தண்டநாயகன் சாமந்தனின் மகன் அகம்படியரான மாராண்டன் ——————————-…

Spread the love

First
தண்டநாயகன் சாமந்தனின் மகன் அகம்படியரான மாராண்டன்
————————————————-
முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு செய்திகளில் பல்வேறு சமூகத்தினரும் குறிப்பிடப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் உயர்வாகவும் சில இடங்களில் தாழ்வாகவும் குறிப்பிடப்படுவதை பார்த்துள்ளோம்.

ஆனால் தமிழ்நாட்டின் வேறு எந்த இனக்குழுவிற்கும் இல்லாத சிறப்பாக அகமுடையார் பேரினம் அனைத்திலும் மிக உயரிய இடத்திலேயே வைத்து போற்றப்பட்டுள்ளது கல்வெட்டுச்செய்திகள் வழியே அறியமுடிகின்றது.

தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற 10,000க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களை வாசித்த அனுபவத்திலும் அகமுடையார் பேரினத்தின் 100க்கு மேற்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ந்த வகையிலும் இதை நாம் உறுதியாக சொல்லமுடியும்.

அகமுடையார் பற்றிய கல்வெட்டு செய்திகள் பெரும்பாலும் கோவில் மற்றும் பொதுக்காரியங்களுக்கு தானம் அளித்த செய்திகளையோ , முதன்மை போர்வீரர்களாக,தளபதியாக படை நடத்தி சென்று பெற்ற
போர் வெற்றிச்செய்திகளையும் , கோவில்கள் ,இறை ஆலயங்கள், அரண்மனை கோட்டை கொத்தளங்களை பாதுகாவல் செய்தவற்றையும், ஆபத்து என்று வந்தவர்களுக்கு அபயமளிக்கும்
(ஆசிரியம்) உயரிய சத்திரிய தர்மத்தை பேணுபவர்களாகவுமே காட்டப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று நாம் காணப்போவதும் ஓர் முக்கியமான கல்வெட்டு செய்தியாகும்.

குறிப்பிட்ட இந்த கல்வெட்டு இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிகார்ஜுன துர்க்கம் எனும் ஊரில் உள்ள இயற்கை நீரூற்று அருகே உள்ள பாறையில் இக்கல்வெட்டு செய்தி காணக்கிடைக்கின்றது.

ஆதாரம் : மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கை ,வருடம் 1953-1956

குலோத்துங்க சோழனின் 32ம் ஆட்சி ஆண்டில் அதாவது
கி.பி 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சரியாக சொன்னால் விளம்பி வருடம் தை மாதம் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

இந்த கல்வெட்டுச் செய்தியில் இருவர் குறிப்பிடப்படுகின்றார்கள் ஒருவன் தனிநின்றுவென்ற முரிசைபிரான் இவன் குறிப்பிட்ட நிலத்தை தானம் அளித்துள்ளான். இரண்டாமானவனே இக்கட்டுரையின் நாயகன், மாராண்டான் எனும் அகம்படி இனத்தை சேர்ந்தவன் குறிப்பிட்ட ஊரில் மக்களுக்கு பயன்படும் வகையில் நீர்நிலை(குட்டை) ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்துள்ளான். இதுவே இக்கல்வெட்டுச்செய்தியில் உள்ள தானம் பற்றிய செய்தியாகும்.

ஆனால் கல்வெட்டில் உள்ள மற்ற வரிகளை பார்கையில் மேலும் சிறு தகவல்கள் அறிய வருகின்றது.அதாவது குறிப்பிட்ட இந்த மாராண்டான் என்பவன் தண்டநாயகன் சாமந்தரின் மகன் என்று கல்வெட்டு செய்தி குறிப்பிப்படுகின்றது. பொதுவாக சாமந்தர் என்பது படை தளபதிகளை குறிக்கும் அதே நேரம் தண்டநாயகன் என்பது தளபதிகளுகெல்லாம் தளபதியாகவும் , பல்வேறுபடைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்குபவரை குறிக்கும்.

ஆகவே இந்த கல்வெட்டு செய்தியின் மூலம் மாராண்டன் என்ற அகம்படியர் இனத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன துர்க்கம் எனும் ஊரில் பொதுமக்கள் ,கால்நடைகள் பயன்படும்படியாக நீர்நிலை ஏற்படுத்திய செய்தியை அறிந்து கொள்வதோடு இவர் சோழர்களின் தண்டநாயகாக விளங்கியவரின் மகன் என்பதைய்யும் அறிந்து கொண்டு பெருமையடைய முடிகின்றது.

