இன்று(23-10-2023) அன்று காலை 12 மணி அளவில் திருச்சியில் கவர்னர் தலைமையில் நடைபெற்ற மருதுபாண்டியரின் விடுதலை போர் பிரகடனம் நினைவு விழாவில் சிறந்த சமூக செயல்பாடுகளுக்காக சேவா விருதினை கவர்னரிடமிருந்து
அகமுடையார் ஒற்றுமை தளத்தின் நிர்வாகியான நான் (மு.சக்திகணேஷ்) பெற்றுக்கொண்டேன். மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் பெயரால் விருது பெறுவது மிக்க மகிழ்ச்சி! நன்றி (கீழே புகைப்படங்கள்)
நிகழ்வை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் ,அக்கா திருமதி. ராதா அகமுடையார் உள்ளிட்டவர்களுக்கு முதற்கண் நன்றி!
திருச்சி நிகழ்விற்கு தங்கள் வாகனத்தில் இணைந்து செல்ல நல்ல முறையில் ஏற்பாடு செய்த தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை அண்ணன் திரு.இராஜேந்திரன் அகமுடையார், திரு. முத்துராஜா அகமுடையார் இதையெல்லாம் ஏற்பாடு செய்திருந்த அண்ணன் திரு. வெங்கடேஷ் அகமுடையார் (திருப்பரங்குன்றம்) அவர்களுக்கும் நன்றிகள்!
விழாவிற்காக காலை 5.30 மணிக்கு வந்து காத்திருந்து நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தம்பி வருண் அகமுடையார் அவர்களுக்கு நன்றிகள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்