ஆளுமை ************* என்ற வினைச் சொல்லிற்கு ஆண், பெண் பாக…

Spread the love
0
(0)

First
ஆளுமை
*************
என்ற வினைச் சொல்லிற்கு ஆண், பெண் பாகுபாடில்லை என்பதை நிரூபித்த மருது குல மாதரசி !

மருதரசர்களின் வாரிசுகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல் பூண்டோடு அழித்தாலும், பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களால் பல்வேறு ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட, மருதரசர்களின் மாண்பு, வீரம், ஆளுமை, அரசாட்சி, கொடை, திருப்பணி, தியாகம் என சமூகம் அனைத்தையும் கொண்டாடினாலும், சந்தர்ப்பமும் சூழலும் அந்த மாபெரும் தேசியத் சிந்தனையாளர்களை சாதி எனும் குறுகிய வட்டத்திலேயே அடைத்து வைத்திருந்தது !

பொதுச் சமூகமும் அதையே விரும்பியது, மருதரசர்களின் வரலாறு அங்கீகரிக்கப்
பெற்றால் அகமுடையார் பேரினம் எழுச்சி பெறுவர் ! அகமுடையார் பேரினம் அரசியலில் எழுச்சி பெற்றால் மருதரசர்களின் பெரும் வீரவரலாறு வெளிப்பெற்று, இந்திய வரலாற்றையே மாற்றி எழுத வேண்டிய சூழல் ஏற்படும்!

ஆதலால், வெகு நுட்பமாக இரண்டையும் அடக்கியே வைத்திருந்தனர் !
சமூகம் ஒருங்கிணைந்த சிந்தனையின்றி இருந்ததால் எதிரிகளுக்கு அது சாத்தியமானது,சாதகமானது !

இந்த அவலங்களை கண்டு மனம் நொந்து,
ஒற்றை மனுஷியாய் களமிறங்கிய
திருமதி Radha Thevar மருதரசர்களின் வாழ்நாள் சாதனையான “ஜம்புத்தீவு பிரகடனத்தின்” பெயரிலேயே ஒருமித்த கருத்து கொண்ட நட்புகளை இணைத்து ஒரு குழுவை அமைத்து,
இந்த தேசமே மருதரசர்களின் வரலாற்றை, பேசும் பொருளாக மாற்ற உறுதி பூண்டார் !

இதற்காக மாதக்கணக்கில் திட்டமிட்டவர், மேதகு தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சூழலை விளக்கி,
மருதரசர்களின் வரலாற்று சம்பவங்களை சோ.பாலமுருகன் அகமுடையார் அவர்கள் திரட்டிய ஆவண கோப்புகளோடு சென்று முறையிட்டார்!

காலம் கனிந்தது, வரலாற்றை படித்த ஆளுநருக்கு வியப்பும், ஆச்சர்யமும் தொற்றிக் கொண்டது !
இந்த சரித்திர நாயகர்களை எப்படி தமிழகம் கொண்டாடாமல் போனது?
இவர்களுக்கு பெரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து சிறப்பிக்கிறேன் என பச்சை கொடி காட்ட…

களம் தயாரானது, நாளும் குறித்தாயிற்று முழுவீச்சில் செயல்பட துவங்கிய சகோதரிக்கு பல்வேறு இன்னல்கள், இடைஞ்சல்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி,
வெகு நேர்த்தியாக ஒரு பெரு நிகழ்வை, சமூகம் இதுவரை தந்திராத பெரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்!

நேர்மறையான பாராட்டுகளும், எதிர்மறையான விமர்சனங்களும் முன்னனி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகி, அவர் கண்ட கனவை நனவாக்கியுள்ளது!

மருதரசர்களின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் அக்கா!
உங்களுக்கு துணை நின்றதில் எங்களுக்கும் பெருமை !
உயர்ந்த கௌரவத்தையும் பெற்றோம்….

நன்றி!
Agamudayar Otrumai


இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?