First
குறிஞ்சி நிலத்தில் தோன்றிய சோழர் -சோழ ரகசியங்கள்
——————–
சென்ற பதிவில் வாணர் மற்றும் சோழர் தொடர்பை பற்றி பேசினோம். அதில் சோழர் என்போர் வாணர் எனும் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த அசுரர் குடிமரபில் இருந்து தோன்றியவர் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்திருந்தோம்.
இருப்பினும் சோழர்கள் குறிஞ்சி நிலத்தவர் என்று எப்படி சொல்கிறீர்கள் என இன்னும் சிலருக்கு சில சந்தேகம் வரலாம். அதிலும் குறிப்பாக இங்கு உள்ள பெரும்பாலானோருக்கு காவிரி பாயுந்த செழிப்புற செய்த தஞ்சை போன்ற ஆண்ட சோழர்களின் வரலாறே தெரியும் என்பதால் சோழர்களை ,வேளான்மையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றே கருதி வருகின்றனர். ஆனால் சோழர்களின் வரலாற்றை பின்னோக்கி சென்று பார்த்தால் அவர்கள் காவேரி பூம்பட்டினம்(புகார்) போன்ற கடல்நகரங்களில் அதற்கு முன் வாழ்ந்ததும் அங்கு சோழர்கள் வணிகர்கள் வணிகப்பாதைகளுக்கு பாதுகாவல் வழங்கியதையும், கடற்பயணத்தில் பாதுகாப்பு வழங்கியதையும், சுங்கவரி பெற்றதையும் பார்க்க முடியும்.
ஆனால் இதெற்கெல்லாம் பல காலம் முன்னால் அறியப்படாத சோழர் வரலாறு அதாவது சோழர்களின் தொடக்கம் பற்றி எவரும் பேசியது கிடையாது. அதைத்தான் முதன்முதலாக இங்கு வெகு சுருக்கமாக வெளிப்படுத்துகின்றோம்.
சோழர்களின் தோற்றம் என்பது குறிஞ்சி நிலத்தில் இருந்தே தோற்றம் பெற்றது. இதை வாணர் ,சோழர் தொடர்பிலேயே விளக்கியிருந்தோம். இருப்பினும் சோழர் குறிஞ்சி நிலத்தவர் என்பதற்கான ஆதாரத்தை இப்பதிவில் சுருக்கமாக காண்போம்.
மூவேந்தர்களுக்குரிய பெயர்களை இலக்கியங்களும் ,நிகண்டுகளும் உரைக்கின்றன.
அவ்வகையில் சோழர்களை குறிக்கும் போது என்னவென்ன பெயர்கள் குறிக்கப்படுகின்றன என பார்க்கின்ற போது:
தமிழில் உள்ள நிகண்டுகளில் காலத்தால் முந்தையது(.கி.பி 6ம் நூற்றாண்டு ) என கருதப்படும்
சேந்தன் திவாகரம் எனும் திவாகர நிகண்டு சோழமன்னர்களின் (கோச்சோழன் ) பெயர்களில் ஒன்றாக
நேரிவெற்பன் என்ற பெயரை குறிப்பிடுகின்றது.
ஆதாரம்: சேந்தன் திவாகரம் மூலபாடம் ,பக்கம் எண் 19
பார்க்க இணைப்பு: 1
குறிப்பிட்ட இந்த நேரிவெற்பன் என்பதன் பொருளை கவனித்தால்
நேரிவெற்பன்= நேரி( நேரி மலை) + வெற்பன்(குறிஞ்சி நில தலைவன்)
வெற்பன் என்பது குறிஞ்சி நிலத்தலைவன்
ஆதாரம்: ஆசிரியர் நிகண்டு ,பக்கம் எண் 206
பார்க்க இணைப்பு: 2
ஆகவே நேரிவெற்பன் என்பது
நேரிமலைக்குரிய குறிஞ்சி நிலத்தலைவன் என்பதாகும்.ஆகவே சோழர்கள் என்போர் குறிஞ்சி நிலத்தில் தோன்றிய குடியினர் என்பது புலனாகும்.
சோழர்களுக்கு பல்வேறு பெயர்கள் இருப்பினும் பெயரே காலத்தால் முந்தயது இது குறிஞ்சி நிலத்தின் பெயரால் அமைந்தது என்பதை கொண்டே இதை உணர்ந்து கொள்ளலாம்(ஐவகை நிலங்களிலேயே முதலில் தோன்றியது குறிஞ்சி தானே)
குறிப்பிட்ட இந்த நேரிமலை என்பது கேரளாவில் உள்ள நேரியமங்கலம் (Neriamangalam) மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளாக இருக்கலாம். தற்போது இவ்வூர் எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
சேந்தன் திவாகரம் போல் மற்ற நிகண்டுகளும் இதே கருத்தை கூறுகின்றன.
கி.பி 17ம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படும் ஆசிரிய நிகண்டு சோழர்களின் பெயர்களில் ஒன்றாக “நேரிவெற்பன்” பெயரை குறிக்கின்றது.
ஆதாரம்: ஆசிரிய நிகண்டு ,பக்கம் எண் 135
பார்க்க இணைப்பு: 3
இவ்வாறு பல்வேறு நிகண்டுகளிலும் உதாரணம் காட்டலாம்.
அதே போல் சோழர்களின் கொடியில் புலிவந்த காரணத்தையும் அதைவைத்தும்
சோழர்களின் குடித்தோற்றம் என்பது குறிஞ்சி நிலம் என்பதை உணரலாம்.
வாணர்கள் ஆண்ட பகுதியும் இதுவே. இந்த நேரிமலைக்கும் முன்பாக சோழர்கள் வாழ்ந்த இடம் பற்றியும் அதன் வழியாக அகமுடையார் தோற்றம்,, மரபு குறித்த பல செய்திகளை வரும் காலங்களில் இன்னும் விரிவாக விளக்குவோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்