நன்றி அறிவித்தல்
இச்செய்தியை கண்டறிந்து நாம் ஆராய அனுப்பிவைத்த அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

மேலதிக செய்திகள்
குறிப்பிட்ட இந்த நீர்நிலை இன்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது இந்த நீர்நிலையின் படத்தை இப்பதிவின் இணைப்பில் காணலாம்.

துர்க்கம் என்பது கோட்டையை குறிக்கும் கல்வெட்டு கிடைத்துள்ள மல்லிகார்ஜுன துர்க்கம் மலையால் அரண் செய்யப்பட்ட பகுதி என்பதாலும் மொழிப்பெயர் தேசத்தின் எல்லைப்பகுதி என்பதாலும் இப்பகுதியில் நிச்சயமாக இந்த கல்வெட்டு குறிப்பிடப்படும் காலத்தில் இப்பகுதியில் கோட்டையோ அல்லது போர்வீரர்கள் தங்கி பாதுகாக்கும் படைவீடோ நிச்சயம் இருந்திருக்க வேண்டும்

இக்கல்வெட்டின் நாயகன் மாராண்டான் என்பவனின் உண்மை பெயரே இதுதானா அல்லது ஆண்டறிக்கை செய்தியை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மாற்றி வெளியிடும் போது பெயர் உச்சரிப்பு மாற்றி எழுதப்பட்டதா என தெரியவில்லை.

அதே நேரம் இந்த கல்வெட்டு கிடைத்த மல்லிகார்ஜுன துர்க்கம் எனும் ஊரில் இருந்து 50 கீ.மீட்டர் தொலைவில் மாரண்ட ஹள்ளி(பள்ளி) எனும் ஊர் அமைந்துள்ளது ஆகவே இந்த கல்வெட்டுச்செய்தியின் நாயகன் இந்த ஊரை சேர்ந்தவனாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனினும் கல்வெட்டின் முழுவரிகள் கிடைக்கும் போது இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

குறிப்பிட்ட தர்மபுரி,கிரிஷ்ணகிரி ,தேன் கனிக்கோட்டை பகுதியில் இன்றும் அகமுடையார்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது பொதுவாக ஆண்டறிக்கையில் கல்வெட்டு பற்றிய குறிப்பு மட்டுமே இருக்கும் ..
ஆனால் கல்வெட்டின் முழுவரிகள் கிடைக்கப்பெறாததால் கல்வெட்டு பற்றி மேலும் வரலாற்று செய்திகளை அறிய முடியவில்லை. கல்வெட்டின் வரிகள் கிடைத்தால் குறிப்பிட்ட அகம்படியர் குறித்தும் கிருஷ்ணகிரி வாழ் அகமுடையார்கள் குறித்த வரலாற்று பார்வை தெளிவடையும்.

திரு.பாலமுருகன் அவர்கள் மைசூரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகம் சென்று இதுபோன்ற கல்வெட்டு வரி கிடைக்காத அகமுடையார் சம்பந்தமான கல்வெட்டு வரிகளை கேட்டு பெற்று வர பெறு முயற்சி செய்துவருகிறார். அதற்கு சமுதாய உறவுகள் அவரவருக்கு முடிந்த வகையில் உதவிட வேண்டும்.

இப்போது கிடைத்திருக்கும் செய்தியை வைத்து கூட இன்னும் அதிகம் வரலாற்று செய்திகளை குறிப்பிட முடியும் ஆனால் காலத்தின் அவசியம் கருதி இப்போது இக்கட்டுரையை இத்தோடு நிறைவு செய்கின்றோம்.

அகம்படி இனத்தவர்கள் போர்படைகளில் விளங்கிய பல்வேறு வரலாற்று செய்திகள் புதிய கல்வெட்டு வாயிலாக திரு.பாலமுருகன் அகமுடையார்கள் அவர்கள் கண்டறிந்து நம் ஆய்வுக்க்க்கு அனுப்பியுள்ளார் வரும் காலங்களில் அவற்றையும் ஆராய்ந்து வெளியிடுவோம்.

அதுவரை வணக்கங்களுடன்
மு.சக்தி கணேஷ்(அகமுடையார் ஒற்றுமை பக்கத்திற்காக)







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo