மருதுபாண்டியர்கள் விருது ————————————————— சி…

Spread the love

First
மருதுபாண்டியர்கள் விருது
—————————————————

சிரம் கொடுத்தது சிவாலயம் காத்த
மருதரசர்களின் சிவத்தொண்டிற்கு கைமாறாக சிவத்தொண்டில் திளைக்கும் சிவபக்தர்களுக்கு ஆண்டுதோறும் மருதரசர்களின் திருப்பெயரால் மருதுபாண்டியர் விருது வழங்கி வரும் தொன்மையான மதுரை ஆதீனம் !

இந்த ஆண்டும், மதுரை ஆதீனத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜையை முன்னிட்டு,

நாளை 02/06/2023 – வெள்ளிக்கிழமை, மாலை 06.45 மணியளவில் நடைபெறும் இவ்விழாவில்,

நெல்லை மாவட்டம், அம்பை வட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த சித்தாந்த சைவ சுடர்மணி மீ.சிவசண்முகம் அவர்களுக்கு மருதரசர்களின் திருப்பெயரால் “மருதுபாண்டியர் விருதும்”, “பொற்கிழியும்” வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க அகத்தமிழ் உறவுகளை அன்புடன் அழைக்கிறோம் !

மேலும் சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக் குழு சார்பாக, மருதுபாண்டியர் விருது பெறும்
சித்தாந்த சைவச்சுடர்மணி சிவத்திரு. மீ.சிவசண்முகம் அவர்கள் கௌரவிக்கப் பெற இருக்கிறார் என்பதையும் நேசத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருப்பெயரால் ஆண்டுதோறும் விருதும், பொற்கிழியும் அளித்து மருதரசர்களின் புகழை சிறப்பிக்கும் மதுரை ஆதினத்திற்கும், ஸ்ரீ ல ஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்களுக்கும் அகமுடையார் பேரினத்தின் சார்பாக நன்றிகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மருதரசர்களின் உழவார திருப்பணியில்…

சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக் குழு, மதுரை.

தொடர்புக்கு :

94429 38890. 9842143888, 7010493288





இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. 🙏💐.இது போன்ற அரிய தகவல்களை தன்னை முன்னிலை படுத்தமால் வெளி உலகத்திற்கு கொண்டு வரும் தம்பி பாலா பணி சிறப்பு. மிக சிறப்பு.எம் மன்னரின் புகழ், நினைவை போற்றும் மதுரை ஆதினம் அவர்களுக்கு நன்றி🙏💐🙏நன்றி🙏. நன்றி🙏

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?