரிய ஆபத்து குறித்து எச்சரித்தும் அதற்காக துரும்பையும் கிள்ளிப்போடாத அகமுடையார் சங்கங்களை அகமுடையார் மக்கள் புறக்கணிக்க வேண்டும்!
முன்னர் வெளியிட்ட எதிர்ப்பு மனு மாதிரி
https://www.facebook.com/100063919813164/posts/705369278270393
அகமுடையார் முன்னோர்கள் ஏற்கனவே செய்த எதிர்ப்புகள்
https://www.facebook.com/100063919813164/posts/4366530406713649
https://www.facebook.com/100063919813164/posts/704141348393186
https://www.facebook.com/100063919813164/posts/710222957785025
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்